உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை, குமரி, புதுக்கோட்டை உட்பட 14 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை, குமரி, புதுக்கோட்டை உட்பட 14 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில், தமிழகத்தில் 14 இடங்களில் இன்று (செப்.,24) என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள், கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் டாக்டர் ஹமீது உசேன்; பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர். அண்ணா பல்கலையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி உள்ளார். அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான். இவர்கள் மூவரும், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பான, 'ஹிஸ்ப் உத் தாஹரீர்' என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=25fm2la1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விசாரணை

இதை தொடர்ந்து, மூவரிடமும் தொடர்பில் இருந்த, சென்னையை சேர்ந்த முகமது மவுரிஸ், 36; காதர் நவாஸ் ஷெரிப், 35, அகமது அலி உமரி, 46, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, இந்த வழக்கின் விசாரணை விரிவடைந்துள்ளது. என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சோதனை

இந்த வழக்கு தொடர்பாக, இன்று(செப்.,24) தமிழகத்தில் சென்னை, தாம்பரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆதாரங்களை திரட்டும் வகையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலங்களில் சோதனை நடத்தினர். அதிகாலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழ்வேள்
செப் 24, 2024 20:29

சிக்கிய மூர்க்க மார்க்க பந்துக்களின் உயிரைப் பறிமுதல் செய்து விட்டால் பிரச்சினை தீரும்.அவர்களுக்கு 72 கிடைக்க உதவிய புண்ணியமும் போனஸ் ஆக கிடைக்கும்.


Kumar Kumzi
செப் 24, 2024 13:05

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பிடிபட்ட காட்டேரிகளை சுட்டுக்கொள்ளுங்கள்


seshadri
செப் 24, 2024 12:30

இப்படியே பண்ணிட்டு இருங்க ஒரு தண்டனையும் கிடையாது. பத்திரிக்கைகளுக்கு தீனி மட்டுமே மிச்சம்.


ram
செப் 24, 2024 12:27

இவர்களுக்கு வழங்கும் சிறுபான்மை அந்தஸ்தை நீக்க வேண்டும் உடனடியாக.


sridhar
செப் 24, 2024 11:28

உண்ண உணவு , பருக நீர் , சுவாசிக்க காற்று எல்லாம் இங்கே பெறுகிறார்கள். வால் மட்டும் வேறு யாருக்கோ ஆடுகிறது .


Muralidharan raghavan
செப் 24, 2024 12:14

கரெக்ட்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை