உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயின் செயல்பாட்டில் தெளிவில்லை: ஹெச்.ராஜா

விஜயின் செயல்பாட்டில் தெளிவில்லை: ஹெச்.ராஜா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா அளித்த பேட்டி:தமிழகத்தில், 10,000 பள்ளி ஆசிரியர்கள் போலியாக இருப்பது மட்டுமல்ல; தமிழகம் முழுதும் 1,500 அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, ஒற்றை இலக்கமாக உள்ளது. இந்த பள்ளிகள் மூடப்படும் அபாய நிலையில் உள்ளன.தமிழகத்தில் விளையாட்டு பல்கலைக் கழகம் ஏற்படுத்த வேண்டும் என, கடந்த 2001ல், நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, சட்டசபையில் என் முதல் பேச்சில், காரைக்குடியில் விளையாட்டு துறைக்கு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதை ஏற்றுக் கொண்டார். ஆனால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஸ்ரீபெரும்புதுாரில் விளையாட்டு பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என, தற்போது கூறியுள்ளார்.பதினெட்டு வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும் வாக்காளராகலாம்; அரசியல் கட்சியும் துவங்கலாம். அந்த வகையில், நடிகர் விஜய் கட்சி துவக்கியுள்ளார். அவரது சிந்தனையிலும், செயல்பாட்டிலும் தெளிவு இல்லை.கடந்த 35 ஆண்டுகளாக பா.ஜ.,வில் இருக்கிறேன். ஒரு நாளும் கூட்டணி குறித்து பேசியது கிடையாது. தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அது தான் இறுதி முடிவு. ஆனால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியவில்லை. போகிற போக்கில், 'எனக்கு அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை; ஒட்டும் இல்லை, உறவும் இல்லை' என பேசிவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது. ஜெயக்குமார் பேச்சு அப்படியொரு அபத்தம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

MADHAVAN
நவ 13, 2024 17:27

விஜய்க்கு தெளிவு இருக்கு, உனக்குத்தான் தெளிவு இல்லை, குஷபூ நடிகையை திட்டு திட்டுனு திட்டிய நீ, உங்க கட்சில சேர்ந்தவுடன், அவ வரும் வரைக்கும் க்யூ ல நின்னு மலை போடுற ? உனக்கு தெளிவு இருந்தா இந்நேரம் கட்சியை விட்டு போயிருக்கணும், உன்ன அடிச்சும் பாத்தாச்சு, அவுத்து பாத்தாச்சு இனிமேலு நீயா காத்திக்கிட்டு இருக்கவேண்டியது தான்,


skv srinivasankrishnaveni
நவ 20, 2024 11:39

அந்த புள்ளை அரசியல் என்றால் முயூனுமானிலே முடியும் த்ரில்லிங் மூவி ன்னு நெனைச்சுண்டுட்டான்போல


MADHAVAN
நவ 13, 2024 12:35

35 வருசமா அரசியலில் இருக்கும் உனக்கே ஒரு தெளிவு இல்லாமல் இருக்கும்போது, அணில்குஞ்சு புதுசு, போக போக பழகிக்கும், உன்னமாதிரி தத்தியா இருக்காது, உன்னால ஒரு தேர்தலில் கூட ஜெயிக்க முடியல, கூட்டணி வச்சு திமுக கூட நின்னு தான் நீ ஜெயிச்ச


Narasimhan
நவ 13, 2024 12:24

உங்க பேச்சில் என்ன பெரிய தெளிவு இருக்கிறது? பாஜ வளராமல் போவதில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு.


Sudha
நவ 13, 2024 11:19

தெளிவான அரசியல் கருத்துகளை சொல்லி பிஜேபியை வளருங்கள். பல்வேறு ஜாதி இன கட்சிகள் மத்தியில் உங்களை சரியாக அடையாளம் காட்டுங்கள். இல்லையேல் வாய் மூடி தலைமை முடிவு செய்வது போல் செய்யுங்கள். இதுவரை தமிழகத்தின் என்ன செய்தீர்கள் என்று மாதாமாதம் எடுத்து சொல்லுங்கள். 2026க்குள் AIIMS, NEET போன்ற பிரச்சனைகளை சரி செய்யுங்கள்.கட்சி வளர ஊர் ஊராக செல்லுங்கள்


Barakat Ali
நவ 13, 2024 10:11

என்னது?? விஜய்யின் செயல்பாட்டில் தெளிவில்லையா? அதைப்பற்றி அவரை இறக்கிய திமுகவே கண்டுகொள்ளவில்லை.. திமுகவுக்கு அதற்கான அவசியமும் இல்லை... உங்களுக்கென்ன கவலை ..... சும்மா நீங்களுண்டு, உங்க ஜோலியுண்டு ன்னு திண்ணையில் உட்கார்ந்துண்டு இருமேன் .....


N Sasikumar Yadhav
நவ 13, 2024 10:01

திருட்டு திராவிட மாடலுக்கு முட்டு கொடுக்கும் 200 ரூபாய் ஊ...பிக்கள்தான் ரொம்ப பதறுகிறார்கள்


pmsamy
நவ 13, 2024 09:55

புதுசா வந்தவன பாத்து எச் ராஜா ஏன் இவ்வளவு பயப்படுறார். அவர் கட்சி அவ்வளவு மோசமா இருக்கு பாவம்


S. Venugopal
நவ 13, 2024 09:18

விஜயும் அவரது கட்சித் தொண்டர்களும் அவர்களது கொள்கைகளிலும் மற்றும் செயல்களிலும் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். விஜயயையும் அவரது தொண்டர்களையும் கண்டு பொறாமைப்படுகிறவர்கள் தான் நிலை தடுமாறுகிறார்கள்


Edward,Aruppukkottai 626105
நவ 13, 2024 09:48

எங்கே அரசியல் களத்திலா OR சோஷியல் மீடியாவிலா?


வைகுண்டேஸ்வரன்
நவ 13, 2024 08:40

இன்னும் 14 நாட்கள் தான். அப்புறம் நீங்க, கஸ்தூரி, நாராயணன், மதுவந்தி, சுமந்து இவாள்ளாம் வீட்டுக்கு போங்கோ. நண்பர்கள் காசில் குடும்பம் நடத்தும் அண்ணாமலை வர்றார்.


ஆரூர் ரங்
நவ 13, 2024 09:27

கர்ம வீரருக்கு வருமானம் இருந்ததில்லை. உணவுப் பொருட்களை டிவிஎஸ் சும் வேட்டி சட்டைகளை இன்னொரு கார்பரேட் எக்ஸ்ப்ரஸ் கோயங்காவும் மனமுவந்து கொடுத்துதவிக் கொண்டிருந்தனர் அவனை அப்போது யாரும் குறை சொல்லவில்லை


Mettai* Tamil
நவ 13, 2024 10:30

அண்ணாமலை வர்றார்..வர்றார்....தகவல் தானே ? ...நீங்க, கஸ்தூரி, நாராயணன், மதுவந்தி, சுமந்து இவாள்ளாம் வீட்டுக்கு போங்கோ......ஆனா , மாமியார் வீட்டுக்கு போறவங்க லிஸ்ட் நம்ம அண்ணாமலை கிட்ட இருக்குங்க ....


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 13, 2024 10:31

நண்பர்கள் தயவில் வாழ்வது அவலமாக இருக்கலாம்.. ஆனால் மக்களைச் சுரண்டி ஒரு குடும்பமே தலைமுறை தலைமுறையாக கொழிப்பது அதைவிடக் கேவலம் இல்லையா? விவசாயம் செய்து சம்பாதித்தோம் என்று கூற தலைமைக்குடும்பமே யோசிக்கும் ......


வைகுண்டேஸ்வரன்
நவ 13, 2024 08:37

விஜய் பாஜக ஆளு தான் என்பது கூடத் தெரியாம நீங்கல்லாம் ஒருங்கிணைப்பாளர். கஷ்டம். நாக்பூர் ல கேட்டுட்டு பேசுங்க.. இன்னி தேதிக்கு அதிமுக, பாமக, தேமுதிக, தவெக கட்சிகளோடு பாஜக கூட்டணி அமைக்க முற்படுகிறது. எனவே யோசித்து பேசவும்.


Mettai* Tamil
நவ 13, 2024 10:16

அப்படி ஒரு வலுவான கூட்டணி அமைந்தால் நல்லது தான் .....


முக்கிய வீடியோ