உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ, உடன் கூட்டணி இல்லை: இ.பி.எஸ்., மீண்டும் உறுதி

பா.ஜ, உடன் கூட்டணி இல்லை: இ.பி.எஸ்., மீண்டும் உறுதி

சேலம்: ‛‛பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை'', என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

வெற்றி

சேலத்தில் நிருபர்களை சந்தித்த இ.பி.எஸ்., கூறியதாவது: அதிமுக.,வை பொறுத்தவரை நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். ஊடகங்கள் அதிமுக கூட்டணி குறித்து அவதூறு பரப்பின. விவாத மேடைகளில் இல்லாததும், பொல்லாததும் குறித்து விவாதிக்கப்பட்டன. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் அதிமுக கூடுதலாக ஒரு சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இதனை வெற்றியாக பார்க்கிறேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=algr0lwu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அதிகரிப்பு

ஓட்டு சதவீதத்தை வைத்து பா.ஜ., வளர்ந்துவிட்டதாக கூறுகின்றனர். 2019 ல் 18.8 சதவீத ஓட்டுகளை அக்கட்சி பெற்றது. ஆனால், 2024ல் அக்கூட்டணி 18.2 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்றது. அக்கூட்டணிக்கு 0.6 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளது. 2019 ல் 33.5 % ஓட்டு பெற்ற திமுக., 2024ல் 26.93 % ஓட்டுகள் மட்டுமே பெற்றது. இதுவும் குறைவு தான். ஆனால், அதிமுக., தான் கூடுதல் ஓட்டுகள் பெற்றுள்ளது. அதிமுக.,வின் ஓட்டுகள் எங்கும் செல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தகுதியில்லை

பிறகு, நிருபர்களின் கேள்விகளுக்கு இ.பி.எஸ்., அளித்த பதில்: சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமைப்பது கட்சிகளின் நிலைப்பாடு. அது பின்னடைவை ஏற்படுத்தாது. தேர்தலுக்கு ஏற்ப வெற்றி தோல்வி அமையும். ஆனால், அதிமுக.,வுக்கு பின்னடைவு என்பது வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்படும் பொய் பிரசாரம் ஆகும். அதிமுக., வளர்ந்து வருகிறது. பின்னடைவை சந்திக்கவில்லை. எதிரிகளோடு சேர்ந்து சிலர் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அதிமுக.,வைப் பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதி கிடையாது. அவரை அடையாளம் காட்டியது அதிமுக., தான்.

விரக்தி

பா.ஜ., கூட்டணி இருந்து இருந்தால் வென்று இருப்போம் என முடிந்து போனதை பற்றி இப்போது பேசக்கூடாது. தேர்தலுக்கு முன் அண்ணாமலை பல்வேறு கனவுகளை கண்டு இருப்பார். அவரது கனவு பலிக்காததால் விரக்தியில் கடுமையாக விமர்சிக்கிறார். கடந்த முறை பெற்ற ஓட்டுகளை விட பா.ஜ., குறைவான ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ளதை போல், பல மாநிலங்களிலும் நிர்வாகிகள் உள்ளதால், பாஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.,உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

2026ல் ஆட்சி

வேலுமணிக்கும் எனக்கும் பிரச்னை இருப்பது போல் வேண்டுமென்றே திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.2026ல் அ.தி.மு.க., கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்; அ.தி.மு.க., தனி பெரும்பான்மையை பெறும். அதிமுக.,வை அழித்துவிடுவோம் என பல காலமாக சொல்லிக் கொண்டு உள்ளனர். ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றால், என்றோ தேசிய கட்சியோடு சேர்ந்து இருப்போம். வெற்றி பெறும் வரை தேசிய கட்சிகள் நம்மை பயன்படுத்துகின்றன. பிறகு கண்டுகொள்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 82 )

Jagan (Proud Sangi)
ஜூன் 11, 2024 18:23

Soft ஹிந்துதுவா வோட்டு ADMK பக்கம் போச்சு , ஏன் என்றால் அம்மாவால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்பதால். சிறுபான்மை ஓட்டுக்காக பெரும்பான்மை இளைஞர் ஓட்டுகளை இழப்பர். தான் ஒரு விபத்து தலைவர்தான், அடிப்படையில் வெல்லமண்டிக்காரர் தான் என்று நிரூபிக்கிறார். 2026 ல் பா ஜ பெரும்பான்மை இடங்களில் இரண்டாம் இடம் வரும். இப்பவே அதிமுக சங்கு சத்தம் கேக்குது


Jagan (Proud Sangi)
ஜூன் 11, 2024 18:20

இது போன்றவர் அதிமுக தலைவராய் இருப்பது பாஜ வின் அதிஷ்டம். இவர் கட்சியை கரைத்து கடலில் சேர்த்து விடுவார். 2014 ல் தேமுதிக தலைமையில் கூட்டணி மற்றும் 7 இடங்களில் தான் பாஜ போட்டி. இப்போ தேமுதிக இல்லை, மதிமுக இல்லை மற்றும் சில கட்சிகள் இல்லை .


Sivaraman
ஜூன் 11, 2024 17:12

தோல்விக்கு மேல் தோல்வி வந்தாலும் எப்போதும் புன்சிரிப்பு .


தத்வமசி
ஜூன் 11, 2024 14:25

எடப்பாடி அவர்களே இதே புன்சிரிப்பை கடைசி வரை விடாதீர்கள். உங்கள் பிடிவாதத்திற்கு மருந்து கிடையாது. கழுதை தேய்ந்து கட்டெரும்பாய் மாறும். அதுவரை நீங்கள் அப்படியே இருங்கள். ஏற்கனவே உங்கள் ஓட்டு சதவிகிதம் புட்டுகிச்சு. அடுத்த உள்ளாட்சி தேர்தலில் இருப்பதில் ஐந்து சதவிகிதமாவது புட்டுக்கும். அதன் பிறகு அடுத்த சட்டமன்ற தேர்தலில் கேட்கவே வேண்டாம். உங்களின் பிடிவாதம் பிஜேபிக்கும், திமுகவிற்கும் வலு சேர்க்கும்.


shyamnats
ஜூன் 11, 2024 09:15

ஆழ குழி தோண்டி கட்சியை உள்ளே புதைக்காமல் பழனிச்சாமி ஓய மாட்டார் polum.


vadivelu
ஜூன் 11, 2024 07:21

சில நூறு கோடிகள் கிடைத்து இருக்கும், தொண்டர்களை வேகமாக இழக்க போகிறது. விக்ரவாண்டி இடை தேர்தல் சரியான பாடத்தை தொண்டர்களுக்கு புகட்டும். அவர்கள் தலைவர் தன்னை மட்டும் பார்த்து கொண்டு விட்டார் என்பதை புரிந்து கொண்டு விடுவார்கள். காங்கிரசை விட மோசமான நிலைக்கு இந்த கட்சி தள்ள படும்.


nakkeerapuram Samy
ஜூன் 11, 2024 06:40

புத்தி உள்ளவன் பலவான்.


nakkeerapuram Samy
ஜூன் 11, 2024 06:35

சுய புத்தி இருக்க வேனும் இல்லே சொல்புத்தி இருக்கனும் உங்களால் தாக்குபிடிக்க முடியாதுஒ ராசா எல்லாத்தையும். இழந்து கொடெநாடு கேஸை சாக்காவச்சி தூசு தட்டி உள்ள தூக்கி வச்சி கட்சியை கைமாத்திடுவாங்கய்யா ஜெயகுமார் கேபி உதயகுமார் இவர்களை நம்பி ஆத்துல இறங்கவேண்டாம் உங்க ஸாதிரம் ஆட்டம் கண்டால் இரவு 12 மணிகக்கே சசிகலா கேட்வாசல்ல நிற்பாங்க காலிவிழ நஷ்டம் இலைக்கே எடப்பாடியார்தான் இருக்கனுமென்ற ஆவசியமில்லை மெஜாரிட்டி பக்கம் ஓடி விடுவாராகள் எச்சரிக்கை..உதயகுமாரால்தான் சசி கவுந்தது அடிமைகளை நம்பி ரிஸாக் எடுக்கவேண்டாம்..பலிகடா எடப்பாடியார்தான் ஆவார்


Bala
ஜூன் 11, 2024 02:51

அதிமுக தொண்டர்கள் பல்வேறு இடங்களில் பெருவாரியாக பாஜகவில் இணைந்து வருகிறார்கள். இனியும் அதிமுகவை நம்பி பயனில்லை. பாஜகவில் உழைத்தாலாவது நல்ல பதவிகளை பெறமுடியும் ஏனென்றால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப்போவது பாஜகதான்


MURUGAN TJ
ஜூன் 10, 2024 23:52

விதி வலியது


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி