என்ன தான் செய்தாலும் வெள்ளம் வரும் ரூ. 5,032 கோடி செலவிட்டும் விடிவில்லையா ? அமைச்சர் நேருவின் கூற்றால் மக்கள் அதிர்ச்சி
சென்னை: எவ்வளவு உட்கட்டமைப்பு பணிகளை செய்தாலும் திடீரென பெய்யும் மழையால் சென்னையில் தண்ணீர் தேங்கத்தான் செய்யும். என நகராட்சிநிர்வாகத்துறை அமைச்சர் நேரு,நேற்று தெரிவித்தார். வெள்ள பாதிப்பில் இருந்துசென்னையை பாதுகாக்கும் வகையில் ரூ. 5,032கோடி மதிப்பில் பல்வேறு பணிகள்மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.வடகிழக்கு பருவ மழைகாலங்களில் சென்னை பெரும் வெள்ள பாதிப்பில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. கடந்த 2015-ல் பெய்த அதிக கனமழையால் சென்னை மாநகரம் முழுதும் வெள்ளத்தில் தத்தளித்தது. உடைமைகளை முற்றிலும் இழந்து மக்கள் பரிதவித்தனர். பால் , தண்ணீருக்கு திண்டாடினர். இயல்பு நிலைக்கு மக்கள் திரும்ப 10 நாட்களுக்கு மேல் ஆனது.கடந் 2023-லும் அதுபோன்று பாதிப்பு ஏற்பட்டது.இதனால் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க, தி.மு.க., அரசு ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தியது.ரூ.5,032கோடிஅக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் மாநகர் முழுதும் 5,032 கோடிரூபாயில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.குறிப்பாக கொசஸ்தலை ஆறு ஒருங்கிணைந்த வடிகால் பணிகள், 763 கி.மீ., நீளத்துக்கு 2,500கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது.அதே போல், பழைய வடிகால்வாய் இடிக்கப்பட்டு 20 செ.மீ., மழைநீர் உள்வாங்கும் வகையிலான கட்டமைப்புகள் 1,500 கோடிரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன.தற்போதும் பழைய மழைநீர் வடிகால்வாய் புனரமைப்பு, மழைநீர் வடிகால்வாய் இணைப்பு ஆகியவை 1,032 கோடிரூபாய் மதிப்பில் அமைக்கப்ப்டடுவருகிறது. அதன் படி வெள்ள தடுப்பு பணிகளுக்கா 5,032 கோடிரூபாய் செலவிடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் 3,040 கி.ம., நீளத்துக்கு மழைநீர் வடிகால்வாய் கட்டமை்பபுகள் உள்ளன. தொடர்ந்து பழைய மழைநீர் வடிகால்வாய் இடிக்கப்பட்டுபுதிய வடிவால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.முன்னெச்சரிக்கைவடகிழக்கு பருவமழைதுவங்க உள்ள நிலையில் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்தகூட்டத்திற்கு பின் நகராட்சிநிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறியது,தி.மு.க, ஆட்சியின் நான்காண்டுகளில் மழை நீர்வடிகால்பணிக்கு கூடுதலாக தொகை செலவிட்பட்டுள்ளது.தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன. மழைக்காலத்தில் நகராட்சிநிர்வாகம் அனைத்து வேலைகளையும் சரியாக செய்யும் எவ்வளவு உட்கட்டமைப்புபணிகள்செய்தாலும் திடீரென கனமழை பெய்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும் ஒரு காலத்தில் மழை புயல், வெள்ளம் என்றால் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்துநிற்பர், இன்று மழைஎன்றால்ஊரகம்மற்றும் நகராட்சி த்துறையினர் வேலை செய்கின்றனர்.தற்போது கூட மழைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தினார். அனைத்து வேலைகளையும் நாங்கள் சரியாக செய்வோம்.சென்னையில் ஏற்கனவே அறிவித்த மழைநீர் வடிகால்வாய் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. புதிய பணிகள்தான் நடந்துவருகின்றன. மேலும் குடிநீர், மற்றும் கழிவுநீர்இணைப்புகளில்புதி பணிகள்செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதுசென்னையில் மழைநீர் வடிகால் வாய் பணிகள்முறையாக மேற்கொள்ள வில்லை என யார் சொன்னது. ஆதாரம் இல்லாமல் கேட்கக்கூடாது. சென்னை விருகம்பாக்கம் ரெட்டேரி கால்வாய் தூர் வாரும் பணிநடந்துவருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
2024-ல் அமைச்சர் சொன்னது என்ன ?
கடந்த2024ம் ஆண்டுபருவமழை முன்னேற்பாடு குறித்த கூட்டத்துக்கு பின் அமைச்சர் நேருஅளித்தபேட்டி,சென்னையில் 1,500கோடி ரூபாய் செலவிலான மழைநீர் வடிகால் வாய்பணிகள்95சதவீதம் : 2,500கோடிரூபாயில் கொசஸ்தலை ஆறு ஒருங்கிணைந்தவடிகால்வாய் பணிகள் 80 சதவீதம்முடிந்துள்ளன.மழைகாலத்தில் தண்ணீர் தேங்காதவாறு அத்தனை நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டுள்ளன. 20 செ.மீ.,மழை பெய்தாலும் தாங்கும் வகையில் வடிகால்வாய் கட்டமைப்பு உள்ளது.இவ்வாறு அவர்கூறியிருந்தார். ஆனால்அந்தாண்டில் வடகிழக்கு பருவமழையின் போது 300-க்கும் மேற்பட்டஇடங்களில் மழைநீர் தேங்கியது. அவற்றைமோட்டார்கள் வாயிலாக மாநகரட்சிஅகற்றியது.பணிகள் முடங்கயார் காரணம்மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சோழிங்கநல்லூர்மண்டலத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் மண்டலக்குழு தலைவர்மதியழகன், கவுன்சிலர்கள் துணை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.இதில் மூன்று ஒப்பந்த நிறுவனங்களும் மழைநீர் வடிகால்வாய்பணியை முறையாக செய்யாததால்வெள்ள பாதிப்புஏற்படும் நிலை உள்ளது. அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்றாதததே இதற்கு காரணம்.என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.அப்போது மாகநராட்சி குடிநீர் வாரியம், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஒரு மீது ஒருவர் பழி போட்டு கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடந்து எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் பேசுகையில், அதிகாரிகளுக்குள் உள்ள ஈகோவால் பணிகள் முடங்கியுள்ளது தெரிகிறது.அதிகாரிகளின் உத்தரவுகளை ஒப்பந்தகாரர்கள் மதிக்க வேண்டும்.பருவமழையின் போது அசம்பாவிதம் ஏதும் நடந்தால் அதிகாரிகள் ஒப்பந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.