உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதானியை ரகசியமாய் சந்தித்தது ஏன்! முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி

அதானியை ரகசியமாய் சந்தித்தது ஏன்! முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; கவுதம் அதானியை முதல்வர் ஸ்டாலின் ரகசியமாகச் சந்தித்தது ஏன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;முன்னணி தொழிலதிபர் கவுதம் அதானி மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார். அதற்காக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரியங்களுக்கு ஏறத்தாழ 2,000 கோடி ரூபாய்க்கும் மேலாக லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியது அம்பலமாகி உள்ளது.இந்திய சூரிய ஒளி மின் உற்பத்திக் கழகத்திடமிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யச் சொல்லி ஆந்திரா, தமிழகம், சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் மின் வாரியங்களுக்குக்கு 2020-2024ம் ஆண்டு காலத்தில் 2,000 கோடி ரூபாய்வரை லஞ்சம் கொடுக்கப்பட்டு இருக்கிறது எனக் கூறி, அதானி குழுமத்தின் முறைகேட்டை ஆதாரங்களோடு வெளிப்படுத்தியிருக்கிறது அமெரிக்க அரசு.இந்த வழக்கு நியூயார்க் கிழக்கு மாவட்டத்தின் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தொடுக்கப்பட்டு, அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 2,000 கோடி ரூபாயை இந்தியாவின் பல்வேறு மாநில மின்வாரியங்களுக்கு லஞ்சமாகக் கொடுத்து பெறப்பட்ட ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவில் முதலீடுகளைப் பெற முயன்றபோது ஒட்டு மொத்தமாகச் சிக்கியிருக்கிறது அதானி குழுமம்.செப்டம்பர் 21, 2021 அன்று 1000 மெகாவாட் மின்சாரத்தைப் பெற இந்திய சூரிய ஒளி மின் உற்பத்திக் கழகத்துடன் தமிழ்நாடு மின்வாரியம் ஒப்பந்தமிட்டிருக்கிறது. இதற்குப் பின்புலத்தில் அதானி குழுமம் தமிழக மின்வாரியத்துக்குக் கோடிகளைக் கொட்டி இறைத்திருக்கிறது என்பது அமெரிக்க அரசின் குற்றச்சாட்டின் மூலம் அம்பலமாகியிருக்கிறது. 2012- 2016ம் ஆண்டுக் காலக்கட்டத்தில், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசிய நிறுவனத்திடமிருந்து வாங்கி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு அதானி குழுமம் மும்மடங்கு அதிக விலைக்கு விற்று, முறைகேடு செய்து 6,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியதற்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை; இச்சமயத்தில், தி.மு.க.,வின் ஆட்சி நிர்வாகத்துக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்து, இந்திய சூரிய ஒளி மின் உற்பத்திக் கழகத்திடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கச் செய்திருக்கும் செய்தி வெளியாகியிருப்பது திராவிடக்கட்சிகளின் கேடுகெட்ட ஆட்சி நிர்வாகத்துக்கான சமகாலச் சாட்சிகளாகும்.திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் அமெரிக்கா வரை சென்று தமிழகத்தின் மானம் சந்தி சிரித்து நிற்கிறது. இருந்தும், இதுவரை முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்காது மவுனம் சாதிக்கிறார். அதானி குழுமம் லஞ்சம் கொடுத்து தான், தமிழ்நாடு மின்வாரியம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தமிட்டது என்பது தானே குற்றச்சாட்டு. அதுகுறித்து தி.மு.க. அரசின் நிலைப்பாடென்ன? அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதியில் செய்திட்ட 6,000 கோடி ரூபாய் ஊழல் மீது இன்று வரை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க மறுப்பது தான் திராவிட மாடலா? கடந்த ஜூலை 10ம் தேதி தமிழகம் வந்த அதானி, முதல்வர் ஸ்டாலினை ரகசியமாகச் சந்தித்துச் செல்ல வேண்டிய அவசியமென்ன? சந்திப்பையே வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு என்ன பேசி முடிக்கப்பட்டது? முதல்வர் ஸ்டாலின் கவுதம் அதானியைச் சந்திப்பதும், அதானியின் மகன் கரன் அதானி துணை முதல்வரான உதயநிதியின் பதவியேற்புக்கு வாழ்த்துச் சொல்வதும் எதன் வெளிப்பாடு? தி.மு.க., அரசுக்கும், கவுதம் அதானிக்கும் இடையே என்ன ரகசிய உறவு? இதுதான் அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கான ஆட்சியா?இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

bharathi
நவ 25, 2024 10:02

kootathukku naduvala Mike pudichu kattha innum yaravadhu iruklangala


Kasimani Baskaran
நவ 24, 2024 22:32

அவர் சந்தித்தது கவுதம். சீமான் வீணாக அதானியை உள்ளே கொண்டுவந்து குழப்புகிறார் - உடன் பிறப்புக்கள்.


Venkatesh
நவ 24, 2024 21:34

ஈழத் தமிழர்கள் பேர சொல்லி பிழைக்கும் நீ... தலைவரை பற்றி அவதூறு பேசிய பின்னர் அவர் முன் கைக்கட்டி போஸ் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன


sankaranarayanan
நவ 24, 2024 20:52

அதானியின் கிரின் எனர்ஜி 648-மெகாவாட் சூரிய ஒளி பவர் பிளாண்ட்டை கமுதியில் நிறுவியுள்ளது. இதற்கு ரூபாய் 4550 கோடி மூலதன செலவிடப்பட்டுள்ளது ஆனால் இதுவரையில் எவ்வளவு கையூட்டல் கொடுத்துள்ளது என்று இன்னும் வெளிவரவில்லை. அது சரியாக வெளிவந்ததும் இருக்கிறது அரசியல் விளையாட்டு அம்பலம். அப்புறம் பார்க்கலாம் அரசியலின் போக்கு


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 24, 2024 20:24

ஆமாம் நான் சந்தித்து பெரிய தொகை கறக்கலாம் என்று இருந்தேன் நீ என் சந்தித்தாய்


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 24, 2024 20:05

சரி ஆமை காரியோன் , ரஜினி வெற்றிடம் இருக்கு என்று சொன்னபோது ஆமாம் சுடுகாட்டில் இருக்கு என்று சொன்ன ஆம்பிளை, இப்போ ரஜினியை சந்தித்தது ஏன்? DMK உன்னை அழிக்காமல் விட மாட்டார்கள் , ஜெயா வையே ஜெயிலுக்கு அனுப்பிய கூட்டம் உஷார்...


Ramesh Sargam
நவ 24, 2024 19:48

ரகசியமாக சந்தித்தாலும் கேள்வி கேட்கிறீர்கள். வெளிப்படையாக சந்தித்தாலும் கேள்வி கேட்கிறீர்கள்? பிறகு எப்படி சந்தித்தால் கேள்வி கேட்கமாட்டீர்கள்? எப்படி சந்தித்தாலும் முதல்வர் பதில் அளிக்கவேண்டும், ஏன் சந்தித்தார் என்று?


R SRINIVASAN
நவ 24, 2024 19:41

MR. S S ஆதாரமில்லால் அரசுகளின் மீது களங்கம் கற்பிப்பது சட்டப்படி குத்ரம். தங்கள் SECE யுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை விலாவரியாக படித்துவிட்டு அதன் பிறகு குற்றம் சொல்லலாம். உண்மையில் மத்திய அரசோ மாநில அரசோ இம்மாதிரி லங்கா ஊழலில் சிக்கியிருந்தால் அதில் கையெழுத்தித்திட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவார்கள். ஆகையால் தங்கள் அந்த ஒப்பந்தத்தை படித்து புரிந்துகொண்டு அதை செய்தித்தாளில் புள்ளி விவரத்துடன் கொடுத்தால் நாங்களும் அதை தெரிந்து கொள்வோம்


sankaranarayanan
நவ 24, 2024 18:54

கடந்த ஜூலை 10ம் தேதி தமிழகம் வந்த அதானி, முதல்வர் ஸ்டாலினை ரகசியமாகச் சந்தித்து பேசிய பேச்சுப்பற்றி ஆட்சியாளர்கள் யாருமே வாயைத்திறக்கவே இல்லையே என்ன காரணம் பணம் அவர்களது வாயை மூடவைத்துகுள்ளது என்றுதான் அர்த்தம் தேர்தலுக்கு முன்பே ஒரு பெரிய பூகம்பமே கிளம்பும் எவ்வளவு கோடி பணம் யார்மூலமாக எப்போது பெறப்பட்டது என்ற எல்லா விவரங்களும் வெளிவரும் சந்தி சிரிக்கும் விரைவில்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 24, 2024 19:47

யாரும் சந்தி சிரிக்க வாய்ப்பில்லை. பிரச்னை என்று வந்தால் எதிரியுடன் கூட சமரசம் செய்துகொள்வார்கள் -நான்கு சுவற்றுக்குள் .....


Kumar
நவ 24, 2024 18:18

கமிஷன் வாங்க தான் வேற எதுக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை