உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் கழிவறை அருகே புதிய டாஸ்மாக்:ஐகோர்ட் மதுரை கிளை கடும் அதிருப்தி!

பெண்கள் கழிவறை அருகே புதிய டாஸ்மாக்:ஐகோர்ட் மதுரை கிளை கடும் அதிருப்தி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: தேனியில் பெண்கள் கழிவறை அருகே புதிய டாஸ்மாக் அமைக்கப்படுவதைத் தடுக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை காட்டமான அதிருப்தியை தெரிவித்துள்ளது.தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் குமாரலிங்கம் ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அதில், பூதிப்புரம் ராஜபூபால சமுத்திர கண்மாய் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க திட்டமிடுவதாகவும், அந்த பகுதியில் பெண்கள் கழிவறையும், கண்மாய் கரைப்பகுதியும் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.மேலும், அங்கு ஏற்கனவே 3 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 4வதாக ஒரு கடை தேவை இல்லை என்றும், புதிய டாஸ்மாக் திறப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் 'குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதால் மட்டும் என்ன பயன்? தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளைக் குறைக்க வழியைப் பாருங்கள். அதை விட்டுவிட்டு கடைகளை அதிகரித்து வருகிறீர்கள். தற்போது மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் அருகில் கூட மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.' என்று அதிருப்தி தெரிவித்தனர்.தொடர்ந்து, பூதிப்புரம் கண்மாய் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kumar Kumzi
டிச 29, 2024 01:11

கேடுகெட்ட ஓங்கோல் விடியாத விடியல் பெண்கலின் கழிவறைக்குள்ளேயே டாஸ்மாக் வியாபாரத்தை விரிவுபடுத்துவான் போலருக்கே


அப்பாவி
டிச 29, 2024 00:10

சாதாரண டாஸ்மாக்கே கழிப்பறை ரேஞ்சில்தான் இருக்கு. அங்கே போய் குடிச்சிட்டு விழுந்து புரள்வான் அழுக்கு திருட்டு திராவுடன்.


theruvasagan
டிச 28, 2024 23:47

இதுக்கே அதிருப்தி ஆயிட்டா எப்படி. நாளைக்கு கோர்ட்டு வளாகத்தில் கூட கடை திறக்கிற நிலைமை வராது என்பது என்ன நிச்சயம்.


rama adhavan
டிச 28, 2024 22:02

கண்மாய் மற்றும் கழிவறையை மாற்றி விடுவார்கள் ஆனால் கடையை மாற்றவே மாட்டார்கள்.


அப்பாவி
டிச 28, 2024 19:13

கழிப்பறையிலேயே டாஸ்மாக்கும், பிரியாணியும் வித்தாலும் வாங்கி சாப்புடும் திராவிட கும்பல்.


பண்ணை ராஜா
டிச 28, 2024 19:13

திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று கேட்டீர்களே? இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இப்போது தெரிந்து கொள்ளுங்கள். இப்படிக்கு டாஸ்மாக்


raja
டிச 28, 2024 18:07

நீங்க மட்டும் எதுவும் பேசாமல் இருந்தீங்கன்னா இந்த கேடுகெட்ட விடியா மூஞ்சிகளின் அரசு பெண்கள் கழிவறைகுள்ளேயே கடை விரிக்கும்...


Kumar
டிச 28, 2024 18:05

அது திராவிட மாடல்ங்கோ


sankaranarayanan
டிச 28, 2024 17:16

கோபாலபுரத்திலும் ஒரு மதுக்கடை துவங்கினால் மக்களுக்கு மிகவும் சவுகரியமாகவே இருக்கும் செய்வார்களா விரைவில்


karthik
டிச 28, 2024 17:01

நல்லவேளை நீதிபதியாய் இருக்கிறீர்கள்.. இல்லையென்றால் வருமானத்தை தடுத்ததற்காக போலீசை ஏவி கைது செய்ய துடிப்பார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை