உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமான பயணியர் அணியும் நகைக்கு சுங்க வரி கூடாது: கோர்ட் உத்தரவு

விமான பயணியர் அணியும் நகைக்கு சுங்க வரி கூடாது: கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தனிப்பட்ட முறையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள விமான பயணியர் அணியும் நகைகளுக்கு சுங்க வரி விதிக்கக் கூடாது' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் இருந்து விமானத்தில் டில்லி வந்துள்ளார். அவர் அணிந்திருந்த, 200 கிராம் தங்கத்துக்கு, விமான நிலையத்தில் சுங்க வரி மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவை பறிமுதல் செய்யப்பட்டன.வரி விதிக்கப்பட்டதை எதிர்த்தும், நகைகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடக் கோரியும் அந்தப் பெண் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த டில்லி உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:விமானப் பயணியர் எடுத்து வரும் பொருட்கள் தொடர்பாக சட்ட விதிகளில், 2016ல் திருத்தம் செய்யப்பட்டது. அந்த விதிகளின்படி, பயணியரின் தனிப்பட்ட உடைமைகளில், நகைகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், 1988 விதிகளில், தனிப்பட்ட முறையில் அணியும் சொந்தமான நகைகள், பயணியரின் உடைமையாக பார்க்கப்பட்டது.புதிய திருத்தத்தின்படி, பயணியர் எடுத்து வரும் அல்லது அணியும் எந்த நகைக்கும் சுங்க வரி விதிக்கப்படுகிறது. பயணியர் அந்த நகைகளை, வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்ததாகவே, இந்த விதியின்படி கருதப்படுகிறது. இது தவறாகும்.நகை மற்றும் பயன்படுத்தும் சொந்த நகை என்பதற்கு வேறுபாடு உள்ளது. வழக்கமாக ஏற்கனவே அணியும் நகைகள், இங்கே வாங்கப்பட்டிருக்கலாம். அதை அணிந்து அவர்கள் வெளிநாடு சென்று, திரும்பியிருக்கலாம். அதை வெளிநாட்டில் வாங்கியதாக கருதி, எப்படி வரி விதிக்க முடியும்.ஏற்கனவே உள்ள விதிகளின்படி, பயன்படுத்தும் அல்லது அணியும் பழைய நகைகளுக்கு, சுங்க வரி விதிக்க கூடாது. உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் இதை உறுதிபடுத்துகின்றன.அதனால், இந்த பெண் அணிந்திருந்த நகைகளை, அவருடைய உடமையாகவே பார்க்க வேண்டும். அதற்கு வரி மற்றும் அபராதம் விதிக்க முடியாது. மேலும், உடனடியாக அந்த நகைகளை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

JRAAMESH PRABHU
டிச 10, 2024 17:45

குட் அண்ட் வெரி நைஸ்


JRAAMESH PRABHU
டிச 10, 2024 17:43

குட் ?


Mohan
டிச 06, 2024 02:34

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் தாலி செயின் 200 கிராம் போடுவது வழக்கம்.


SARAVANAN P
டிச 05, 2024 14:27

அருமையான தீர்வு


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 05, 2024 14:18

இந்த நடைமுறை ஏற்கனவே உள்ளது ..... அது தெரிந்துதான் அந்தப்பெண்ணே அணிந்திருப்பார் ..... நானும் நான் வாங்கிய தங்க செயினை அணிந்து வந்தேன் .... அதுவும் இரு முறை ..... எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை .....


KALIDASAN
டிச 05, 2024 09:49

இந்த விதி ஏற்கனவே உள்ளது


KRISHNAN R
டிச 05, 2024 09:15

புதிய விதி படி, இனி மணமான பெண்கள் மஞ்சள் கயிருடன் பயணம் செய்ய வேண்டும்


Kasimani Baskaran
டிச 05, 2024 17:10

தாலி செயின் என்றால் நூறு கிராம் வரை கூட பொதுவாகவே கவலைப்பட மாட்டார்கள். 200 கிராம் என்றால் ரொம்பவே ஓவரான கனம் மற்றும் கவனத்தை ஈர்க்குமளவுக்கு தனியாக தெரியும்.


Saai Sundharamurthy AVK
டிச 05, 2024 08:26

ஒரு பயணி இங்கிருந்து போகும் போது எடுத்துச் செல்லும் நகைகளை எடை போட்டு பாஸ்போர்ட் காப்பியுடன் ஒரு ரெகார்ட் செய்து கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே பயணி திரும்பி வரும் போது, அவர் வைத்திருக்கும் நகைகளை எடை போட்டு சரி பார்த்து, அதிமாக இருந்தால் சலுகைகளை கணக்கிட்டு, அதன் பிறகும் அதிகமாக இருந்தால் மட்டுமே வரி போடலாம்!! இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா ????


raja
டிச 05, 2024 06:54

குறிவிகளுக்கு இனி கொண்டாட்டம் தான்....


Kasimani Baskaran
டிச 05, 2024 06:09

200 கிராம் நகை அணிந்து ஒருவர் ஜாலியாக விமான சிப்பந்தியாக இருக்கிறார் என்றால் அது ஏமாற்று வேலை. தொழில் ரீதியாக செல்லுவோர் இவ்வளவு நகை அணிய வாய்ப்பில்லை. வேறு ஏதாவது தனிப்பட்ட விழா என்றால் சுங்கத்துறையிடம் ஒப்புதல் பெற்று கடப்பிதழில் பதிவு செய்திருக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை