வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மாலை 5 மணிக்கு மேல் என்று டெலிவரி நேரம் முறையாக, நிரந்தரமாக பதிவு செய்யப்பட பின்பும், அதை கண்டுகொள்வதே இல்லை. அவர்கள் இஷ்டத்திற்கு பகலில் வந்து விட்டு, பின்பு வந்தோம் கதவு பூட்டிருந்தது என்று சொல்லி, சிலிண்டரை டி கடையில் வைத்துவிட்டு ஒரு நாள் கழித்து டெலிவரி செய்கிறார்கள். இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில், இந்த முறையில் பித்தலாட்டம் செய்கிறார்கள். இவர்களது திருட்டுத்தனத்திற்கு ஒரு அளவே இல்லை. எல்லாம் 60 வருட திராவிட ஆட்சிகளின் பயிற்சி..
சிலிண்டர் பில்லின் தேதி முந்திய தினமாக இருக்கும். ஆனால் சிலிண்டர் டெலிவரி செய்வது ஒரு நாள் கழித்துதான். அந்த ஒரு நாள், ரொட்டேஷன் ல் டீ கடைகளில் சிலிண்டரை வைத்து காசு பார்த்துவிடுகின்றனர் சிலிண்டர் பாய்கள். அது தவிர இவர்களுக்கு 40 - 50 ரூபாய் டிப்ஸ் வேறு. சிறிய விஷயங்களில் இருந்து பிரமாண்ட விஷயங்கள் வரை அனைத்திலும் ஒரு நேர்மையற்ற தன்மை, ஊழல் - மிகுந்த மக்களை கொண்ட நாடு நம் நாடு .. எல்லாம் அரசியல்வியாதிகள் இடம் இருந்து கற்றுக்கொண்ட பித்தலாட்டங்கள்தான்..
இந்தியாவிலேயே குறைந்த வேலை அதிக ஊதியம் பெறுபவர்கள் இந்த சமையல் கேஸ் கொண்டு வருபவர்கள்தான். வீட்டு வாசலில் இருந்து பத்தடிக்கும் குறைவாக உள்ள வாசல் கேட்டுக்கு சிலிண்டர் எடுத்து வர ஐம்பது ரூபாய் இதைப்பற்றி கேள்வி எழுப்பினால் உங்களுக்கு வரவேண்டிய கேஸ் சிலிண்டர் டீக்கடைக்குப் போய்விடும்.
மானசாட்சியை அடகு வைத்தால்தான் " மத்திய அரசின் மானிய தொகை, பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது" இப்படி எழுத முடியும்?
சிறிய அளவிலான நபர்கள் செய்யும் தவறுகள் அனைவரையும் அலைக்கழிக்கிறது . சாலையில் வேகத்தடைகள் போல .
போலி பயனாளர் மூலமாக பயனடைந்து ஏஜன்சிகள் தான். அவர்கள் கைரேகை ஸ்கேனர் பணியை செய்வதில்லை. அவர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்தால் தான் இந்த பணி சாத்தியம். பெரும்பாலும் அரசியல் கட்சிகள் சார்ந்தவர்கள் தான் ஏஜன்சிகள் நடத்தி வருகின்றனர். இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டால் ஏஜன்சிகள் போலி பயனர்களுக்கு மட்டும் சிலிண்டர் வழங்கி பொது மக்களை மத்திய அரசுக்கு எதிராக போராட தூண்டும் வாய்ப்பும் உள்ளது.
அது சரி. ஆட்கள் நடுவிலேயே அவர்களுக்கு தெரிந்த நபர்களுக்கு சிலிண்டரில் full cylinder to empty cylinder gas பரிமாற்றம் நடக்கிறதே தெரிந்தவர்களுடன், இதை எப்படி தடுக்கப் போறார்கள்
அண்டை வீட்டார்கள் அவசரத்திற்கு ஒருவருக்கொருவர் கேஸ் சிலிண்டர்களை கொடுத்து உதவிக்கொள்வதில் தவறில்லை. அது சுமுகமான நட்பு தொடர வழி கொடுக்கும்.
அட போங்க நீங்க ஒண்ணு., வணிக உணவு நிறுவனங்களில் சர்வ சாதாரணமாக வீட்டு உபயோக சிலிண்டரைப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி தெருக்களில் வீடுகளில் உள்ள இரும்பு கேட்கள் கட்டில்கள் போன்றவை ரிப்பேர் செய்பவர்கள் வெல்டிங் செய்ய வீட்டு சிலிண்டர்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அனைவருக்கும் தெரிந்தே இது நடக்கின்றது. எல்லாத்துக்கும் அடிப்படை காசு பணம் மணி துட்டு டப்பு.
இது ஒரு சாதாரண விஷயம். இணைப்பு உள்ள வாடிக்கையாளர் அவரது ஆதார் எண் கொடுத்திருப்பார். ஒரே ஒருமுறை கேஸ் ஏஜென்சிக்கு சென்று கைரேகை வைத்து ஆதாரின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். வயதானவர்களின் வீட்டிற்கு கேஸ் டெலிவரி செய்யும்போது நேரடியாக வீட்டிலேயே கைரேகை பெற்று உறுதி செய்யலாம். இடம்பெயர்ந்தவர்கள், உயிரிழந்தவர்கள் பெயர்களில் இணைப்பு இருந்தால் கண்டுபிடிக்கப் படும். அந்த இணைப்புகளை சரியான நபர்களுக்கு பெயர்மாற்றம் செய்யலாம் அல்லது ரத்து செய்யலாம். இந்த நடவடிக்கை 2-3 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வது நலம்.
Already while issuing Aadhar card they entered every details and various prints including fingers and eyes etc. Instead of improving the quality and authendication of aadhar card, every department started their verification, this leads to unnecessary things to guenine customers. If every department has to verify the credentials of the persons, what is the necessity of the adhar card. Oil companies and their agents, may have random check on their own accoriding to their convinence and help the aadhars authencity to a maximum. The KYC for Banks, KYC for fastrack, KYC for pan nos. What is this?
இந்தியன் ஆயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பலர் இன்னும் தங்களின் விரல் ரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். எனவே, மார்ச் 31ம் தேதிக்கு பின்பும், வழக்கம் போல் சிலிண்டர்களை முன்பதிவு செய்து வாங்கலாம்.
senior citizens and super senior citizens like me with health issues cannot visit the agency physically as we have to travel long distance.Hence, arrangement to be made to get the biometric verification done by the supplier at our residence. Alternatively, post office can be authorized to verify at the residence of the consumer as is being done for life certificates by charging a fee.
திரு. கிருஷ்ணன் அவர்களே, நீங்கள் குறிப்பிடும் இந்த சலுகை கோவையில் கேஸ் கொண்டு வருபவர்களே வீடுகளில் வந்து எடுத்து சென்றார்கள். ஆனால் அதற்கு நீங்கள் அவர்களுக்கு கப்பம் கட்டவேண்டுமாம் கம்பெனிக்கு சென்று முறையிட்டதில் கப்பம் கட்டவேண்டாம் என்று சொன்னார்கள். அதன் பின்னர் கேஸ் கொண்டு வருபவர்கள் செய்ய மறுத்துவிட்டார்கள்.