உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது

மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது

சென்னை: 'மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது' என, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அருகே உள்ள காட்டாங்குளத்துாரில், மே மாதம் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனத்தின் கார் மீது, மற்றொரு கார் மோதி நிற்காமல் சென்றது. இதுகுறித்து, தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாக ஆதீனம் புகார் கூறியிருந்தார். இது, இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் இருப்பதாக, மதுரை ஆதீனம் மீது, சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=td8p813o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, மதுரை ஆதீனம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஆதீனத்தின் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு, செப்., 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அதுவரை, ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்கூடாது' என, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

என்றும் இந்தியன்
ஆக 19, 2025 17:17

ஆதீனத்தின் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு, செப்., 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அதுவரை, ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்கூடாது என, நீதிபதி உத்தரவிட்டார். இதன் அர்த்தம் என்ன இதன் பின்னே எவ்வளவு கடும் நடவடிக்கை கூட எடுக்கலாமா???நீதிமன்றம் ஒரு சாக்கடை ஆகிவிட்டது. நீதிமன்றம் என்பது இது தவறு இது சரியானது என்று பகுத்துணர்ந்து சொல்லும் ஒரு சிறந்த இடம் என்று பார்த்தால்???எதோ ஒரு கசாப்புக்கடை மாதிரி இருக்கின்றது அதன் ஒவ்வொரு செய்கைகளும். பணமிருந்தால் நீதிமன்ற வாசலுக்கு வா உனக்கு என்ன வேண்டுமோ அதைச்செய்கின்றோம் தள்ளுவதை தள்ளினால், பணம் கொடுக்க முடியவில்லையென்றால் எங்கள் தீர்ப்பு பல வருடங்கள் தள்ளி போய்க்கொண்டே இருக்கும்???என்ன அநீதிமன்றமே அப்படித்தானே???


P. SRINIVASAN
ஆக 19, 2025 12:40

ஏன் கூடாது?


S Ramkumar
ஆக 19, 2025 14:41

அப்ப பொன்முடி ஏன் இன்னமும் ஜெயிலுக்கு செல்ல வில்லை.


Modisha
ஆக 19, 2025 16:14

உங்க ஆளுங்க குமரி , நெல்லை , தூத்துக்குடி மாவட்டங்களில் எத்தனை பாலியல் குற்றங்கள் செய்யறாங்க , அதுக்கு திமுக போலீஸ் என்ன நடவடிக்கை எதுக்குது .


புதிய வீடியோ