உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.சி.ஐ.டி., விசாரணை மீது நம்பிக்கை இல்லை; சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

சி.பி.சி.ஐ.டி., விசாரணை மீது நம்பிக்கை இல்லை; சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

சென்னை: சி.பி.சி.ஐ.டி., விசாரணை மீது நம்பிக்கை இல்லை என 'யு டியூபர்' சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.'யு டியூபர்' சவுக்கு சங்கர் வீட்டில், கழிவு நீர் கொட்டி, அறைகளில் மலத்தை வீசிய, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இன்னும் வழக்கின் முக்கிய குற்றவாளி கைது செய்யப்படவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7v1yd8gf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (மார்ச் 27) சென்னை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் சவுக்கு சங்கர் புகார் அளித்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் சவுக்கு சங்கர் கூறியதாவது: சட்டப்படி விசாரணை நடத்த வேண்டியது அவர்களது கடமை. என் வீட்டில் கழிவு நீர் கொட்டிய விவகாரம் தொடர்பாக சரியான விசாரணை நடைபெறவில்லை. சி.பி.சி.ஐ.டி., இந்த வழக்கை நியாயமாக நடத்தும் என்று நம்பிக்கை இல்லை. புகாரில் என் வீட்டின் கதவு உடைக்கப்பட்டது. 50 பேர் கும்பலாக வந்து என் தாய் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தார்கள் என்று கூறியுள்ளேன். கோர்ட்டில் வழக்கு தொடர்வேன். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கையில் எடுத்து அகில இந்திய அளவில் தன்னை தலைவராக ஆக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்கிறார். என் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, தி.மு.க., தவிர அனைத்து கட்சி தலைவர்களும் கண்டித்து விட்டார்கள். உடனடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து இதில் சம்பந்தபட்ட அனைவரையும் கைது செய்துவிட்டோம் என்று சொல்வது தான் அரசியல் தலைவருக்கான கடமை. இந்த ஆட்சியில் நடப்பது எதுவுமே தமிழக முதல்வருக்கு தெரிவதில்லை. இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

முருகன்
மார் 27, 2025 19:06

உமக்கு சிபிஐ வர வேண்டும் நாவை அடக்கி பேசினால் பிரச்சினை இல்லை. பரபரப்புக்கு பேசினால் பிரச்சினை தான்.


Baskaran M
மார் 27, 2025 20:52

No one have right to point out crime of the ruling politicians. It is the rule of Hitler


P. SRINIVASAN
மார் 27, 2025 16:55

இந்த கூலிக்கு மாரடிக்கிற சங்கருக்கு CBI வேண்டாம் FBI கூப்புடுலாம்.


Raja
மார் 27, 2025 16:53

மிகவும் சரி.


Raja
மார் 27, 2025 16:52

மிகவும் சரி


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 27, 2025 16:39

வேங்கை வயலில் ஆரம்பித்தது தொடர்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான். பொள்ளாச்சி பொள்ளாச்சி என்று கூவி பொள்ளாச்சியை ஏலம் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள் இன்று தமிழகம் முழுக்க விதவிதமாக பொள்ளாச்சி சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியவில்லை. போக்சோ செய்திகள் தொடர்கதை ஆகி விட்டது. இதனை உணர்ந்தாலும் திமுக அரசு திருந்தினால் தமிழகத்திற்கு நல்லது. இல்லாவிட்டால் பக்கத்து மாநிலம் ஆந்திரா பக்கத்து நாடு ஹீலங்கா போல் இங்கும் ஆகிவிடும்.


PR Makudeswaran
மார் 27, 2025 15:35

சி பி சி ஐ டி போலீஸ் தமிழ் நாட்டின் கண்ட்ரோல்.இவர்கள் ஒழுங்காக செய்வார்களா? வெறும் கண் துடைப்பு. வேங்கை வயல் அப்புறம் நெல்லையில் ஒரு கேஸ் எல்லாம் ஊத்தி மூடிய கதை .


பாமரன்
மார் 27, 2025 15:24

சரி சரி சிஐஏ விசாரணைக்கு உத்தரவு போட்ரலாம்... இல்லைன்னா சிபீபீபீஐயை விட்டு சுவரேறி குதித்து வந்து விசாரிக்க சொல்வோம்...அடுத்த ஒரண்டை இழுத்து வாங்க


N Sasikumar Yadhav
மார் 27, 2025 15:59

நீங்க திமுகவின் பரம்பரை கொத்தடிமை என்பது உலகத்துக்கு தெரியும் அப்படியிருக்க நீங்க எதற்காக முட்டு கொடுத்து கருத்து போடவேண்டும்


SUBRAMANIAN P
மார் 27, 2025 16:05

தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தா தெரியும். அதுவரை வாய் கிழியும்


M R Radha
மார் 27, 2025 16:57

நீங்க 200ரூவா வாங்கிண்டு முட்டு கொடுக்கலேன்னா பெருந்தொகை மனிதக்கழிவை ஒங்க வீட்ல கொட்டிடுவாரு. ஓகேவா?


sankar
மார் 27, 2025 17:07

திமுக சோம்பு ஓவரா ஆடுது - பேஸ் மட்டம் சரியில்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை