உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லியோ பட வழக்கு இயக்குனருக்கு நோட்டீஸ்

லியோ பட வழக்கு இயக்குனருக்கு நோட்டீஸ்

ஒத்தக்கடை:மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ராஜா முருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம். இது, சமூகத்தில் வன்முறையை துாண்டும் வகையில் உள்ளது.இதை தவிர்க்க திரைப்பட தணிக்கை வாரியம் புது விதிமுறைகளை உருவாக்க வேண்டும். லியோ படத்தை எந்த ஒரு ஊடகத்திலும் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் மீது வழக்குப் பதிய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு, லோகேஷ் கனகராஜ் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி