உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிராமண சமூகத்தை இனி எவரும் இழிவுபடுத்த முடியாது; சென்னை ஆர்ப்பாட்டத்தில் வேலுார் இப்ராகிம் எச்சரிக்கை

பிராமண சமூகத்தை இனி எவரும் இழிவுபடுத்த முடியாது; சென்னை ஆர்ப்பாட்டத்தில் வேலுார் இப்ராகிம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:''எங்களை இனி ஒருவரும் இழித்துப்பேச முடியாது என்ற எச்சரிக்கையை தமிழக அரசுக்கும், தி.மு.க.,வினருக்கும் இந்த மாபெரும் கூட்டம் மூலம் பிராமணர் சமூகம் காட்டிக் கொண்டிருக்கிறது,'' என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராகிம் பேசினார்.பிராமண சமூகத்தை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பி.சி.ஆர்., போன்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் இன்று இந்து மக்கள் கட்சி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராகிம் பேசியதாவது:கடந்த ஒரு மாதம் முன், ஒரு மேடையில் ஒரு பெண் பிராமண சமூகத்தை இழிவுபடுத்தியபோது, 'அதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்' என்று அதே இடத்தில் தன் எதிர்ப்பை பதிவு செய்தவர் அர்ஜூன் சம்பத். அவரது வீரம், துணிவு, எதிர்ப்பாற்றல் தான் தமிழகத்தில் பிராமண சமூகத்தை இன்று மீண்டும் ஒரு முறை ஒன்று சேர்த்திருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் நடந்தும், பிராமண சமூகம் அமைதியாக இருந்தது எனக்கு வருத்தமாக இருந்தது.'பிராமணர் என்றால், சாம்பார் சாதம், தயிர் சாதம் சாப்பிடுவோர்' என்றும், 'போகிற போக்கில் பூணுால் அறுக்க முடியும்' என்றும் கயவர்கள் கூட்டம் கொட்டம் அடிக்கும்போது மவுனம் காக்கிறீர்களே, எனக்கு வேதனையாக இருக்கிறது.சுப்பிரமணிய பாரதியின் வாரிசு அல்லவா நீங்கள்? சுப்பிரமணிய சிவா வாரிசு அல்லவா நீங்கள்? உ.வே.சாமிநாத அய்யரின் வாரிசு அல்லவா நீங்கள்? இந்த தேசத்துக்கு உயிர்கொடுத்துப் பாடுபட்ட தலைவர்களை கொண்ட வீரம் மிகுந்த சமூகம் அல்லவா நீங்கள்?'தன் சமூகத்தை ஒருவர் இழிவுபடுத்தும்போது, இன்னொரு சமூகத்தவர் குரல் கொடுக்கிறார் என்கிறபோது, நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்களே' என்று பேசினேன். அதைக்கேட்டு நிறையப்பேர் என்னிடம் வேதனைப்பட்டார்கள்.'என் பிராமண சமூகத்தை தட்டி எழுப்ப எந்த வார்த்தை பிரயோகத்தையும் பயன்படுத்த நான் தயாராக இருக்கிறேன்' என்றேன்.அப்படிச் சொன்ன பிறகு தான் இப்போது மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. பிராமண சமூகத்தை இனி ஒருவன் இழிவுபடுத்தி பேச முடியாது என்ற எச்சரிக்கையை தமிழக அரசுக்கும், தி.மு.க.,வினருக்கும் இந்த கூட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது.ஒரு சமூகத்தை புறக்கணிப்பது, அதன் மீது வெறுப்பை ஏற்படுத்துவது, அழிக்க நினைப்பது தான் பாசிசம். அதை திராவிட மாடல் செய்யுமானால், அது என் செருப்புக்கு சமம். இதை சொல்வதால் எனக்கு எந்த பயமும் கிடையாது.ஒரு சமூகத்தின் மீது தேவையற்ற எண்ணங்களை இவர்கள் பரப்புகிறார்கள். பிராமண சமூகத்துக்காக நாங்கள் எதைச் செய்வதற்கும் தயாராக இருக்கிறோம். எங்கள் குரலை வலிமையாக பதிவு செய்வோம்.இவ்வாறு வேலுார் இப்ராகிம் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

அப்பாவி கான்
நவ 04, 2024 18:18

ஒருத்தனும் ஜாதி, மதத்தை உதற தயாரில்லை. அடுத்தவனை காப்பாத்த ஆதரவாம்.


பச்சை தமிழன்
நவ 04, 2024 22:17

இங்கே நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவில்லை. சாதி பற்று வேறு, சாதி வெறி வேறு. பற்று என்பது ஒரு ஈர்ப்பு, பிடிப்புடன் இருப்பது. வெறி என்பது அளவுக்கு மீறி ஆட்டம் போடுவது. எல்லா சாதி மக்களும் பற்றுடன் இருந்தால் எல்லோருக்கும் நல்லது. வெறியோடு இருந்தால் எல்லோருக்குமே பாதிப்புதான். ஒருவரை ஒருவர் இழிவு படுத்தாமல், எல்லை மீறாமல் இருந்தாலே தமிழ் நாட்டில் எல்லோரும் நிம்மதியாக வாழலாம்.


sankaran
நவ 04, 2024 13:45

ஒரு எறும்பையோ அல்லது பூச்சியையோ அடிப்பதற்கு தைர்யம் வேண்டுமா?.. பூச்சி திரும்ப கடிக்காது என்ற தைரியம்தான் ... சுதந்திர போராட்ட வரலாறு படித்திருந்தால் பிராமணர்களை காயப்படுத்த மாட்டார்கள் .. நன்றி கேட்ட மனிதர்கள் ...


saravanan
நவ 04, 2024 13:23

மனித குலம் இருக்கும் வரை ஏற்றத்தாழ்வுகள் இருந்தே தீரும் மனிதனுடன் கூடவே பிறந்தது உயர்வு தாழ்ச்சி இது எல்லோருக்கும் பொதுவானது அவை மட்டும் இல்லாவிட்டால் உழைப்பு, கட்டுப்பாடு, ஒழுக்கம், கண்ணியம், சிந்தனை, பெருமை, புகழ் போன்றவையெல்லாம் மதிப்பற்றதாகி விடும். ஆங்கிலத்தில் மனிதகுலம் என்பதற்கு "Human race" அதாவது போட்டி எப்போதும் அவனுள் இருந்தே தீரும் என்பதை குறிக்கும் விதமான சொற்றொடர் போட்டி என்று வந்துவிட்டாலே மேற்கூறியது போல ஏற்ற தாழ்வுகள் தழைத்துவிடும். பிரச்சினை என்னவென்றால் பிறப்பால் அது கற்பிக்கபடுவதுதான். தந்தை மந்திரியாக இருந்தால் அதே காண்ணோட்டத்தில் மகனையும் பார்பது எப்படிப்பட்ட அறியாமையோ, அதே அறியாமைதான் கூலி தொழிலாளியின் மகனும் அப்படியே இருப்பான் என எடை போடுவதும் பார்க்கும் பார்வை மாற வேண்டும். மக்கள் மனங்களும் மாற வேண்டும் பல தலைமுறைகள் கடந்து காலம் மாறிவிட்ட நிலையில் முப்பாட்டன் செய்த தவறுக்காக கொள்ளு பேரனை தண்டிப்பது, அதற்கு சட்டங்களும், நீதிமன்றங்களும் துணை போவது ஏற்புடையதல்ல. சமூக நீதிக்கு புறம்பானது. உண்மையான சமூக அக்கறை கொண்ட கட்சியான பாஜக, வேலூர் இப்ராஹிம் மற்றும் அர்ஜுன் சம்பத் போன்றோரை இந்த முன்னெடுப்பிற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 04, 2024 12:41

சிலர் ஏன் என் மேல் தாக்குதல் செய்கிறார்கள் தெரியவில்லை.


kantharvan
நவ 04, 2024 13:24

அதுக்கு பெயர் அவர்களின் அடிப்படை இருப்பிற்கான கவலை.


ramesh
நவ 04, 2024 13:27

கவலை படாதீர்கள். பிஜேபி க்கு ஒட்டு போடுபவன் மட்டுமே உண்மையான இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் இங்கே கருத்து போட்டு வருகிறது . இப்போது என்மீதும் பாயும் பாருங்கள்


hari
நவ 04, 2024 15:25

சிறிது சிந்தித்து அறிவோடு கருத்து போட்டால் பாராட்டலாம்...


INDIAN
நவ 04, 2024 12:00

ஒரு மதத்தை, சாதியை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் அது பிராமணர்களை மட்டும் இழிவுபடுத்தக் கூடாது என்பது என்ன நியாயம், ஜெய் ஸ்ரீராம் சொல்லுவதாக இருந்தால் இங்கு இருக்கட்டும் இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு போய் விடு என்று கூறியவர் ஒரு ஹிந்து மட்டுமல்ல பாஜகவில் பாராளுமன்ற தேர்தலிலே போட்டியிட்டவர், இங்கே திருச்சியில் ஒருவர் பேசுகிறார் நான் பிராமணன் சமைத்ததால் மட்டுமே சாப்பிடுவேன், மதுரைக்கு பக்கத்துல ஒருத்தர் சொற்பொழிவுக்கு கூப்பிட்டார், அவரே ஒரு ப்ராமணவாவை சமையலுக்கும் ஏற்பாடு செய்துவிட்டதாக தெரிவித்தார் என்று பெருமையாக கூறுகிறார், நீங்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி சாப்பிட வேண்டும் மற்றவர்களும் உங்களுக்கு பிடித்த மாதிரி சாப்பிட வேண்டும், இது என்ன நியாயம், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் ஆனால் இன்னொருவர் சமைத்ததை சாப்பிடமாட்டேன் என்பது சாதிய துவேசம் இல்லையா


raja
நவ 04, 2024 12:46

நீ எப்போதும் பாய் வீடு பிரியாணிதான் வேணும் என்று அடம் பிடித்து ஒரு பாயை சமைக்க கூப்பிடுவது இல்லையா .. அது போலத்தான் இதுவும் .. அவரவர் விருப்பம் உடன் பிறப்பே...


ramesh
நவ 04, 2024 13:13

நம்மிடத்தில் எவ்வளவு நெருக்கமாக பழகினாலும் தண்ணீர்கூட வாங்கி குடிக்க மாட்டார்கள் .பிறகு சமைத்ததை எப்படி சாப்பிடுவார்கள்


kantharvan
நவ 04, 2024 13:25

ஒவ்வொரு இந்தியனின் நியாயமான கேள்வி.


ponssasi
நவ 07, 2024 13:16

இதில் சாதி துவேசம் என்று எதுவும் இல்லை. உணவு என்பது அவரவர் மனம் விரும்பி உண்பது. எனது அலுவலகத்தில் உள்ள சக பணியாளர்கள் எனது பிராமிணர்கள் உணவை பகிர்ந்துகொள்வார்கள், என்னுடன் ஒரே இலையில் சாப்பிடுபவர்களுக்கும் உண்டு. எனது உணவை தவிர்த்தால் நான் கவலைப்பட மாட்டேன், அவர்கள் ஏன் எனது உணவை பகிரவேண்டும் என நான் ஆசைப்பட வேண்டும், எனக்கான உணவை நான் உண்கிறேன், அவர்களுக்கான உணவை அவர்கள் உண்கிறார்கள். இன்று பலதரப்பட்ட மக்களும் மாமிசம் உண்பதில்லை, அவர்கள் அசைவம் செய்பவர்கள் வீட்டில் உறவினராக இருந்தாலும் சைவ உணவு கூட உண்பதில்லை. பிராமணர் உயரத்துக்கு நாம் வளர முயற்சிக்கவேண்டும், நம் உயரத்துக்கு அவர்களும் வரவேண்டும் என எண்ணவேண்டாம்.


