உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமி, விஜய் மட்டுமா; வடிவேலுக்கும் கூட்டம் வருகிறது: சொல்கிறார் திருமாவளவன்

பழனிசாமி, விஜய் மட்டுமா; வடிவேலுக்கும் கூட்டம் வருகிறது: சொல்கிறார் திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''நடிகர் வடிவேலு ஒரு இடத்துக்குச் சென்றால் கூட்டம் கூடுகிறது. கூட்டம் கூடுவதை வைத்து தேர்தல் வெற்றியை கணிக்க முடியாது,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, நேற்று வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, அவர் கூறியதாவது: விஜய் தற்போது தான், களப்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். தி.மு.க., தலைமையிலான கூட்டணி மட்டுமே முழு உருவம் பெற்று வலுவாக உள்ளது. 2016-17ல் உருவான இக்கூட்டணி, பல தேர்தல்களில் வென்றுள்ளது. 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த அணியை வீழ்த்த பல முனைகளில் இருந்து ஒலிக்கும் குரல்களில் விஜய் குரலும் ஒன்று. மற்றொன்று அ.தி.மு.க., அதனுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ., இவர்கள் அனைவரும் தனித்தனியே தேர்தலை சந்திக்கப் போகின்றனர். ஒரு அணியாக வடிவம் பெறவில்லை. தி.மு.க., கூட்டணியை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு, விஜய் வரவு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி செல்லும் இடங்களிலும் ஏராளமான மக்கள் திரள்கின்றனர். மக்கள் திரள்வது அளவுகோல் அல்ல. அதை ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, அதை வைத்து ஒரு முடிவை கூற முடியாது. நடிகர் வடிவேலு ஒரு இடத்துக்கு சென்று நிகழ்ச்சி நடத்தினால், லட்சக்கணக்கில் மக்கள் திரளலாம். கூட்டத்தை வைத்து, அதுவே தேர்தல் முடிவாக இருக்கும் என கருத முடியாது. கடந்த ஐந்தாண்டுகளில் தி.மு.க., அரசு அனைத்து தரப்பினருக்கும் பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இக்கூட்டணிக்கு மாற்றாக, ஒற்றைக்கட்சி, தனி கட்சி வெற்றி பெற்று விடும் என்பதற்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Madras Madra
செப் 15, 2025 10:55

ஏன் வடிவேலு என்றால் அவ்வளவு கேவலமா ?


RAAJ68
செப் 14, 2025 20:02

எல்லோருக்கும் பித்து பிடித்து விட்டது எல்லாம் மந்திரிகளும் பிதற்றுகிறார்கள் . ஜன்னி வந்துவிட்டது விஜயின் கூட்டத்தை பார்த்து. சரி அது இருக்கட்டும் வடிவேல் என்றால் அவ்வளவு மட்டமா உங்களுக்கு.


duruvasar
செப் 14, 2025 19:05

ஐயா வடிவேலுவுக்கு மட்டுமே இல்லை சிங்கமுத்துவுக்கும் பெரும் கூட்டம் வரும். சர்க்கஸ்சில் கூண்டில் அடைத்த சிறுத்தையை பார்க்க கூட கூட்டம் வரும். இதை விட இன்னும் பலமான முட்டை எதிர்பார்க்கிரோம். . பாத்துங்க ஐயா பிசெபி உள்ள வந்துடப்போகுது . சுதானம் தேவை


m.arunachalam
செப் 14, 2025 18:12

மலிவான ஜாதி அரசியலின் காலம் முடிந்து விட்டது . இனி விழித்துக்கொண்டாலும் கஷ்டம் தான் .


pakalavan
செப் 14, 2025 16:19

டிசம்பரோட அதிமுக, பஜக கூட்டனி உடஞ்சிடும், விஐய் அதிமுக சேரும், திமுகா வெற்றி, பாஜக- டெப்பாசிட் கூட வாங்க வக்கில்லாம இருக்கும்


Ramesh Sargam
செப் 14, 2025 13:24

தெருவில் கூடையில் பல்லு பிடுங்கிய பாம்பை வைத்து வித்தை காட்டும் பாம்பாட்டிக்கும் கூட்டம் அதிகம் வரும்.


Sivaram
செப் 14, 2025 13:08

விஜய் எப்படியோ இருக்கட்டும் உன்னை மாதிரி கோழை கிடையாது விஜய் பணம் சம்பாதிக்க வரவில்லை, கமல ஹாசன், வைகோ, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், நீ மற்றும் ஆயிர கணக்கான ஜென்மங்கள், எலும்பு துண்டுக்கு ஆசை படுவது போல் விஜய் உறுதியாக கிடையாது


Nesan
செப் 14, 2025 13:03

உங்கள் நேர்மை பரிபோய்விட்டது. உங்களுக்கு இனி இறங்கு முகம்...


ngopalsami
செப் 14, 2025 12:46

நரம்பில்லாத நாக்கு எப்படியும் பேசும் என்பது அனைவரும் அறிந்ததே.


Ram
செப் 14, 2025 12:20

இவரு ஒரு ஆளுன்னு நியூஸ் போடறீங்க


முக்கிய வீடியோ