உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; என்.ஐ.ஏ., அதிரடி

தமிழகத்தில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; என்.ஐ.ஏ., அதிரடி

சென்னை: தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக, தமிழகத்தில் செயல்பட்ட 2 முக்கிய நபர்களை என்.ஐ.ஏ., அமைப்பினர் கைது செய்துள்ளனர்.சென்னை ராயப்பேட்டையில், அலுவலகம் ஒன்றை அமைத்து தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தக்ரீர் என்ற இயக்கத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்து இயங்குவதாக கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணையும் நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cklsvntr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விசாரணையில் ஹமீது உசேன், அகமது மன்சூர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் கடந்த ஜூலை, செப்டம்பர் ஆகிய மாதங்களில் என்.ஐ.ஏ., அமைப்பினர் அதிரடி ரெய்டில் இறங்கினர். அப்போதும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இதே இயக்கத்துக்கு மேலும் சிலர் ஆதரவு அளித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் என்.ஐ.ஏ., அமைப்பினர் குறிப்பிட்ட சிலரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதன் ஒரு கட்டமாக இன்று (பிப்.3) சென்னையில் 3 இடங்களிலும், காஞ்சிபுரத்தில் 2 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. முடிச்சூர், குன்றத்தூர் பகுதிகளில் சோதனையின் போது 2 பேர் சிக்கினர்.திருவாரூர், மன்னார்குடியிலும் என்.ஐ.ஏ., பிரிவினர் திடீர் சோதனையில் இறங்கினர். இந்நிலையில், தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தக்ரீர் இயக்கத்துக்கு ஆதரவு அளித்த வழக்கில் 2 முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக என்.ஐ.ஏ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதுதொடர்பாக என்.ஐ.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ., தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தக்ரீர் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கில் 2 முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் கபீர் அகமது, பாவா பக்ரூதின் என்னும் மன்னை பாவா என்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது.இவர்கள் இருவரும் ஹிஸ்ப் உத் தக்ரீர் இயக்கத்துக்கு ஆதரவாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன் இணைந்து ரகசிய சந்திப்புகள் நடத்தி உள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விட்டன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கபீர் அகமது, பாவா பக்ரூதின் இருவருக்கும் ஹிஸ்ப் உத் தக்ரீர் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதே இயக்கத்துக்கு சர்வதேச அளவில் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா, ஹிஸ்ப் உத் தக்ரீர் இயக்கத்திற்கு நிதி உதவி அளித்துள்ளனரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு என்.ஐ.ஏ., செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Duruvesan
பிப் 03, 2025 20:57

பாஸ் இஸ்லாமிய சகோதரர்கள் 98% பேர் நல்லவர்கள், இழகிய மனம் கொண்டோர், ஒரு 2% பேரால் மொத்த மார்க்கத்திற்கும் கெட்ட பெயர். இங்க ஒரு சிலர் பேர் இல்லாம திரியரானுங்க, அவங்களுக்கு அந்த அல்லாஹு நல்ல வழி காட்ட வேண்டுகிறேன்


தமிழ்வேள்
பிப் 03, 2025 20:15

மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன்..திமுக தமிழகத்தை இன்னொரு காஷ்மீர் ஆக மனமறிந்தே மாற்றிக்கொண்டு வருகிறது... காலிஸ்தான் பாகிஸ்தான் பயங்கரவாதி கும்பலுக்கும் இவர்களுக்கும் பரூக் அப்துல்லா ஓமர் அப்துல்லா பயல்கள் மூலம் தொடர்பு தொடர வாய்ப்பு அதிகம்.. காங்கிரஸ் கூட உள்கையாக இருக்கும் வாய்ப்பை மறுக்க முடியாது... இரத்த சேதத்துக்கு தயங்காமல் தமிழகத்தை மூன்றாகப் பிரித்து திராவிடத்தை கருவறுப்பது மட்டுமே தமிழ் தமிழன் தமிழகத்தை பேரழிவில் இருந்தும் நிரந்தரமான பாரத துரோகிகள் என்ற பட்டத்திலிருந்தும் காப்பாற்றும்..தயங்கும் ஒவ்வொரு கணமும் பேராபத்து கூடுதலாகிக்கொண்டே இருக்கிறது..


