உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்!

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்!

சென்னை: சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து, முதல்வர் ஸ்டாலின், இ.பி.எஸ்., இடையே காரசார விவாதம் நடந்தது. பிறகு குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கு 154 பேர் எதிர்ப்பும், 63 பேர் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (மார்ச் 17) காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அ.தி.மு.க., சார்பில் அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க செங்கோட்டையன், ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எழுந்து ஆதரவு தெரிவித்த நிலையில் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் அவையை விட்டு சபாநாயகர் அப்பாவு வெளியேறினார். துணை சபாநாயகர் அவையை நடத்தினார்.சட்டசபையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது: அவை தலைவர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார். அனைத்து உறுப்பினர்களையும் சமமாக நடத்த வேண்டியது சபாநாயகரின் கடமை. ஆளுங்கட்சியின் எண்ணத்திற்கு ஏற்ப குறைந்த நாட்களே சபாநாயகர் அவையை நடத்தி உள்ளார். கருப்பு சட்டை அணிந்து வந்ததால் அ.தி.மு.க., உறுப்பினர்களை காண்பிக்காமல் தொலைக்காட்சிகளில் இருட்டடிப்பு செய்வதா? அ.தி.மு.க., சார்பாக கொடுக்கப்படும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை; அ.தி.மு.க., வெளிநடப்பு செய்தால் 'போங்க... போங்க...' என்று சபாநாயகர் கிண்டல் செய்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

துரைமுருகன் பதில்

இதற்கு, 'சபாநாயகர் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் வேண்டுமானாலும் சொல்லுங்கள், நாங்கள் பதில் சொல்கிறோம்' என்றார்

முதல்வர் ஸ்டாலின்

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சபாநாயகர் மீதான தவறுகளை எடுத்துச் சொல்வதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. கடந்த கால சம்பவங்களுக்கும், அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்? நாங்களும் பேச ஆரம்பித்தால் அவையில் மீண்டும் கூச்சல் ஏற்படும். ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் அப்பாவு; பணிவானவர். அதே நேரத்தில் கண்டிப்பானவர். இந்த இரண்டும் இல்லாவிட்டால் அவையின் கட்டுக்கோப்பு போய் விடும். அப்பாவு கனிவானர், அதேநேரத்தில் கண்டப்பானவரும் கூட. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கண் ஜாடையாக கூட அப்பாவுவிடம் பேசியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சபாநாயகர் அப்பாவு ஜனநாயக கொள்கையில் நம்பிக்கை உடையவர். எதிர்க்கட்சி உறுப்பினரர்கள் மீதும் பாசமும், பற்றும் உடையவர் சபாநாயகர் அப்பாவு. அமளியில் ஈடுபடுவர்களை அமைதிப்படுத்தவே சபாநாயகர் விரும்புவார். அவையில் இருந்து வெளியேற்ற விரும்ப மாட்டார். அ.தி.மு.க.,வின் உட்கட்சி பிரச்னையை திசைத்திருப்ப இந்த தீர்மானமா? இவ்வாறு அவர் பேசினார். வி.சி.க., காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தோல்வி

பிறகு குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து டிவிசன் அடிப்படையில் நடத்தப்பட்ட எண்ணி கணிக்கும் ஓட்டெடுப்பிலும் தோல்வி அடைந்தது.

154 பேர் எதிர்ப்பு

நம்பிக்கையில்லா தீர்மானம் குரல், டிவிஷன் என இருமுறைகளிலும் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு. இத்தீர்மானத்திற்கு 154 பேர் எதிர்ப்பும், 63 பேர் ஆதரவும் தெரிவித்திருந்தனர். நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பா.ம.க., கலந்து கொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

vbs manian
மார் 17, 2025 22:42

வெகு சிலரே தாங்கள் வகிக்கும் பதவிக்கு அழகு சேர்க்கிறார்கள்.


R.P.Anand
மார் 17, 2025 18:15

அவரு நீ நெனைக்கிரா மாதிரி பள்ளி கூட வாத்தியார் இல்லடா குஸ்தி வாத்தியார்


K.Ramakrishnan
மார் 17, 2025 17:45

பா.மக. கலந்துகொள்ளவில்லை என்பது ஒரு செய்தியே அல்ல. அவர்கள் கலந்து கொண்டாலும் தீர்மானம் தோல்வி தான். அவர்கள் இரு தரப்புக்கும் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளப் பார்க்கின்றனர்.காரணம், ராமதாஸ் மகனுக்கு எம்.பி. பதவி பேரம் தான்..


magan
மார் 17, 2025 16:53

தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள் காரசார விவாதம் என்பது பேப்பரை பார்த்து படிப்பதில்லை


P. SRINIVASAN
மார் 17, 2025 16:31

இந்த கருத்து மோடிக்கு பொருத்தமானது. இந்திய வரலாற்றில் எதைப்பதியும் கவலைப்படாத ஒரே பிரதமர் நமது மோடி அய்யாதான். பாவம் இந்தியா. பாவம் மக்கள்.


செல்வேந்திரன்,அரியலூர்
மார் 17, 2025 17:05

ஏலே சீனிவாசா இங்க என்ன பிரச்சனை நடந்து கொண்டு இருக்கிறது நீ ஏன் தேவையில்லாமல் இதில் பிரதமர் மோடியை இழுக்கிறாய்? எங்கயிருந்தாவது எவனாவது ஒருத்தன் அறிவாலயத்துக்கு முட்டுக் கொடுக்க ஓடி வந்துடுறானுக


raja
மார் 17, 2025 16:05

என் வாழ்நாளில் முதல் முறையாக தமிழக சட்டசபை சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்து ஒட்டெடெப்பு நடத்தியது இது தான் முதல் முறை.. இதைவிட கேவலம் இந்த அப்பாவுக்கும் சரி திராவிட மாடல் ஆட்சிக்கும் வேறு இருக்க வாய்ப்பில்லை ..


saravanan
மார் 17, 2025 15:56

முதல்வரின் வாதத்திலிருந்து ஒர் விஷயம் நன்றாக புரிகிறது. சபாநாயகராக இருப்பரின் பெயர் அப்பாவு என்றும் அவர் ஓர் அப்பாவி என்பதும்


அசோகன்
மார் 17, 2025 14:26

திருடர்கள் நடத்தும் சபைக்கு திருடன்தானே தலைமை வகிப்பான்...


எவர்கிங்
மார் 17, 2025 14:20

சாபக்கேடு


Venkataraman
மார் 17, 2025 14:13

அப்பாவுவை பற்றி அவருடைய அண்ணன் என்ன பேசியிருக்கிறார் என்பதை வீடியோ போட்டு காட்டியிருந்தால் சரியாக இருந்திருக்கும். அப்பாவுவை பற்றி மிக கேவலமாக பேசியிருந்த அந்த பேச்சு நேர்காணல் நிகழ்ச்சியாக தொலைக்காட்சியில் வெளிவந்தது. அந்த பேச்சு ஒன்றே போதும் அப்பாவுவின் வண்டவாளத்தை வெளிப்படுத்த.


முக்கிய வீடியோ