உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசில் பணியாற்ற விருப்பம் இல்லை; மணிமுத்தாறு பட்டாலியன் எஸ்.பி., ராஜினாமா!

போலீசில் பணியாற்ற விருப்பம் இல்லை; மணிமுத்தாறு பட்டாலியன் எஸ்.பி., ராஜினாமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'காவல் துறையில் பணிபுரிய விருப்பம் இல்லை' எனக்கூறி, போலீஸ் எஸ்.பி., அருண், திடீரென தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் அருண். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, 2013ல் காவல்துறை டி.எஸ்.பி.,யாக பணியில் சேர்ந்தார். கடந்த ஆண்டு எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார்.திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் செயல்படும், சிறப்பு காவல் படை, 12வது பட்டாலியனின் கமாண்டன்ட்டாக பணிபுரிந்து வந்தார். அருண் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. காவல் துறையில் பணிபுரிய விருப்பம் இல்லை என்றும் கூறி வந்துள்ளார்.பல முறை தன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக, சக அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.அவர்கள் விடுமுறையில் சென்று வாருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், ராஜினாமா செய்ய முடிவெடுத்த அருண், மூன்று மாதங்களுக்கு முன், ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி., ஜெயராமிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.அவர் மறுபரிசீலனை செய்யும்படி தெரிவித்துள்ளார். அதை அருண் ஏற்காததால், அவரது ராஜினாமா கடிதத்தை, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு அனுப்பி வைத்தார். டி.ஜி.பி., அலுவலக உயர் அதிகாரிகள், ராஜினாமாவுக்கான காரணத்தை கேட்ட போது, காவல் துறையில் பணியாற்ற விருப்பம் இல்லை. மேலும் வெளிநாடு செல்ல உள்ளேன் என்று கூறியுள்ளார்.அதைத்தொடர்ந்து, அவரது ராஜினாமா கடிதத்தை, அரசுக்கு டி.ஜி.பி., அலுவலக அதிகாரிகள் அனுப்பினர். அவரது ராஜினாமா கடிதத்தை, இரு தினங்களுக்கு முன் அரசு ஏற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

என்றும் இந்தியன்
ஜூன் 16, 2025 17:29

கூடுதல் டி.ஜி.பி., ஜெயராமிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்?????. கடத்தல் வழக்கில் பணியில் உள்ள கூடுதல் டி.ஜி.பி.க்கு ஜெயராமுக்கு தொடர்புள்ளது. கடத்தப்பட்ட வாலிபரை போலீஸ் வாகனத்தில்தான் விட்டு சென்றுள்ளனர். அந்த போலீஸ் வாகனத்தை போலீஸ்காரர் ஓட்டியுள்ளார். கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெகன் மூர்த்தியை கஸ்டடியில் வைத்து விசாரித்தால்தான், கூடுதல் டி.ஜி.பி.யின் பங்கு என்னவென்று தெரியவரும்" என்று???என்ன நடக்குது டாஸ்மாக்கினாட்டில்


Barakat Ali
ஜூன் 16, 2025 14:07

சார்களுக்கு கீழே வேலை பார்க்க விருப்பமில்லையோ ????


Sundaran
ஜூன் 16, 2025 13:48

தி மு க அரசின் தொல்லை தான் காரணம் பஞ்சாயத்து உறுப்பினருக்கு கூட அடிபணிய வேண்டி இருக்கிறது. இவருக்கு தன்மானம் அதிகம் அதான் விருப்ப ஓய்வில் செல்கிறார்


Ramesh Sargam
ஜூன் 16, 2025 13:21

கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு பணிவிடை செய்வதுதான் காவலர்கள் பணியா? இவர் அப்படி பணி செய்ய விருப்பப்படாதால் ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கலாம்.


Rajah
ஜூன் 16, 2025 11:57

மானமுள்ள யாரும் கேவலமான அரசியல்வாதிகளுக்கு அடிமைப்பணி செய்ய விரும்பமாட்டார்கள்.


அப்பாவி
ஜூன் 16, 2025 10:27

வெளிநாட்டில் என்ன வேலை செய்தாலும் கௌரவமா பொழைக்கலாம்னு நினைக்கிறாரு. வாழ்த்துக்கள்.


vijai hindu
ஜூன் 16, 2025 10:05

இதற்கு ஒரே வழி தமிழ்நாட்டு மக்கள் திமுகவை அரசை வரும் தேர்தலில் முடிவு கட்ட வேண்டும் தயவுசெய்து மீண்டும் வாக்களித்தால் ஆண்டவனா வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது


m.arunachalam
ஜூன் 16, 2025 09:34

இது அவரின் சொந்த முடிவு. நல்ல முடிவுதான். பணிச்சுமை, பலவிதமான மனசு ஏற்காத நெருக்கடிகள் இப்போது எல்லாத் துறையிலும் உள்ளது என்பது உண்மை. கனரக வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இந்த சங்கடம் உள்ளது.


Manaimaran
ஜூன் 16, 2025 09:28

அடுத்து த.வெ.க அல்லது பி.சே.பி. ல. ஐக்கியம்


raja
ஜூன் 16, 2025 09:15

ஆட்டோ வீட்டுக்கு வரும் என்பது எல்லாம் சகஜம் ...


சமீபத்திய செய்தி