உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை இல்லை; மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை இல்லை; மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்காததற்காக, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'சென்னை மாநகராட்சியின், 5வது மண்டலமான ராயபுரத்தில் உள்ள, அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன், 2020ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gvu1g9h2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராயபுரம் மண்டலத்தில் உள்ள சட்டவிரோத, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மீதும், பிற மண்டலங்களில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி, 2021 டிசம்பரில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக்கூறி, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக, ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு, கடந்த ஏப்ரலில் விசாரணைக்கு வந்த போது, மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அறிக்கையை பார்வையிட்ட நீதிபதிகள், 'விதிமீறலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரங்கள், அறிக்கையில் போதுமானதாக இல்லை.'இதை பார்க்கும் போது, விதிமீறல் செய்பவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்ற தோற்றத்தை அளிக்கிறது. வேண்டுமென்றே விபரங்களை கமிஷனர் அளிக்கவில்லை என்றே தெரிகிறது' என தெரிவித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர்மோகன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் கே.பாலாஜி ஆஜராகி, ''மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் இடம் பெற்ற தகவல்கள் முழுமையாக இல்லை. விபரங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன,'' என்றார்.இதை கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதற்காக, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.இத்தொகையை கமிஷனரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, அதை, புற்றுநோய் மையத்துக்கு வழங்கவும் உத்தரவிட்டனர்.மேலும், விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வரும் 24ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

V RAMASWAMY
ஜூலை 09, 2025 18:40

எய்தவர்கள் இருக்க அம்பை நோவதேன் என்றொரு வழக்கு சொல் நினைவிற்கு வருகிறது.


panneer selvam
ஜூலை 09, 2025 16:22

Fine of one lakh rupee is nothing . With in a minute , our Chennai commissioner could collect from contractors . He should be given not less than 6 months imprisonment for of dereliction of his duties and disobeyed the court order . It will give due warning to erring officials


VASUDEVAN
ஜூலை 09, 2025 15:07

ரெட்டேரி எங்க போனது ஏறி KANAVILLAI


அப்பாவி
ஜூலை 09, 2025 14:31

இடிக்கக் கூடாதுன்னா ஒரு கோடி குடுக்கணும்னு வசூல பண்ணிருப்பாங்க.


V Venkatachalam
ஜூலை 09, 2025 14:22

இந்த ஒரு லட்சம் அபராதம் ஒரு மணி நேர பாக்கெட் மணிக்கு சமம் அல்லது அதற்கு கீழே.. அபராதம் ன்னு தீர்ப்பு குடுத்தா ஒரு பத்து கோடி ரூவான்னு விதிக்கணும். அப்புறம் அவன் போயி முட்டி மோதி குறைத்து கொள்ளட்டும். அப்பதான் விதி மீறல் கட்டுமானத்தை ஒழிக்கலாம்.‌


Oviya Vijay
ஜூலை 09, 2025 12:55

சில நிமிடங்களில் லஞ்சமாக ஒரு அரசு ஊழியரால் பெற முடிகிற மிக மிகக் குறைவான தொகையை அபராதமாக விதித்ததற்கு உயர்நீதிமன்றத்தை வன்மையாக கண்டிக்கிறோம்... 1 லட்சம் ருபாய் என்பது ஒரு மாநகராட்சி கமிஷனருக்கு ஜூஜூபி என்பதை கோர்ட்டால் உணர முடியவில்லையோ...


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 09, 2025 13:48

சரி ,ஒரு கோடி அபராதம்ன்னு கோர்ட்டு சொல்லிட்டாலும் கமிஷனரா கட்டப்போறாரு ? ஒன்னு அரசாங்கம் கட்டும், இல்லாட்டி ஏதாவது ஒரு காண்டிராக்ட்ர் கட்டுவாரு.


Anantharaman Srinivasan
ஜூலை 09, 2025 11:37

சட்டவிரோத கட்டுமானங்கள் மட்டுமல்ல. கொடிகம்பங்களை அகற்றுதல், விளம்பர பிளாக்ஸ் போர்டுகளை எடுத்தல் போன்றவற்றிலும் நடவடிக்கை இல்லை மாநகராட்சியும் தமிகயரசும் நீதின்றங்களை துச்சமாக கருதுகிறது.


இந்தியன்
ஜூலை 09, 2025 11:37

மாநகராட்சிக்கு வெட்கக்கேடு


இந்தியன்
ஜூலை 09, 2025 11:34

அனைத்து மாநகராட்சி ஆணையர்களும், சட்ட விரோத கட்டுமானங்களை கண்டுகொள்வதே இல்லை. இனி ஒவ்வொரு சட்டவிரோத கட்டுமானங்களுக்கும், பெருநகர மாநகராட்சிக்கும், ஆணையருக்கும், அதிகபட்ச அபராதம் விதித்தாதான், இவர்களுக்கு புத்தி வரும்.


kannan
ஜூலை 09, 2025 11:19

வழக்கு தொடுத்தது 2020ல். வழக்கை விசாரித்து, அபராதம் போட்டது 2025ல் Oh My Lord


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை