உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் என்ன சதி செய்தாலும் 2026ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும்: முதல்வர் ஸ்டாலின்

யார் என்ன சதி செய்தாலும் 2026ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை நம் மீது பரப்பினாலும், 2026ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தர்மபுரியில் திமுக எம்பி மணி இல்லத் திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நேற்றைய தினம் மிக முக்கியமான, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை, சென்னையில் நடத்தி முடித்துவிட்டு இங்கு வந்திருக்கிறோம். முக்கியமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அது என்ன என்று உங்களுக்கு தெரியும். அடுத்தாண்டு நாம் எதிர் கொள்ள இருக்கும் தேர்தலை அடிப்படையாக வைத்து, சீராய்வு என்ற பெயரில் ஒரு தீய செயலை, சதி செயலை செய்ய தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருக்கிறது. அதனை தடுப்பதற்காக, அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து பேசி, தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.

தந்திரம்

அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என பேசினர். அதற்கு உரிய அவகாசம் கொடுக்க வேண்டும். பதற்றம் இல்லாத சூழலில் தான் அதனை செய்ய வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் சூழலில், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது உண்மையான வாக்காளர்களை நீக்க தந்திரம். இதனை தான் பீஹார் மாநிலத்தில் செய்தார்கள். இப்பொழுது மற்ற மாநிலங்களில் செய்ய முயற்சி செய்கின்றனர். நாம் நடத்திய கூட்டத்தில் கூட இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும், அதிமுக பங்கேற்கவில்லை. இரு கட்சிகள் பங்கேற்கவில்லை; தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அதற்காக நான் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

இரட்டை வேடம்

எதிர்க்கட்சி தலைவராக இருக்க கூடிய, பழனிசாமி இதில் கூட இரட்டை வேடத்தை காட்டி இருக்கிறார். பாஜவுக்கு பயந்து தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார். அதேநேரத்தில் அவர் அதிமுக தொண்டர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். தேர்தல் கமிஷனின் நடவடிக்கையில் பழனிசாமிக்கு சந்தேகம் இருப்பதை காட்டுகிறது. ஆனால் அவரால் வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. தான் பாஜவின் பாதம் தாங்கி என்பதை நொடிக்கு ஒருமுறை அவர் நிரூபிக்கிறார். நான் உறுதியாக சொல்கிறேன், பாஜ எப்படிப்பட்ட சதி செயலை செய்தாலும் தமிழகத்தில் எதையும் செய்ய முடியாது.

திமுக 2.0 ஆட்சி

யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை நம் மீது பரப்பினாலும், திமுக தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி, 2026ல் மீண்டும் நிச்சயம் அமையும். அன்றைக்கு எல்லா டிவி சேனல்களிலும் திமுக 2.0 ஆட்சி அமைந்தது என்ற செய்தி தான் வரப்போகிறது. அதனை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள். தமிழக மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இதனை பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன்.7வது முறையாக திமுக ஆட்சி அமைய நீங்கள் எல்லோரும் உறுதுணையாக இருக்க வேண்டும். 2021ல் தமிழகத்தை அதிமுகவிடம் இருந்து மீட்டு இருக்கிறோம். 2026 தேர்தல் பாஜ.,- அதிமுகவிடம் இருந்து பாதுகாக்க கூடியதாக அமைய போகிறது. மணமக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். தமிழ் உணர்வை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 85 )

RAAJ68
நவ 03, 2025 22:44

யாரும் சதி செய்யவில்லை. தினந்தோறும் கொலைகள் கற்பழிப்பு சம்பவங்கள் தமிழ்நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கும் உங்கள் அமைச்சர்கள் எல்லா துறைகளிலும் பல ஆயிரம் கோடிகள் ஊழல் லஞ்சம் திமுக கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளர் மற்றும் எடுபிடிகள் செய்யும் கட்டப்பஞ்சாயத்து சம்பவங்கள் அடாவடித்தனம் ரவுடித்தனம் கூட்டணிக் கட்சிகளின் போலீஸ் நிலையத்தில் தலையீடுகள் போன்ற இன்னும் பல காரணங்களால் மக்கள் விருப்படைந்துள்ளனர். உங்கள் கட்சியினரே உங்களுக்கு ஆப்பு வைத்து விடுவார்கள் எனவே யாரும் சதி செய்யவில்லை


Indian
நவ 03, 2025 22:43

முழு கூட்டமும் ஓடி வருமே


SUBBU,MADURAI
நவ 04, 2025 03:35

முல்லா மூர்க்க கூட்டம்தான?


surya krishna
நவ 03, 2025 20:30

டண்டனக்கா ஏய் டனக்குனக்க.....


subramanian s
நவ 03, 2025 19:49

திராவிட.மாடல்.திமுக வே.கனவு.கொண்டு.இருங்கள்.நிச்சயம்"நீங்கள்.வரமாட்டீர்கள்.


sankar
நவ 03, 2025 19:31

வாய்ப்பே இல்லை ராசா


Raj S
நவ 03, 2025 18:52

அப்படி சொல்லாதீங்க, யாரு எவளோ சிரம பட்டாலும், விவசாயம் அடியோடு அழிஞ்சாலும், கொலை கொள்ளை கற்பழிப்பு எவ்வளவு நடந்தாலும் குடிகார தமிழன் குவார்ட்டர்க்கும், பிரியாணிக்கும் ஆச பட்டு தி.மு.கழகத்துக்கு தான் ஓட்டு போடுவாங்கனு சொல்லுங்க


Sun
நவ 03, 2025 18:46

தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் கூட தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள நினைப்பதில்லை. இன்னமும் சதி என சொல்லி மக்களை முட்டாளாக்க முயற்சிப்பது!


G.Kirubakaran
நவ 03, 2025 18:46

Stalin government has lowered the people standard of living. No safety for women in his ruling


MARUTHU PANDIAR
நவ 03, 2025 18:04

எப்பேர்ப்பட்ட ஆறுதல்.


V RAMASWAMY
நவ 03, 2025 17:27

எப்படி என்னென்ன குளறுபடிகள் செய்தால் வெற்றி பெற்றமாதிரி காண்பிக்கமுடியும் என்கிற சதியும, அப்படி ஒருவேளை அத்தைக்கு மீசை முளைத்தாற்போல் என்கிறமாதிரி வெற்றி கண்டால் புது புதிதான ஆட்டை போடக்கூடிய திட்டங்கள் தீட்டவும் ஆரம்பமாகிவிட்டதோ?


சமீபத்திய செய்தி