உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவிநாசியில் புதுமணப் பெண் தற்கொலை; கணவர், மாமனார், மாமியார் கைது

அவிநாசியில் புதுமணப் பெண் தற்கொலை; கணவர், மாமனார், மாமியார் கைது

திருப்பூர்:அவிநாசி அருகே திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில், புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமியார், மாமனாரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யாவுக்கும்,27, ஜெயம் கார்டன் பகுதியைச் சேந்த கவின் குமார்,28, என்பவருக்கும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்து காரை எடுத்துச் சென்ற ரிதன்யா, மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் உயிரிழந்து கிடந்துள்ளார். தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்னை காரணமாக ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அதேவேளையில், ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ்அப்பில் சில ஆடியோ மெசேஜ்களையும் அனுப்பியுள்ளார். அதில், கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சித்ரவதை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இனி தன்னால் வாழ முடியாத நிலையில், மற்றொரு வாழ்க்கை தேர்வு செய்யும் மனநிலை இல்லை என்றும் அந்த ஆடியோவில் கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின் குமார், மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Eswar
ஜூலை 02, 2025 08:05

அவர்களுக்கு சிறை தண்டனை வேண்டாம். மூவரினதும் நாக்கை அறுத்து விட்டு வீட்டுக்கு அனுப்பி விடணும். அது தான் சரியான தண்டனை. சிறையில் வைத்திருந்து களி கொடுக்க செலவு தாங்காது.


Raj S
ஜூன் 30, 2025 23:20

அந்த அப்பாவையும் தண்டிக்கணும்... ஒரு பெண் தனக்கு துன்பம்னு அப்பாகிட்ட சொல்லியும் பிரயோஜனம் இல்லனா... என்னத்த சொல்ல


Ravi Kumar
ஜூன் 30, 2025 20:14

வெளியே வந்து இனொரு நல்ல வாழ்கை வாழந்து காட்டணும் ....இப்படி உயிர் விட கூடாது....


suresh guptha
ஜூன் 30, 2025 18:21

ENCOUNTER


Nethiadi
ஜூன் 30, 2025 09:15

இதுவே ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் நடந்தால் அமைதி மார்க்கம் ன்னு தூக்கிட்டு வந்திருக்கும்


தியாகு
ஜூலை 02, 2025 18:43

உங்களுக்ககு ஏன் மூர்க்கத்தனமாக கோபம் வருகிறது?


Ramesh Sargam
ஜூன் 29, 2025 22:13

அந்த கொடுமைக்கார கணவன், மாமனார், மாமியாரை கடுமையாக தண்டித்து சிறையில் அடைக்கவும். அவர்களுக்கு வக்காலத்து வாங்க எந்த வழக்கறிஞரும் முன்வரக்கூடாது. அப்படி வந்தால் அவர்களையும் நன்றாக உதைக்கவேண்டும்.


முக்கிய வீடியோ