உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஜூன் 12ல் திறக்கப்படும் புதிய சுங்கச்சாவடி: கட்டண விவரங்கள் வெளியீடு

தமிழகத்தில் ஜூன் 12ல் திறக்கப்படும் புதிய சுங்கச்சாவடி: கட்டண விவரங்கள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடி வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது.இது குறித்த அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பு-மானம்பாடி பகுதியில் இந்த புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இருக்கிறது.இதற்கான கட்டண விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கார், வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.105 கட்டணம், அதேநாளில் திரும்பி வர ரூ.160 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வியாபார ரீதியாக பொருட்களை ஏற்றிச் செல்லும் இலகுரக வாகனங்கள், மினி பஸ் போன்ற வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.170 கட்டணம், திரும்பி வர ரூ.255 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்களுக்கு ரூ.360, ரூ.540, அதிகபட்சமாக 7 அல்லது அதற்கு மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட கனரக வாகனங்களுக்கு ரூ.685, திரும்பி வர ரூ.1025 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

உ.பி
ஜூன் 07, 2025 17:21

யாராவது PLI கேஸ் போட்டு நியாயம் கிடைக்க செய்யணும்


Chennaivaasi
ஜூன் 07, 2025 15:43

இந்த சாலையில் விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு செல்ல சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். மொத்தமாக பணிகளே துவங்கவில்லை. அதுவும் பண்ருட்டி, கோலியனூர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு கல்லை கூட நகர்த்தவில்லை. மொத்த சாலையும் ஒரு வண்டிக்கான அகலம் மட்டும். ஆனால் வசூல் துவங்கி விட்டது. சேத்தியாத்தோப்பு முதல் கும்பகோணம் வரை நான்கு வழி சாலை பணி முடிவடைந்து விட்டது.


venugopal s
ஜூன் 07, 2025 13:21

தேசிய நெடுஞ்சாலை துறையினர் ரோடு போடுவதற்கு முன்பே சுங்கச்சாவடியை அமைத்து வசூல் வேட்டை ஆரம்பித்து விடுகின்றனர்!


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 07, 2025 20:25

குன்றிய நாட்டில் பழக்கமே இப்படித்தான். 503 வாக்குறுதிகளை சொன்னவுடனேயே நிறைவேற்றிவிட்டோம் என்று அறிவித்து வசூலுக்கு இறங்குவோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை