உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலத்தை திரும்ப ஒப்படைக்க பரிந்துரையா: ஐகோர்ட் எச்சரிக்கை

நிலத்தை திரும்ப ஒப்படைக்க பரிந்துரையா: ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை:பட்டியலினத்தவர்கள் நல திட்டங்களுக்கு கையகப்படுத்தும் நிலங்களை திரும்ப ஒப்படைக்க பரிந்துரை செய்யும் அதிகாரிகள், நில உரிமையாளர்கள் இடையேயுள்ள கூட்டு சதி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட் எச்சரித்துள்ளது.பட்டியலினத்தவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்துக்கு நிலங்களை அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து, நிலத்தின் உரிமையாளர் செல்ல பாண்டி உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தேவையில்லை என, அரசு அறிக்கை கொடுத்துள்ளது. எனவே, நிலத்தை திருப்பி வழங்க வேண்டும்' என, வாதிடப்பட்டது.இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கூறியதாவது: வீடு இல்லாத பட்டியலினத்தவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க அரசு திட்டம் கொண்டு வந்தால், அந்த திட்டத்தை இப்படி தான் சீர்குலைப்பதா? வீடு இல்லாத பட்டியலினத்தவர்களுக்கு வீடு கட்ட திட்டம் வகுக்கப்பட்டு, அதை குறிப்பிட்ட காலத்தில் செயல்படுத்தாமல் கிடப்பில் அதிகாரிகள் போடுகின்றனர். இந்த விஷயத்தில், நில உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபடுகின்றனர். அரசின், வேறு எந்த திட்டத்திலும் நிலம் கையகப்படுத்திய பின், இதுபோல திரும்ப அளிக்க பரிந்துரை அளிப்பதில்லை. ஆனால், பட்டியலின திட்டங்களில் மட்டுமே இவ்வாறு அதிகாரிகள் செயல்படுகின்றனர். அதிகாரிகள், நில உரிமையாளர்கள் இடையே நடக்கும் இந்த கூட்டு சதி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை