உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எத்தனை விஜய் வந்தாலும் தி.மு.க.,வை அசைக்க முடியாது: திருமாவளவன் பேச்சு

எத்தனை விஜய் வந்தாலும் தி.மு.க.,வை அசைக்க முடியாது: திருமாவளவன் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மறைமலை நகர் : செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களின் மண்டல வி.சி., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மறைமலை நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நடந்தது.கூட்டத்தில், கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: கட்டாயமாக, நாம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும். தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, நாம் நடிப்பதாக, சிலர் விவாதங்களில் கூறி வருகின்றனர்.வரும் 2026ல், நமக்கு பின்னடைவு ஏற்பட்டால் கூட, இந்த போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. கூட்டணியில் இருந்து கொண்டே, மக்கள் பிரச்னைகளை பேசுகிற துணிச்சல் உள்ள இயக்கம் வி.சி., தான்.படிப்படியாக, அரசு மதுபானக் கடைகளை மூடி, வரலாற்றில் நல்ல பெயர் எடுத்துக் கொள்ளுங்கள் என, வி.சி., வாழ்த்துகிறது. தி.மு.க., வரும் தேர்தலுக்குள் மதுபானக் கடைகளை மூடினால், எத்தனை விஜய் வந்தாலும், தி.மு.க.,வை அசைக்க முடியாது. மதுபான கடைகளை மூடினாலே வி.சி.,க்கு வெற்றி தான். வி.சி.,போராட்டத்தால் அரசு மதுக்கடைகளை மூடியது என, மக்கள் வரவேற்பர். அது தான் நமக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

M Ramachandran
செப் 20, 2024 18:46

தன் ஒத்த நலனுக்கு ஆட்சியாய் அடிமை சாசனம் எழுதி கொடுத்து தான் உண்மையான விசுவாசி ஏய்க்கிறார். ஆமென்


Sureshkumar
செப் 20, 2024 14:53

இப்படியே திமுகவுக்கு முட்டு கொடுத்து உனது வாழ்வை வளமாக்கி கொண்டாய், ஆனால் உனது சமுதாய மக்களுக்கு என்ன செய்தாய் .


RAMKUMAR
செப் 19, 2024 16:07

பயப்புடுறுயா குமாரு


Sivak
செப் 17, 2024 23:19

ரெண்டு சீட்டுக்கு எவ்வளவு பேச வேண்டியிருக்குது தெரியுமா ????


Jai Sankar Natarajan
செப் 15, 2024 18:59

நீர்தான் மண்டியிடுவதில் மன்னனாயிற்றோ


RAMESH
செப் 15, 2024 10:24

இளம் விதவைகள் நாயகி கனிமொழி...... முதல்வருக்கு விருப்பம் இல்லை.....டூபாக்கூர் மனிதர்கள்.... இவர்கள் கூட்டணி இருந்து கொண்டு எலும்பு துண்டுக்கு வாயை பிளந்து கொண்டு....மது ஒழிப்பு மாநாடு....யாரை ஏமாற்ற தெருமா கிளம்பி விட்டது


Arachi
செப் 14, 2024 23:20

பாராட்டுக்கள்.மத்தியில் எவ்வாறு கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப் படுகிறதோ அது போன்று மாநிலத்திலும் தரலாம். தமிழ் நாட்டின் தாய்மொழி கலாச்சாரம் காக்கப்பட வேண்டுமென்றால் திராவிட கட்சிகள்தான் ஆளவேண்டும். அடிச்சாலும் புடிச்சாலும் நாம் தான் ஆளவேண்டும். உங்கள் பேச்சுக்கள் எல்லாமே அற்புதம். தமிழக மீனவர்கள் மிகவும் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுகிறார்கள். நம் கோஸ்டல் கார்ட் எங்கே போனார்கள், ஏன் மாரிட்டைம் எல்லையில் நம் கோஸ்டல் காட் இல்லை. இவர்கள் ரோந்து வந்தால். ஆபத்தை தவிர்க்க முடியும். இதற்கும் தாங்கள் குரல் கொடுக்க வேண்டும்.


theruvasagan
செப் 14, 2024 22:30

தன்னோட பக்கத்துல உக்காந்திருக்கிற சினேகிதனிடம் ஒரு சேதி சொல்ல நேரடியாக பேசாமல் வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டானாம் ஒருத்தன்.


sankar
செப் 14, 2024 22:29

யார் சூப்பர் சோம்பு என்பதில் - செந்திலுக்கும் , திருமாவுக்கும் மிகப்பெரிய போட்டி


theruvasagan
செப் 14, 2024 21:08

தேர்தலுக்கு ரெண்டு நாள் முன்னாடி எப்படியும் மதுக்கடைகளை மூடியே ஆகணும். அதுவே உங்களுக்கு வெற்றி என்று பெருமை பேசுங்க. அவங்களும் நாங்க என்னிக்கோ ஒருநாள் மூடுவோம்னு சொன்னதை நிறைவேற்றிவிட்டோம் என்று கெத்தா பேசலாம். எப்படியும் ரிசல்ட் வந்த கையோட மறுபடியும் திறக்கத்தான் போறாங்க. அது பற்றி உங்களுக்கென்ன. நீங்க சொன்ன மாதிரி நடந்ததா இல்லையா என்பதுதான் முக்கியம். கொள்கை நிறைவேறின மாதிரியும் ஆச்சு. கூட்டணியில் பிரச்சனை தீர்ந்த மாதிரியும் ஆச்சு. உடனே மூடணும் சொல்லாம தேர்தலுக்கு முன்னாடி செஞ்சா போறும் என்கிற உங்கள் டெக்னிக் அபாரம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை