உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தி மீது வெறுப்பு இல்லை; திணிப்பை தான் எதிர்க்கிறோம்; கேரளாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு

ஹிந்தி மீது வெறுப்பு இல்லை; திணிப்பை தான் எதிர்க்கிறோம்; கேரளாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோழிக்கோடு: பா.ஜ.,வின் ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். கேரளாவின் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா நடத்திய கலை, இலக்கிய திருவிழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழகத்தில் இருந்து வெளியே இருக்கிறேன். ஆனால், சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வு தான் இருக்கிறது. திராவிடம் என்பது தமிழக கலாசாரத்தின் பெருமை. தமிழகமும், கேரளாவும் நீண்ட ஆண்டுகளாக இணைந்து பயணிக்கின்றன.1924ல் ஈ.வே.ரா., கேரளாவில் வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றார். அதேபோல, கேரளாவில் பிறந்த டி.எம் நாயர், தமிழகத்தில் நீதிக்கட்சி தொடங்குவதற்கு முக்கியமானவர். தென்னிந்திய நல உரிமை சங்கத்தை தொடங்கியவர். இது தமிழகத்தில் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் தமிழகமும், கேரளாவும் தான், அதிக முற்போக்கு சிந்தனை கொண்ட மாநிலங்களாகும். பாசிசத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. தமிழக, கேரள மக்கள் பாசிச கொள்கையை எதிர்ப்பது ஏன் என்றால், இந்த இரு மாநிலங்களிலும் முற்போக்கு சிந்தனை பரந்து விரிந்துள்ளது. இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கக் காரணமே திராவிட இயக்கம் தான். ஹிந்தி மீது வெறுப்பு இல்லை. திணிப்பை தான் எதிர்க்கிறோம். பா.ஜ.,வின் ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும், இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

xyzabc
நவ 08, 2024 09:58

அப்போ அந்த டீ-ஷர்ட் ஹிந்தி தெரியாது போடா ?


C G Chinnaswamy
நவ 08, 2024 08:07

இதுதான் உதயாநிதியின் உருட்டல். தமிழக பள்ளிகளில் இந்தி ஒரு ஆப்ஷனல் பாடமாக வைப்பது எப்படி இந்தி திணிப்பாக்கும்? ஏன் திமுக இந்தியை ஆப்ஷனல் பாடமாக வைக்க அனுமதிக்கவில்லை?


Venkatesan Srinivasan
நவ 03, 2024 18:20

வாக்களிக்கும் பெரும்பான்மை மக்கள் - திருத்தம் - பெற்ற வாக்குகளில் தனிப் பெரும்பான்மை பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. இத்தகைய தேர்தல் முறை மாற்றப்பட்டு குறைந்தது 60 சதவீத வாக்குகள் பெற்றவர் என மாற்றம் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் வேட்பாளர்கள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றவர் அறிவிக்கலாம். மக்களின் தனிப்பட்ட வாழ்வியல் மத நம்பிக்கை அடிப்படையில் கிராமப்புறங்களில் தேர்தலுக்கு முன் வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் உணவு விருந்தில் உணவின் மேல் சத்தியம் செய்வது ஒழிக்க வேண்டும்.


V RAMASWAMY
நவ 03, 2024 12:35

தி மு கவின் மீது வெறுப்பில்லை, அவர்களின் சுரண்டல், லஞ்சம், கொள்ளை, இந்து வெறுப்பு, பிராமண எதிர்ப்பு, கோயில்கள் இடிப்பு, குடும்ப அரசியல் இந்த கொள்கையைத்தான் மக்கள் எதிர்க்கிறார்கள்.


dhandapani R
நவ 03, 2024 06:06

கோபாலபுரத் விட்டு வெளியே வந்து பாருங்கள் தமிழ்நாடு பூராவும் ‌ஒவ்வொரு கடையிலும் ஹிந்தி போர்டு தான் இருக்கிறது இனிமேல் உங்க கொள்கை எல்லாம் வின் பேச்சுதான்


ராமகிருஷ்ணன்
நவ 03, 2024 05:57

தொண்ணை முதல்வன் ஏதோ புது ரூட் போடுரான். குடும்ப உறுப்பினர்கள் மீது ஏதாவது பெரிய கேஸ்கள் வர உள்ளதா, தேவையில்லாமல் மத்திய அரசின் காலில் விழ மாட்டார்கள்.


சிவராஜ்
நவ 02, 2024 22:56

தமிழ் நாட்டில் பணம் உள்ள பசங்க ஹிந்தி படிக்க முடிகிறது. பணம் இல்லாத பசங்க தான் இவனுங்களுக்கு இலக்கு மற்றும் தேவை.


சிவராஜ்
நவ 02, 2024 22:52

ஹிந்தி எதிர்ப்பு வேறே... ஹிந்தி படிப்பு மண்டையில் ஏறலை என்பது வேறு. ஹிந்தி தெரியாது போடா என்று குரைத்தவை எங்கே தொலைந்தன....


N Sasikumar Yadhav
நவ 02, 2024 22:16

திருட்டு திமுக களவானிங்க நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் மாணவர்களிடம் பணத்தை அராஜகமாக வசூலித்து திணிக்கிறீர்கள் திராவிட மாடல் தொணை மொதல்வரேய்


Ramesh Sargam
நவ 02, 2024 22:11

ஹிந்தியை முற்றிலும் இவர்களால் வெறுக்க முடியாது. ஏன் என்றால் இவர்கள் நடத்தும் அநேக பள்ளிக்கூடங்களில், பல திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் ஹிந்தி மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. சும்மா மக்களை ஏமாற்ற இப்படி எதிர்ப்பதுபோல தில்லுமுல்லு நாடகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை