உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவி குற்றவாளி கோர்ட் தீர்ப்பு: இருவர் விடுதலை

மாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவி குற்றவாளி கோர்ட் தீர்ப்பு: இருவர் விடுதலை

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக (பாலியல் குற்றம் செய்ய) முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018ல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7arv64n1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இருதரப்பு வாதங்கள், முடிந்தநிலையில், இன்று (ஏப்.,29) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று நீதிமன்றத்தில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராகினர். அப்போது தீர்ப்பை வாசித்த நீதிபதி, இந்த வழக்கில் இருந்து முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை எனக்கூறி விடுதலை செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை விபரம் நாளை (ஏப்.,30) அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேல்முறையீடு

சிபிசிஐடி வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறுகையில், 'இருவரை விடுதலை செய்தது தொடர்பாக மேல்முறையீடு செய்வோம். கருப்பசாமி, முருகனுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள், தற்போது பிறழ் சாட்சியாக மாறியுள்ளனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Siva Subramaniam
மே 02, 2024 08:05

What about the victims? How their lost status be restored? Those who made money and enjoyed life are still around, at the cost of affected female students/


A P
ஏப் 29, 2024 21:37

அய்யா நீங்கள் இந்த கேஸ் மட்டும் கணக்கில் கொண்டு கருத்து எழுதி உள்ளது தெரிகிறது இதை போல் பல்லாயிரக்கணக்கான கேஸுகள் ஒவ்வொரு கோர்ட்டிலும் பெண்டிங் உள்ளன இந்த கழகங்கள் நமது நல்ல நாகரிகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கெடுத்துக் குட்டிச்சுவராக்கியதால் நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகி கோர்ட்டுகளில் வரிசை கட்டி நின்றால் கோர்டுதான் என்ன செய்யும் கழகங்களின் தீய கோட்பாடுகள் தான் குற்றங்கள் பெருகிக்கொண்டு இருப்பதற்கு காரணம் வருடங்களுக்கு முன்னரெல்லாம் போலீஸ் யாரையாவது பிடித்தால் அந்த நபர் பயத்தில் ஒண்ணுக்குப் போய் விடுவான் இப்போதெல்லாம் போலீசுக்கு யாரும் மரியாதை கொடுக்கிற மாதிரி தெரியவில்லை


தாமரை மலர்கிறது
ஏப் 29, 2024 20:17

நிர்மலா தேவி மீதும் குற்றம் இருப்பதாக வெளிப்படையாக தெரியவில்லை அதனால் அவரும் விரைவில் விடுவிக்கப்படுவார் நிர்மலாதேவி போன்று வேறு யாரோவர் அவரது போனில் பேசி இருக்கலாமே அதனால் இதுபோன்ற ஆதாரங்கள் கோர்ட்டில் செல்லாது


Bala
ஏப் 29, 2024 19:46

கூடா நட்பு கேடாய் முடிந்தது, அந்த கறுப்புக்கு என்ன நீதி ?


Sivagiri
ஏப் 29, 2024 19:37

இரண்டு பேர் சேர்ந்து மாணவிகளை அடித்து மிதித்து கொடுமை படுத்துவது போலத்தான் வீடியோக்கள் பரவியது - ? ஆனால் அவர்கள் விடுதலையா ?


Natchimuthu Chithiraisamy
ஏப் 29, 2024 18:21

நிர்மலா மட்டுமே தப்பு செய்தார் நாட்டில் பல பேர் உள்ளார்கள் அவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது


rsudarsan lic
ஏப் 29, 2024 18:07

கேஸ் முடிந்த நிலையில் இந்திய நீதி மன்றத்தில் இது போன்ற வழக்குகள் எந்த முறையில் நடத்தபடுகின்றன முக்கியமாக குற்றவாளி யின் வாதம் என்னவாக இருந்தது


ஆரூர் ரங்
ஏப் 29, 2024 15:30

நிர்மலா மாணவிகளை தவறான வழிக்கு மாற்ற முயன்றார்? அந்த வி ஐ பி யின் பெயரென்ன என்பதை வெளியிடவில்லையே.


Dharmavaan
ஏப் 29, 2024 15:23

யார் கீழ் கோர்ட்டில் 9 வருடங்கள்


Srinivasan Krishnamoorthi
ஏப் 29, 2024 15:16

எல்லாம் சரி அவர்களுள் சினிமாக்களின் தாக்கம்,அந்த காலத்தில் சில சினிமா அரசியல் பிரபலங்களை மனிதில் வைத்து கொண்டுக் கொண்டு கணவரை அணுகிய மகளிரின் வாழ்க்கை முறையின் வெளிப்பாடுகளால் கிராம புறங்களில் பெண்கள் வளர்க்கப்பட்ட விதம், கைபேசி மூலம் யாரையும் அணுகிவிடக்கூடிய கட்டவிழ்த்து விடப்பட்ட சுதந்திரம், தற்கால பெண் ஆடை அணியும் பங்கு மற்றும் இருபாலரும் சகஜமாக சேர்ந்து பழகும் வாய்ப்பு இதற்கெல்லாம் மேல் முற்போக்கு கருத்து என்ற பெயரில் நடக்கும் பொதுவிட கூத்த்துகள் எதையும் நீதிபதி உட்பட யாரும் சிந்தித்ததாக தெரியவில்லை


rsudarsan lic
ஏப் 29, 2024 17:46

இது எல்லோருக்கும் பொது உங்க வீட்டுக்கு எங்க வீட்டுக்கு எல்லோரும் இப்படியா இருக்காங்க? பிளீஸ் தப்பை தப்புன்னு சொல்ல பழகுங்க


மேலும் செய்திகள்











புதிய வீடியோ