prasath
பிப் 03, 2025 19:39

ட்ரு இந்தியன் வேலன் ஐயங்கார் என்ற போர்வையில் இருக்கும் வேறு மதத்தை சேர்த்தவர் அறிவாலய கேட்டிலே பதுங்கி இருக்கிறார் இஸ்லாமிய தீவிரவாதிகளை விட வேலன் போன்றவர்கள் தான் எந்த நாட்டுக்கும் மிக ஆபத்தானவர்கள்


Kumar Kumzi
பிப் 03, 2025 19:30

இந்த மூர்க்க காட்டுமிராண்டிகளை விசாரணை செய்து விட்டு என்கவுண்டரில் போட்டு தள்ளுங்க இல்லாவிட்டால் ஓங்கோல் ஓட்டு பிச்சைக்காரன் சட்டப்பேரவையில் விடுவிக்க சொல்லி சட்டம் இயற்றுவான்


காஷ்மீர் கவுல் பிராமணன்.ஷோபியான்.
பிப் 03, 2025 19:28

இவர்களின் நாக்கை துண்டித்து கண்களை குருடாக்கி கைகால்களை வெட்டிவிடுங்கள் அப்போதுதான் மற்றவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.


தமிழ்வேள்
பிப் 04, 2025 19:57

இன்னும் ஒரு உறுப்பையும் துண்டிக்க வேண்டும்...


Kasimani Baskaran
பிப் 03, 2025 19:00

சென்ற ஆண்டு பாதியில் கண்டுபிடித்த தமிழக போலீஸ் தீவிரவாதிகளை பத்திரமாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 03, 2025 18:54

பயங்கரவாதிகள் கைது என்பதை ஒரு சாதாரண செய்தியாக படித்துவிட்டு கடந்துவிடமுடியாது. இவர்கள் மற்ற இன மக்களை, மத தலைவர்களை, அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளை, தேசத்தின் முக்கியமான ரயில், பேருந்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சேமிப்பு கிடங்குகள், மக்கள் கூடும் விழாக்கள், கோயில்கள், அரசு விழாக்கள், காவல்துறை அதிகாரிகள், இராணுவ நிலைகள், மின்சார அமைப்புகள் என்று ஒவ்வொன்றையும் தாக்கி தேசத்திற்கு பொருளாதார நஷ்டதையும், அவப்பெயரையும், சாதாரண மக்களை கொன்றும் குரூர எண்ணத்துடன் நடப்பவர்கள். பொதுமக்கள் இதுபோன்ற சந்தேகப்படும்படியான நபர்களை பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மத்திய அரசின் துறைகளில் உள்ள முக்கிய அதிகாரிகளிடமோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கென உள்ள அரசின் தொலைபேசி எண்கள் அல்லது இணைய தளங்களில் புகார் பதிவு செய்வது அவசியம். ஒன்றுபடுவோம், தேசத்தை காப்போம்.


Duruvesan
பிப் 03, 2025 18:10

நம்ம போலீஸ் கில்லி, விடியல் சார் பாராட்டுவார்


TRUE INDIAN
பிப் 03, 2025 18:07

எங்கே அந்த வேலன் அய்யா அவர்கள்....


Bye Pass
பிப் 03, 2025 19:26

ஓ போட ஆசை படறீங்களா ? சவுதி அழகி போட்டி இசை நடனம் கேளிக்கை என்று நாகரீக முகத்தை காட்டி வருகிறது ..நம்ம மூர்க்கர்கள் ஒட்டக காலத்திலேயே இருக்காங்க


Saai Sundharamurthy AVK
பிப் 03, 2025 17:57

இவர்களை பற்றி தமிழக அரசுக்கும், தமிழக காவல் துறையினருக்கும் தெரியாமலா இருந்திருக்கும்.


Dharmavaan
பிப் 03, 2025 20:56

இவங்களுக்கு ஆதரவு அளிப்பதே அரசுதான் போலீஸ்தான்


சமீபத்திய செய்தி