உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில் நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிராக, திமுக கூட்டணி மனுவில் அவர் (பழனிசாமி) ஏன் இணைந்துள்ளார். அவருக்கு வேறு வேலை ஏதும் இல்லை. அதனால் விமர்சனம் வைக்கிறார். அதை பற்றி நான் கவலைப்படவில்லை. எங்கள் வேலையை நாங்கள் பார்த்து கொண்டு இருக்கிறோம். எஸ்ஐஆர் குறித்து நீதிமன்றத்திற்கு போய் இருக்கிறோம். நாளைக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதற்கு பிறகு பாருங்கள்.குற்றச்சாட்டுகள் கூறும் எதிர்க்கட்சிகளுக்கு வேற, வேலை கிடையாது. அதை தான் அவர்கள் செய்து ஆக வேண்டும். எத்தனை முனை போட்டி வந்தாலும், திமுக தலைமையில் இருக்கிற கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும். 7 வது முறையாக நிச்சயமாக திமுக ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகளை பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

திட்டங்கள் தொடக்கம்

முன்னதாக ரூ. 767 கோடி மதிப்பிலான திட்டங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் புதுக்கோட்டைக்கு அறிவித்த 6 புதிய அறிவிப்புகள் பின்வருமாறு:1. அறந்தாங்கி வீரகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடி செலவில் புனரமைக்கப்படும்.2. கீரமங்கலம் பகுதி விவசாயிகள் நலன்கருதி காய்கறி குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்3. வடகாடு ஊராட்சியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.4. புதுக்கோட்டை இளைஞர்களுக்கு ஐடி துறையில் வேலை வாய்ப்பு அளிக்க நியோ டைடில் பார்க் அமைக்கப்படும்.5. கந்தர்வக்கோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் 6. பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Murthy
நவ 10, 2025 19:52

இதுவரை திமுக வெற்றிபெறும் என்று சொன்னார் இப்போது கூட்டணி என்கிறார் ....அப்படியானால் அடுத்தது கூட்டணி ஆட்சிதான் போலும் . ....


Vasan
நவ 10, 2025 20:53

எத்தனை வருடங்களாக திருமா காத்திருக்கிறார், அவருக்கும் ஆசை இருக்கும் அல்லவா? அதனால் தான் தேர்தலில் கூட்டணி, ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை எழுப்புகின்றார். தமிழக காங்கிரஸ்க்கும் அதே ஆசை தான். இத்தனைக்கும், மத்திய சர்க்காரில் காங்கிரஸ் பல முறை திமுகவிற்கு ஆட்சியில் பங்கு கொடுத்துள்ளது. அழகிரி, கனிமொழி, ராஜா, பாலு போன்றவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தது காங்கிரஸ் தான். அனால் ஒரு முறை கூட திமுக அந்த நன்றி விசுவாசத்தை காங்கிரஸிடம் காட்ட வில்லை என்பதே காங்கிரஸ்ஸாரின் வருத்தத்திற்கு காரணமாக உள்ளதென்று அறியப்படுகிறது.


Amar Akbar Antony
நவ 10, 2025 18:20

குற்றச்சாட்டுகள் கூறும் எதிர்க்கட்சிகளுக்கு வேற, வேலை கிடையாது. அதை தான் அவர்கள் செய்து ஆக வேண்டும். உண்மை. அதைத்தானே சற்று அதிகமாக கடினமாக வேலைசெய்தீர்கள் தாங்கள் எதிர் கட்சியாக இருந்தபோது. விதைவைகள் பற்றி தங்கள் சகோதரி டஸ்மாக்கை எதிர்த்து மின்கட்டணத்தை எதிர்த்து தங்கள் குடும்பமே பதாகைகளை ஏந்தியது பெட்ரோல் விலைக்காக தாங்கள் மிதிவண்டியினை மிதித்தது இன்றும் பெட்ரோல் விலை ஜி எஸ் டி அல்ல மாநில வரிப்பட்டியலில் தான் உள்ளது குறைந்தபாடில்லை ஆக டாஸ்மாக் தமிழனை முட்டாளாக்கி அரசாட்சி செயும் தாங்கள் வீழும் நாளில் தமிழகம் தலை நிமிரும்.


HoneyBee
நவ 10, 2025 17:05

கனவு. மக்கா பாத்து


Madras Madra
நவ 10, 2025 17:05

வரும் தேர்தலில் இருந்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் அழிந்ததை போல திமுக அழிய அழுக ஆரம்பிக்கும்


RK
நவ 10, 2025 17:02

விடியல் ஆட்சி இத்துடன் முடிவடைந்தது. விரைவில் கொலை , கொள்ளை லஞ்சம் வரி உயர்வு இதிலிருந்து விடுதலை.


somasundaram alagiasundaram
நவ 10, 2025 16:47

இதெல்லாம் எப்போ 6மாதங்கள் இருக்கும் நிலையிலா.4.5ஆண்டுகளில் செய்ய முடியவில்லையே..இப்போதா செய்யப் போகிறீர்கள்


அரவழகன்
நவ 10, 2025 16:40

தன்னம்பிக்கை முக்கியம் தளராமல் பார்த்துங்க


vbs manian
நவ 10, 2025 15:50

நிஜமே.இ வர்களின் பணபலம் ஆள் பலம் யாருக்கும் இல்லை.


Saai Sundharamurthy AVK
நவ 10, 2025 15:45

சொந்த மாநிலத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள், அராஜகங்கள் கொள்ளை, கொலை போன்றவைகளை பற்றி எதுவும் வாய் திறப்பதில்லை. எப்போது பார்த்தாலும் இந்த ஸ்லோகம் தான் தினமும் சொல்கிறார்.


Mohan Mg
நவ 10, 2025 15:29

அதனால்தான் பல முனைபோட்டிகளை பெட்டி கொடுத்து உருவாகட்டுகிறார், இருமுனை போட்டியாகஇருந்தால் திமுக எப்போதும் ஜெயிக்காது.


புதிய வீடியோ