உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐந்து நாட்கள் சட்டசபை கிடையாது; சொந்த ஊருக்கு சென்ற எம்.எல்.ஏ.,க்கள்

ஐந்து நாட்கள் சட்டசபை கிடையாது; சொந்த ஊருக்கு சென்ற எம்.எல்.ஏ.,க்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபைக்கு ஐந்து நாள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.தமிழக சட்டசபையில், மார்ச் 14ம் தேதி பொது பட்ஜெட், 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 24ம்தேதி முதல், துறை வாரியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்து வருகிறது. அமைச்சர்கள் தங்கள் துறை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.இன்று மகாவீர் ஜெயந்தி என்பதால், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 12, 13ம் தேதி, சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை நாட்களாகும். மேலும், 14ம் தேதி தமிழ் புத்தாண்டு என்பதால், அன்றும் அரசு விடுமுறை. எனவே, இன்று முதல், 14ம் தேதி வரை, சட்டசபை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, நேற்று சட்டசபை முடிந்ததும், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மீண்டும் 15ம் தேதி சட்டசபை கூட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

K.Ramakrishnan
ஏப் 10, 2025 19:51

சென்னையில் இருந்தால் மட்டும் என்ன சாதிக்கப் போகிறார்கள்? அதிமுக,பா.ஜ. என்றால் தினமும் வெளிநடப்பு.


Barakat Ali
ஏப் 10, 2025 11:40

சட்டசபை நடந்தாலும் பாட்டு, கூத்து, கேலி, கிண்டல், வெட்டி, அடாவடிப் பேச்சுக்கள் ....வேறு என்ன நடக்குது ????


Narayanan
ஏப் 10, 2025 10:24

மஹாவீரஜயந்திக்கு தமிழக அரசு விடுமுறையா அதிசயமாக இருக்கு .


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 10, 2025 10:03

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாட கொண்டு வா ஒரு தீவு


rasaa
ஏப் 10, 2025 09:44

5 நாட்கள் சகல குடும்பங்களுடன் ஊட்டி, கொடைகானல், ஏற்காடு மற்றும் பல இடங்களுக்கு பிரயாணம். ஜாலி.


Kalyanaraman
ஏப் 10, 2025 08:58

ஈடி அடுத்து எங்கு வேணாலும் பாயலாம் என்ற பயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகிறது. ஆதலால், தொடர் விடுமுறை என்ற பெயரில் அவரவர் ஊருக்கு போய் மேற்படி விஷயங்கள் ஜரூராக நடக்கும் என நம்பலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை