உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கந்து வட்டி சீனாக்காரர்கள் குறித்து திருச்சியில் என்.ஐ.ஏ., விசாரணை

கந்து வட்டி சீனாக்காரர்கள் குறித்து திருச்சியில் என்.ஐ.ஏ., விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கந்து வட்டி தொழில் செய்த சீன நாட்டினர் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள், திருச்சியில் விசாரித்து வருகின்றனர்.திருச்சியில் தங்கியிருந்த, சீனாவைச் சேர்ந்த சியாவோயா மாவோ மற்றும், வு யுவான்லுான் ஆகியோரை, நவ., 13ல் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை, மூன்று நாள் காவலிலும் விசாரித்தனர்.

'கிரிப்டோ கரன்சி'

அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேரை நிர்வாக இயக்குனர்களாக நியமித்து, இரண்டு நிறுவனங்களை துவக்கி உள்ளனர். அந்நிறுவனங்களின் பெயரில், மொபைல் போன் செயலியை உருவாக்கி, உடனடி கடன் வழங்கி உள்ளனர். இக்கடனை திருப்ப செலுத்த, ஏழு நாள் மட்டுமே அவகாசம் வழங்கி, 49.20 கோடி ரூபாய் வரை கந்து வட்டி வசூலித்தது தெரியவந்தது. கடன் வாங்கியவர்களை மிரட்டி வசூலித்த தொகையை, 'கிரிப்டோ கரன்சி'யாக ஹாங்காங் அனுப்பியதும் தெரியவந்துள்ளது. அதன் வாயிலாக, சீன நாட்டினர் வேறு ஏதேனும் சதி திட்டம் தீட்டி இருந்தனரா என்பது குறித்து, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், திருச்சியில் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் கூறியதாவது:சீன நாட்டினரிடம் ஏராளமான, 'டிஜிட்டல்' ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவற்றை, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில், சீன நாட்டினர் குறித்து விசாரித்து வருகிறோம்.

இரண்டு பேர்

சீன நாட்டினரின் புரோக்கர்களாக, திருச்சி மாவட்டம், தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்.திருச்சியில் சிக்கிய சீன நாட்டினரின் கூட்டாளிகள், கர்நாடக மாநிலம், பெங்களூரிலும் தங்கி கந்து வட்டி தொழில் செய்துள்ளனர்; அங்கேயும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V GOPALAN
டிச 05, 2024 16:46

For the last 100 years our trichy airport is famous for smuggling activities. Even now ramjinagar is the looters paradise. Both DMK and ADMK developed this trichy like this. That is why even unknown Durai Vaiko can win MP seat with thumbing majority. We should blame only the Hindus and medias


venugopal s
டிச 05, 2024 15:24

கையாலாகாத மத்திய பாஜக அரசின் கையாலாகாத என் ஐ ஏ யின் விசாரணையா? ஒரு பிரயோஜனமும் இருக்காது!


sridhar
டிச 05, 2024 12:47

ஜெயலலிதா அரசு காலத்தில் usurious interest act பாஸ் பண்ணினார்கள் , அது இன்னமும் இருக்கு. திருச்சி போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்கலாம் . NIA வந்தது உள்ளூர் போலீசுக்கு கேவலம் .


Barakat Ali
டிச 05, 2024 10:39

தேசவிரோத செயல்கள், தேசவிரோத அமைப்புக்களுக்குத் துணை போகும் அரசைத் தேர்ந்தெடுத்தது யார் ???? மக்கள்தானே ????


S.kausalya
டிச 05, 2024 07:18

தமிழ் நாட்டில் வந்து தைரியமாக இப்படி வட்டி தொழில் செய்யலாம் என்ற மனப்பான்மையை இவர்களுக்கு கொடுத்தது யார்? நம் மக்களும் எவன் காசு கொடுத்தாலும், அது வட்டியுடன் கூடிய பணமாக இருந்தாலும் சரி, இலவசம் ஆக இருந்தாலும் சரி, வாங்கி கொண்டு சந்தோஷமாக செலவுகள் செய்வார்கள். இல்லை என்றால் வங்க தேசத்தினர், ஆப்பிரிக்கா காரன், சீனாக்காரன் என இங்கு வந்து குவிவார்களா? எல்லா மனிதர்களும் காசு என்றால் பல்லை காண்பிப்பார்கள் தான். ஆனால் தமிழ் நாட்டில் உள்ளவர் போல் பின் விளைவை சிந்திக்காமல் காசு பார்க்க மாட்டார்கள். முன்னாட்களில் தமிழர்களை தான் அனைவருக்கும் சேமிப்பு என்ற வழக்கத்தை கொண்டு வந்தவர்கள். வரவுக்குள் செலவு, அதில் சேமிப்பு என்றெல்லாம் இருந்தது. தற்போது சீனாவிடம் வட்டிக்கு காசு? எங்கே போகிறோம்?


Kasimani Baskaran
டிச 05, 2024 06:33

ஒரு பக்கம் சாராயம், அடுத்த பக்கம் போதை, இன்னொரு பக்கம் மோசடிகள். இதற்கிடையில் பகுத்தறிவு மிகுந்த உடன்பிறப்புக்கள். தமிழகத்தை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை