உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடலூரில் 12 பேரை கொன்று சிக்கிய காட்டு யானை: முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு பயணம்

கூடலூரில் 12 பேரை கொன்று சிக்கிய காட்டு யானை: முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு பயணம்

கூடலூர்: கூடலூரில் கராலில் அடைக்கப்பட்டிருந்த காட்டு யானையை வனத்தில் விடுவதற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு வனத்துறையினர் அழைத்துச் சென்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி பகுதியில், 12 பேரை தாக்கி கொன்ற, ராதாகிருஷ்ணன் என்ற ஆண் காட்டு யானையை வனத்துறையினர் கடந்த மாதம் 23ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். முதுமலை புலிகள் காப்பகம், அபயாரணயம் யானைகள் முகாமில் அமைக்கப்பட்டுள்ள கராலில் அடைத்து யானையை அவர்கள் கண்காணித்து வந்தனர்.உயரதிகாரிகள் உத்தரவுப்படி, கராலில் இருந்த காட்டு யானையை நேற்று, நள்ளிரவு கும்கி யானைகள் உதவியுடன் வெளியே அழைத்து வந்தனர். பின்னர் லாரி ஒன்றில் ஏற்றி, வனத்தில் விடுவதற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர்.வெகு விரைவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு யானை கொண்டு செல்லப்படும் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

P.sivakumar
அக் 25, 2025 20:41

யானைக்கு ஆதரவாக வாதாட சுப்ரீம்கோர்ட்டில வக்கீல் நியமனம்


sundarsvpr
அக் 25, 2025 13:15

ஐந்து அறிவு கொண்ட யானையை மீண்டும் காட்டிற்கு கொண்டு விடுவதை தவிர்த்து அதற்கு ஆறாவது அறிவு புகட்டி நாட்டில் நடமாடவிட்டால் சிறு குழந்தைகள் விளையாடி மகிழலாமே கொலைவெறி கொண்ட மனிதனை நீதி விசாரணையில் கொள்கிறோம். அதுபோல் யானைகளை சர்க்கஸ் கூடாரத்தில் பழகவிடலாமே?


Nanchilguru
அக் 25, 2025 18:18

இது யானை பொம்மை இல்லை , ரியல் யானை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை