உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு

அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தனது அடுத்த சிம்பொனி இசையை எழுதுவது குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ளார். அத்துடன், சிம்பொனிக் டான்சர்ஸ் என்ற இசைக்கோர்வையை புதிய படைப்பாக எழுத உள்ளதாகவம் கூறியுள்ளார்.தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா சினிமாவிலும் முக்கியமான இசை ஆளுமை இளையராஜா. ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் இப்போதும் 82 வயதில் படங்களுக்கு இசையமைத்தும், லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து சாதித்து வருகிறார். இவர் திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்காக திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதையடுத்து லண்டனில் சிம்பொனி இசை அமைத்த இளையராஜாவை பாராட்டும் விதமாகவும், அவரின் 50 ஆண்டு சாதனையை புகழும் விதமாகவும் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uo1ho9jp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இளையராஜா வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். அம்மாவின் நினைவு தினத்துக்கு செல்கிறேன். இந்த இனிய தீபாவளி நாளில் உங்களுக்கு எல்லாம் இன்னொரு செய்தி சொல்ல விரும்புகிறேன். எனது அடுத்த சிம்பொனி எழுதுவதற்கு, அம்மாவின் நினைவு தினத்தை முடித்து விட்டு வந்து துவங்கலாம் என இருக்கிறேன். இத்துடன் புதிய படைப்பாக சிம்பொனிக் டான்சர்ஸ் என்ற இசைக்கோர்வையை எழுதுவதாக இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளி நற்செய்தியாக சொல்கிறேன். நன்றி வணக்கம்.இவ்வாறு அந்த வீடியோவில் இளையராஜா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

K.Harihara
அக் 20, 2025 22:23

Raja was the ever music jenius, this is because of gods gift and blessings, at the same time we appreciate his learning capabilities even at age 82, still at this age he started to his studio at 6.30 am every day, considered all his quality no one has not stopped to write the notes of symphony, if any current music directors wants let them start to write symphony notes, he never stopped anyone from cinema industry, he was living legend we should not comment on him.we done the same mistake and losing lots of our legendary person birth from tamilnadu. Hence dont make such dirty comments on him.


Anandhan
அக் 20, 2025 21:17

இளையவர்களுக்கு வழி விடாமல் தடுப்பது யார்? இளையராஜாவுக்கு வழிகாட்டியது யார்? இசையை சொல்லிக்கொடுப்பது கடினம், அது தானாக வர வேண்டும் என்பது என் கருத்து. ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது நியாயமாகத் தோன்றினாலும், சொல்லிக்கொடுப்பது போன்றவற்றில் இளையராஜா கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டால் இசையுலகம் பலவற்றை இந்த மாமேதையிடமிருந்து இழக்கும் என்று நினைக்கிறன்.


Naga
அக் 20, 2025 21:14

வாழ்த்துக்கள் இசை சாம்ராஜ்யம் தொடர


Naga
அக் 20, 2025 21:09

வாழ்த்துக்கள் எங்கள் இசை கடவுளுக்கு.


T.Senthilsigamani
அக் 20, 2025 20:51

நல்ல செய்தி .இசை ஞானி இளையராஜாவின் பாடல்கள் கேட்பதே ஒரு யோக உணர்வை தரும் .இசை யோகம் தந்த பிரம்ம ஞானியை வணங்குகிறேன் .இசை சாகரத்தில் மெய்யின்ப தரிசனம் அறிந்திட இளையராஜாவின் பாடல்கள் போதும் .மன இறுக்கங்களில் இருந்து மீண்டிட இசை ரசிகர்களுக்கு படைக்கலன்களாக உறுதுணையாவது இளையராஜாவின் பாடல்களே . நாஸ்டால்ஜிக் தருணங்களை - மனம் ததும்பி/கனிந்து நின்ற பழைய கால வாழ்க்கை நினைவுகளை மீட்டு எடுக்க கருவியாவது இளையராஜாவின் கீதங்களே .மனித உணர்வுகளை ஊர்தியாக்கி அதில் காலத்தை கடந்து வியந்து உயர்ந்து நின்றிட செய்வது இளையராஜாவின் சங்கீதங்களே . ரசிகர்களின் சந்தோசமே எனது சந்தோசம் என்ற ஒற்றை இலக்குக்காக வாழும் இலட்சியவாதச் செயல்பாடு கொண்ட இசை ஞானியை தமிழகம் கொண்டாடுவது இயல்பு தான் . நிகரழியாப் பெருநிலையில் அருஞ்செயல் ஆற்றி ,செயல் மெய்மை கண்டடைந்த இசை யோகி இளையராஜாவை வாழ்த்த வயதில்லை .வணங்குகிறேன் .


Kannan
அக் 20, 2025 20:21

கிரேட் வாழ்த்துக்கள்


m.arunachalam
அக் 20, 2025 20:07

ஒரு முறை பிரபலமாகிவிட்டால் போதுமே. இளையவர்களுக்கு வழிகாட்டி வழி விடலாமே .


நிவேதா
அக் 20, 2025 21:07

இளையவர்களை அவர் தடுத்து நிறுத்தவில்லையே


SANKAR
அக் 20, 2025 21:07

unlike sports musicians need not retire.besides only Rehman can produce sympony .Raja not stopping anyone from making sympony!


Ganesun Iyer
அக் 21, 2025 00:22

சார்.. தமிழ் இசை உலகம் திமுக மாதிரி இல்லை அப்பனுக்கு பின் பையன், அவனுக்கு பின் பேரன், அவனுக்கு பின் கொள்ளு பேரன் என்று.. யாரு வேனா வரலாம்.. இளையராஜா உடன் பலர் வந்துள்ளனர்..இன்னும் வந்து கொண்டுள்ளனர்.


RAMESH KUMAR R V
அக் 20, 2025 20:03

வாழ்த்துக்கள் ஐயா


சமீபத்திய செய்தி