உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு ஓட்டு போட யாரும் தயாரில்லை : முன்னாள் அமைச்சர் பேச்சு

தி.மு.க.,வுக்கு ஓட்டு போட யாரும் தயாரில்லை : முன்னாள் அமைச்சர் பேச்சு

பொள்ளாச்சி: 'தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட யாரும் தயாராக இல்லை,'' என, முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். பொள்ளாச்சியில், அ.தி.மு.க. பாக நிலை முகவர்கள் (பிஎல்ஏ - 2)க்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், நகர செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்கருப்பண்ணசாமி முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சரிபார்க்க கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வாயிலாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றன. இது முறையாக வழங்கப்படுகிறதா என கண்காணிப்பு செய்ய வேண்டும். பாக நிலை முகவர்கள் பணி முக்கியமானதாக இருக்கிறது. நடுநிலை வாக்காளர்கள் என அனைத்து வாக்காளர்கள் பெயர்களும் விடுபடாமல் இணைக்கப்படுகிறதா என கண்காணிப்பு செய்ய வேண்டும். தி.மு.க., வுக்கு யாரும் ஒட்டுப்போட தயாராக இல்லை. ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி; மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும். தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம். கட்சி வெற்றிக்காக உழைப்பவர்களுக்கு உரிய பலன் நிச்சயம் கிடைக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், திருஞானசம்பந்தம், செந்தில்குமார், நகர நிர்வாகிகள் ஜேம்ஸ்ராஜா, அருணாச்சலம், கனகு, மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை