உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலை, கடல், தண்ணீர் மாநாடு; சரமாரியாக அறிவித்தார் சீமான்

மலை, கடல், தண்ணீர் மாநாடு; சரமாரியாக அறிவித்தார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: அடுத்ததாக மலை, கடல் மற்றும் தண்ணீர் மாநாடு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; திருச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியது குறித்த கேள்விக்கு; படிக்கும் குழந்தைகளின் பள்ளிக்கு விடுமுறையை அறிவித்து விட்டு, உங்களுடன் முதல்வர் முகாமை நடத்த வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது. சிவகங்கையில் மனுக்களை வாங்கிக் கொண்டு சாக்கடை குழியில் போட்டு விட்டு சென்றீர்கள். இது மாதிரியான கொடுமைகளை செய்வதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சி. இது போல இன்னும் நடக்கும். துணை ஜனாதிபதி குறித்த கேள்விக்கு; துணை ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் தமிழர், கன்னடர், தெலுங்கர் என்று எல்லாம் கிடையாது. ஆர்எஸ்எஸ்-ன் கோட்பாட்டின் படி தான் பாஜ இயங்கும். அவங்க எல்லாம் ஆர்எஸ்எஸ்சில் பயிற்சி பெற்றவர்கள். தமிழராக இருந்து கொண்டு, ஹிந்தி திணிப்பு, நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து விடுவார்களா? என்ன கொள்கை வைத்துள்ளார்களே, அதைத் தான் கடைபிடிப்பார்கள். தெரியாத வடமாநிலத்தவருக்கு, இவர் தெரிந்தவராக இருக்கிறார். அவ்வளவு தான். திமுகவைப் போல பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. பாஜவின் அனைத்து கொள்கைகளிலும் ஒத்துப் போய் ஒரு மாநில ஆட்சி நடக்கிறது என்றால், அது திமுக ஆட்சி தான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதல்முறையாக பேரணி நடத்தியதே நம் முதல்வர் தான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து உலக நாடுகளுக்கு சென்று பேசியது கனிமொழி தான். அன்று பாஜ கூட்டணியில் இருந்தாங்க. இன்று காங்கிரஸோடு இருக்காங்க. அரசியல் தேவை லாபத்திற்காக பேசுவது. நாங்க பாசிசம், மதவாதத்திற்கு திமுக எதிரானது என்று எதை வைத்து சொல்வீர்கள். குஜராத் கலவரத்தை கருணாநிதி ஆதரித்தார். அது ஒரு மாநில பிரச்னை, சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றார். இப்ப கூட்டணியில் இல்லாததால், மணிப்பூர் கலவரத்தை எதிர்க்கிறீர்கள். அனைத்து வழிகளிலும் நட்போடு இருக்கிறார்கள்.இல.கணேசன் மறைந்த போது, பிரதமர் மோடியின் மரியாதையை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து செய்தது ஏன்? யார் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதற்கு இதற்கு மேல் சான்று வேண்டுமா? விஜய் கூட்டணி குறித்த கேள்விக்கு; நான் கூட்டம் சேர்த்து சண்டைக்கு போகிறவன் அல்ல. கொள்கையை நம்பி தான். மக்களை வைத்து பிழைக்க கட்சி தொடங்கவில்லை. நீங்க முன்வைக்கப் போகும் தத்துவம் என்ன? நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்கு காரணமே, காங்கிரஸ், பாஜ, அதிமுக, திமுக தான். அப்புறம் இந்தக் கட்சிகளோடு சேர்ந்து என்ன செய்யப் போகிறாய். அது அவங்க முடிவு. அவங்க கட்சி. சனிக்கிழமை, சனிக்கிழமை சந்திக்கவேண்டும் என்று. அதைப் போய் நாம் என்ன கருத்து சொல்ல முடியும். அது என் விருப்பம் என்றால் என்ன செய்ய முடியும், என்றார். பிரசாரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் குறித்த கேள்விக்கு; இதை எல்லாம் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் சிக்கல் தான். அதிகாரங்களையே எதிர்த்து சண்டையிட்டு வருவதால், 220 வழக்குகள் உள்ளன. இதுக்கே பயந்து கொண்டால் எப்படி? அதிகாரம் என்று வரும் போது அடக்குமுறைகள் இருக்கத்தான் செய்யும். நாளைக்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? என்று கேட்பார்கள். தம்பி (விஜய்) இப்பத்தானே வந்திருக்கிறார். விமான நிலையத்திற்கு பெயர் வைக்கும் விவகாரம் தொடர்பாக; முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்கச்சொல்லி ஒரு தரப்பும், இமானுவேல் சேகரன் பெயரை வைக்குமாறு ஒரு தரப்பினரும் சொல்லுவார்கள். பேசாமல், பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை வையுங்கள்.மலைகளின் மாநாடு தர்மபுரியில் நடத்துகிறோம். அதன்பிறகு தூத்துக்குடியில் கடல் மாநாடு, தஞ்சையில் தண்ணீரின் மாநாடு நடத்தப்போகிறோம். ஐம்பூதங்கள் இல்லாமல் பூமியில் எந்த உயிரினங்களும் இருக்காது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Durai Kuppusami
செப் 12, 2025 09:49

ஆசையைப்பாரு.... யார் அண்ணன் ஃபுல் அரிக்குது


Durai Kuppusami
செப் 12, 2025 07:45

இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டியது. முதல்வரை பார்த்ததில் இருந்து திமுக எதிர்ப்பு என்பது சுத்தமா இல்லை என்ன நடந்தது என்பதை கவனிக்கவும் இப்ப பைத்தியம் மாதிரி பேசி ஆடு மாடு கோழி பண்ணி கொக்கு மாநாடு நடத்துவார் இவர் பைத்தியம் இல்லை தமிழ் மக்களை ஆக்குவது இதுதான் வேலை இந்த யோக்கியன் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டாராம் அது எதற்கு... எல்லோருக்கும் தெரியும் உன்ன நம்பி இருக்கும் தம்பிகளை சொல்லணும் நீங்க என்றைக்கு திருந்த போனீங்க......


mohana sundaram
செப் 12, 2025 06:39

சைமன் என்ற சீமானுக்கு என்ன ஆயிற்று? சுடாலினை சந்தித்து வந்தபின் திமுகவை கழுவி ஊற்றுவதை நிறுத்திவிட்டு இப்பொழுது இயற்கை ஆடு மாடு மரங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அண்ணே ஏதாவது பெட்டி வாங்கி விட்டீரா?


தாமரை மலர்கிறது
செப் 11, 2025 19:45

பிஜேபி கொள்கைகளை திருடி வியாபாரம் செய்வதில் அண்ணன் ஒரு பெரிய கில்லாடி. ஹிந்து மத கடவுள் முருகனை முப்பாட்டன் என்கிறார். இலவசத்தை நீ எங்களுக்கு போடாத பிச்சை என்கிறார். பசுவை போற்றுவதை, மாடுகளின் மாநாடு என்கிறார். இயற்கையை போற்றும் ஹிந்து மதக்கொள்கையை அப்படியே காபி அடித்து மரங்களின் மாநாடு, மலை கடல் தண்ணீர் மாநாடு என்று மக்களுக்கு பிடித்தவாறு வகைவகையாக வடை சுட்டுக்கொண்டிருக்கிறார்.


திகழ்ஓவியன்
செப் 11, 2025 18:55

விரும்பி இணைந்தால் மகிழ்ச்சி , இல்லாவிட்டால் பயிற்சி தொடரும் அண்ணன் முயற்சி


Mecca Shivan
செப் 11, 2025 18:00

அப்புறம் மிஞ்சி இருப்பது தனது டொயோட்டா மற்றும் இஸுஸு வண்டிக்கான ஹோமம் மட்டுமே


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
செப் 11, 2025 19:57

மஞ்சப்பை திருட்டு ரயில் கும்பல் ஹம்மர் கார்லயும் , லேண்ட் க்ருஸ்ஸர் கார்ல போகலாம் அது ஓகேவா ?


Vasan
செப் 11, 2025 17:27

Seeman Anne, Please conduct meeting in Chennai itself. 3-in-1. 1 Marina for Sea. 2 Pallavaram/Thirusulam or St.Thomas mount for Hill. 3 Puzhal lake for Water. Finally adjacent prison in Puzhal. Please avoid Valasaravakkam route as the traffic is high there.


Oviya Vijay
செப் 11, 2025 17:23

அனைத்து மாநாடுகளும் முடிந்த கையோடு நேராக கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்குச் சென்று உள்நோயாளியாக தன் பெயரைப் பதிவு செய்து கொள்வார் என எதிர்பார்க்கலாம்...


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
செப் 11, 2025 19:59

விஜய் மாதிரி ஆளுங்கெல்லாம் தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஆகிவிட்டால் மொத்தம் தமிழ்நாட்டு மக்களும் கீழ்ப்பாக்கத்திற்கு போகவேண்டியதுதான்.


Vasan
செப் 11, 2025 16:49

Seemaan uncle, please conduct the conference on Saturdays only in the same place in which Vijay Thambi has planned, so that Vijay crowd can be bifurcated.


கத்தரிக்காய் வியாபாரி
செப் 11, 2025 15:22

நல்ல விஷயம். திராவிடத்தை ஒழிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை


திகழ்ஓவியன்
செப் 11, 2025 19:52

ஆரிய பவன் எல்லாம் ஒழித்து பிரியாணி கடைகளா மாற்றிய நாங்கள் , கூட கத்தரிக்காய் சாப்ஸ் வேறு கொடுக்கிறார்கள்


முக்கிய வீடியோ