உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்! பைக் ரேஸ் நடத்திய வாலிபர்களின் 242 பைக் பறிமுதல்

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்! பைக் ரேஸ் நடத்திய வாலிபர்களின் 242 பைக் பறிமுதல்

சென்னை; சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ரேசில் ஈடுபட்ட 242 வாலிபர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நாளில், நள்ளிரவில் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசங்களில் ஈடுபடக்கூடாது என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. தலைநகரின் பல பகுதிகளில் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.மதுபோதையில் வாகனம் இயக்குதல், வாழ்த்து தெரிவிப்பதாக கூறி பொதுமக்களை அச்சுறுத்தவது போன்ற செயல்களை செய்வோரை பிடிக்கும் விதமாக 425 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந் நிலையில், போலீசாரின் எச்சரிக்கையை மீறி முக்கிய பகுதிகளில் ரேசில் ஈடுபட்ட வகையில் 242 வாலிபர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள நிலையில், அபராதம் விதிக்காமல் உரிய முறையில் எச்சரித்து, அதன் உரிமையாளர்களிடமே வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ram
ஜன 01, 2025 19:15

ஏன் திருப்பி கொடுக்கிறார்கள் , பெரிய இடத்து பையன்கள் என்பதாலா ... இல்லை வேண்டப்பட்ட ரௌடிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதாலா ..... பொதுமக்களை ஹெல்மட் போடாததற்கு மடக்கிமடக்கி பிடித்து காசை கறக்கிறார்கள்.


enkeyem
ஜன 01, 2025 17:22

இந்த மாதிரி போலீஸ் எச்சரிக்கை மட்டும் செய்வதால் எவனும் அடங்க மாட்டான். அடுத்த முறை இதைவிட அதிகமாக சேட்டை செய்வான்.


சம்பா
ஜன 01, 2025 16:17

இருமடங்கு அபராதம் விதிக்கனும் என்ன . நாயமோ


Vijay D Ratnam
ஜன 01, 2025 15:56

பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள நிலையில், அபராதம் விதிக்காமல் உரிய முறையில் எச்சரித்து, அதன் உரிமையாளர்களிடமே வாகனங்கள் திரும்ப ஒப்படைத்தால் அடுத்த ஆண்டும் பைக் ரேஸ் நடத்துவானுங்க. அந்த 242 பைக்குகளை ஒரு மைதானத்தில் வைத்து பெட்ரோல் ஊட்டி கொளுத்திவிட்டால் அடுத்த ஆண்டு எவனாவது பைக்ரேஸ் நடத்துவானா. அந்த 242 பைக் உரிமையாளர்களுக்கு தலா 99999 ரூபாய் அபராதம் விதிக்கலாம், கட்டத்தவறினாள் 18 மாதம் சிறைத்தண்டனை என்று அறிவிக்கலாம்.


சமீபத்திய செய்தி