உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதை பொருள் கும்பலை இயக்கும் நைஜீரிய பெண்

போதை பொருள் கும்பலை இயக்கும் நைஜீரிய பெண்

சென்னை:தமிழகத்தில், போதைப் பொருள் கடத்தல் கும்பலை இயக்கி வரும், 24 வயதான நைஜீரிய பெண்ணை, என்.சி.பி., அதிகாரிகள் தேடி வருகின்றனர். இம்மாதம் துவக்கத்தில், கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோபியாவில் இருந்து, விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 60 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை, என்.சி.பி., எனப்படும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து பறிமுதல் செய்தனர். இதன் பின்னணியில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் செயல் படுவது தெரியவந்தது. இதையடுத்து, இக்கும்பலில் முக்கிய புள்ளிகளாக செயல்பட்டு வந்த, உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹிமான்சு ஷா, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சாஹித் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர். தொடர் விசாரணையில், இக்கும்பலை இயக்குவது, 24 வயதான நைஜீரிய பெண் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து என்.சி.பி., அதிகாரிகள் கூறியதாவது: கைதான நபர்களின் டிஜிட்டல் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் வாயிலாக, தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை இயக்குவது, நைஜீரிய பெண் ஒருவர் என தகவல் கிடைத்துள்ளது. இவர், கர்நாடக மாநிலம், பெங்களூரு மற்றும் மும்பையில், மாறி மாறி பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. விரைவில் சிக்குவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