jayvee
நவ 04, 2024 10:16

மாலையில் அதே இடத்தில ஆளும் தீயமுக ஆதரவுடன் நடைபெற்ற திராவிஷ கூட்டத்தினரின் ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஹிந்துக்களுக்கு குறிப்பாக ப்ராஹ்மண சமுதாயத்திற்கும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதான் சமநீதி கொள்கை என்று தீயமுக சொல்கிறது ..ஏனென்றால் உதிரி துணை அமைச்சரே தரம் தாழ்ந்து பேசிவருவதான் காரணம்


Sampath Kumar
நவ 04, 2024 10:15

வாங்கின காசுக்கு மேல கூவாத வரலாறும் தெரியாது ஒரு வெங்காயமும் புரியாது


AMLA ASOKAN
நவ 04, 2024 08:54

ஹிந்தி மீது வெறுப்பு இல்லை திணிப்பை தான் எதிர்க்கிறோம் என்று கேரளாவில் உதயநிதி பேசியது அவரது கருத்து. அவர் பிராமணர்கள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது இந்துக்களிடையே உள்ள இன வேறுபாடு. ஆனால் இபுறாஹிம் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாண்டுகளாக கல்வி அறிவில் முன்னேறி, உயர்ந்த நிலையில், 90 % வெளிநாட்டில் வாழ்ந்து வரும், அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைதியான பிராமணர்களை கலகம் செய்ய அழைக்கிறார் .அவர்களும் அறிவுக்கூர்மையுடன் தான் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள் . இவர் பேசுவது நானும் ஒரு வீரதீரன் என்ற சுய விளம்பரம் தான் . இவர் இந்துவாக மதம் மாறினாலும் பிராமணராக முடியாது . மற்றவர் மதம் குறித்து முஸ்லிம்கள் என்றைக்கும் எவ்வித எதிர்ப்பு கருத்துக்களும் கூறுவதில்லை என்பது களயதார்தம் .


முனியாண்டி,ஏனாதிக்கோட்டை
நவ 04, 2024 09:20

என்னாது மற்றவர்களின் மதம் குறித்து முஸ்லீம்கள் என்றைக்கும் எதிர் கருத்தை கூறுவதில்லையா ஏளா போ அங்கிட்டு கலங்காத்தால கள எதார்த்தம்....எதார்த்தம்னு பேச வந்துட்ட போவியா...


kantharvan
நவ 04, 2024 13:26

உண்மை


jayvee
நவ 04, 2024 16:45

ஏய் அரிசி மூட்டை .. ஜாதி துவேஷம் என்று காரணம் கூறி அரிசிமூட்டைக்கு மதம் மாறிய கும்பலின் வரன்தேடும் படலத்தை paar.. naadar கிருத்துவர், செட்டியார் கிருத்துவர், வன்னியர் கிருத்துவர், முதலியார் கிருத்துவர், உடையார் கிருத்துவர் SC கிருத்துவர் enru ஜாதி பார்த்து varanthedum avalathai பார். athai விட . வீட்டில் கிருத்துவன் அரசு பதிவேட்டில் ஹிந்து.. ஏன் ..கோட்டா சலுகைக்கு ..இதைவிடம் கேவலம் உண்டா..


Uuu
நவ 04, 2024 07:54

இப்ராஹிம் இவர் தான் உண்மையான சமத்துவ மாடல்


kantharvan
நவ 04, 2024 13:27

சங்கீ மாடல்னுறா மாதவா?


karthik
நவ 04, 2024 07:13

எந்த சமூகக்கதையும் இழிவு பண்ணாத கொள்கையை நாம எடுப்போம் அண்ணா. மலை வரணும்


புதிய வீடியோ