உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மஹா.,வில் வாடகை வீட்டில் போதைப் பொருள் தயாரித்த நைஜீரிய பெண் கைது

மஹா.,வில் வாடகை வீட்டில் போதைப் பொருள் தயாரித்த நைஜீரிய பெண் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பால்கர் : மஹாராஷ்டிராவின் பால்கரில், வீட்டை வாடகைக்கு எடுத்து, போதைப் பொருள் தயாரித்ததாக, நைஜீரியாவைச் சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 5.6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நலசோப்ரா பிரகதி நகரில், தடை செய்யப்பட்ட போதை பொருளை இளம்பெண் ஒருவர் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் நடத்திய சோதனையில், 'மெபட்ரான்' என்ற போதைப் பொருளை வீட்டிலேயே தயாரித்த, ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த ரீட்டா பதி குரேபேவே, 26 என்ற இளம் பெண் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து, 5.6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய அவருடைய கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்னத்த சொல்ல
மே 18, 2025 11:50

தி மு காவை திட்ட முடியலையே.


Barakat Ali
மே 18, 2025 08:35

குற்றவாளிகளுடன் அப்பெண்ணை ஒன்றாக அடையுங்கள் ......


Kasimani Baskaran
மே 18, 2025 06:41

போதை மருந்து உட்கொள்ளும் கலாச்சாரம் மிக தீவிரமான கரையான் போன்றது - சமூகத்தை முழுவதுமாக அழித்துவிடும். தயவு செய்து பிள்ளைகளை கவனமாக கண்காணியுங்கள்.


சமீபத்திய செய்தி