சீமான் உபதேசம் தேவையில்லை: சேகர்பாபு
சென்னை: சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தபின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:-கும்பாபிஷேகத்தை, நாங்கள் தமிழில் நடத்துவோம் என்று தெரிந்துதான், திருச்செந்துார் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என, சீமான் கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே, பழனி, மருதமலை கோவில்களில், தமிழில் கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறோம். சீமான் போன்றோர் உபதேசத்தால், ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை.திருச்செந்துார் முருகன் கோவில் கும்பாபிஷேகத்துக்கான, 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. தமிழ் கடவுள் முருகன் மகிழ்ச்சியடையும் வகையில், கும்பாபிஷேகம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.