உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.எல்.ஏ., அருளை நீக்க அதிகாரம் இல்லை: அன்புமணி மீது ராமதாஸ் கடும் கோபம்

எம்.எல்.ஏ., அருளை நீக்க அதிகாரம் இல்லை: அன்புமணி மீது ராமதாஸ் கடும் கோபம்

சென்னை: ''பா.ம.க., -- எம்.எல்.ஏ., அருள், கட்சியில் நீடிக்கிறார்; இணைப் பொதுச்செயலராக தொடர்வார்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள், ராமதாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவித்தார். இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி:பா.ம.க.,வில் இருந்து, எம்.எல்.ஏ., அருளை பொறுப்பில் இருந்து நீக்க, அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பா.ம.க., நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அருள், பா.ம.க.,வின் எம்.எல்.ஏ., மட்டுமல்ல, கட்சியின் கொறடா. கட்சியின் சட்டசபை குழு தலைவராக, ஜி.கே.மணி இருக்கிறார்.ஜி.கே.மணி வாயிலாக சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துதான், அருளை நீக்க முடியும். அதற்கு கட்சி நிறுவனரான நான் அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. பா.ம.க., இணைப் பொதுச்செயலர், நிர்வாகக் குழு உறுப்பினர், எம்.எல்.ஏ., என மூன்று பொறுப்புகளில் உள்ளார். அதே நிலையில் அருள் தொடருவார். என் மனம் வேதனைப்படும் அளவுக்கு, கட்சியில் பலர் செயல்படுகின்றனர். அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, பா.ம.க.,வை நடத்துகிறேன். தொடந்து நானே வழிநடத்துவேன். தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேசி வருவதாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு கூடித்தான், கூட்டணி பற்றி முடிவு செய்ய வேண்டும். வரும் ஆக., 10ல், நடைபெறும், பா.ம.க., மகளிர் மாநாடு ஏற்பாடுகளை கவனிக்க, பூம்புகார் செல்கிறேன். அதன் பின், பொதுக்குழு, செயற்குழு கூட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது, அன்புமணி தொடர்பான கேள்விகளையே நிருபர்கள் தொடர்ந்து கேட்க, அதை ராமதாஸ் தவிர்த்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RRR
ஜூலை 04, 2025 11:55

கருணாநிதியும் ராமதாசும் ஒண்ணு... இதை அறியாதவன் வாயில மண்ணு...


Minimole P C
ஜூலை 04, 2025 09:33

People shall once for all ignore this commission party PMK. Shameless guys to change alliance in every election. Where they get more they go there. No policy and principle nothing. TN is the trendsetter in corruption for whole India. Both father and son never uttered a single word against corruption. All the time share the loot and pretend as if it is for people. We shall understand these parasites.


Gurumoorthy
ஜூலை 04, 2025 08:44

ஏம்பா அப்பா புள்ள உங்களுக்கு வேற வேலை கிடையாதா. ஒருத்தர் நீக்குறாரு ஒருத்தர் சேர்க்கிறார்.. தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் நிறைய வேலைகள் விஷயங்கள் உள்ளன. தயவு செஞ்சு ரெண்டு பேரும் ஓரமா போய் விளையாடுங்க. விளையாண்டுகிட்ட யாரு கிட்ட எவ்வளவு பொட்டி வாங்கலாம் என்று கணக்கு போடுங்க...


naranam
ஜூலை 04, 2025 05:46

தினமலர் இந்த அறிவுகெட்ட நாடகம் பற்றிய செய்திகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். பெருவாரி மக்கள் பாமக என்னும் ஜாதி வெறி கட்சியை வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


Natarajan Ramanathan
ஜூலை 04, 2025 04:57

பாமகவை அழிக்க கேடுகெட்ட திமுக எனும் நரி செய்யும் முயற்சிகள்தான் இந்த அப்பா மகன் சண்டை.


Mariadoss E
ஜூலை 10, 2025 18:33

அப்பா மகன் சண்டையில் திமுக எங்கு வந்தது என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.....


V K
ஜூலை 04, 2025 04:31

எனயா இது சின்ன குழைந்தை மாதிரி இருக்கு நீ அவனை நீக்க அவன் உன்னை நீக்க