உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புரோக்கர்கள் மீது நடவடிக்கை முதல்வருக்கு நர்ஸ்கள் சங்கம் கடிதம்

புரோக்கர்கள் மீது நடவடிக்கை முதல்வருக்கு நர்ஸ்கள் சங்கம் கடிதம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்ஸ்களுக்கு, கடந்த 22, 23ம் தேதிகளில் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடந்தது. இதில், முறைகேடு நடந்ததாகவும், தென் மாவட்ட மருத்துவமனைகளில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு மாறுதல் பெற, 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகவும், மலர்விழி, வசந்தி என்ற நர்ஸ்கள் பெயரில் கடிதங்கள் வெளியாகின. இக்கடிதம், லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், நர்ஸ்களின், 'வாட்ஸாப்' குழுவிலும் அதிகம் பகிரப்பட்டது.இந்நிலையில், சிவகங்கையில் மலர்விழி என்ற பெயரில், நர்ஸ் யாரும் இல்லை என, மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குனரகம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, அரசின் மீது அவப்பெயரை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சியில் உள்ள நர்ஸ்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் பூமிநாதன், தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம்:

அ.தி.மு.க., ஆட்சியில், தென்மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, நர்ஸ்கள் பணியிட மாறுதல் பெற, 5 முதல் 15 லட்சம் ரூபாய் வரை, புரோக்கர்கள் வாயிலாக வசூலிக்கப்பட்டது. தற்போது, வெளிப்படையாக கவுன்சிலிங் நடப்பதால், அப்போது பலன் அடைந்த புரோக்கர்கள் விரக்தி அடைந்துள்ளனர். எனவே, மருத்துவம், ஊரக பணிகள் நல இயக்குனரகம் மற்றும் தி.மு.க., அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், போலியான பெயர்களை பயன்படுத்தி கடிதங்களை உலா விடுகின்றனர். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Padmasridharan
மே 27, 2025 13:09

"அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" முதல்ல இந்த மாதிரி வேலைகள் செய்வதே காவலர்கள்தான்.. சட்டத்தை பாதுகாக்க சொன்னா கூட்டா சேர்ந்து லஞ்சம் வாங்கி பஞ்சாயத்து பண்ணி குற்றங்களை மூடி மறைக்கிறார்கள். இளைஞர்கள் இவங்களுக்கு கொடுத்த பணத்தால அவங்கவங்க வீட்ல பொய்கள் சொல்லி அந்த பணத்தை மீட்க புதுசா குற்றங்கள் செய்ய ஆரம்பிக்கிறார்கள்..


visu
மே 27, 2025 11:56

நம்பிட்டோம்


Ram
மே 27, 2025 09:08

இந்த சங்கம் எதையோ எதிர்பார்த்து ஜால்ரா அடிக்கிறது … உண்மையை வெளிகொண்டுவர்பவர்கள் அவர்கள் பெயரை வெளியிடமாட்டார்கள் … மாறுதல் ஆன்வ்க்ர்களின் அவர்களின் உறவின்ர்க்க்ள் வாங்கிக்கணக்கை சரிபார்த்தாள் எல்லாம் தெரிந்துவிடும்


GMM
மே 27, 2025 07:36

தமிழக மருத்துவம், ஊரக பணிகள் நல இயக்குனரகம் மற்றும் தி.மு.க கட்சி தானே மறுக்க வேண்டும். செவிலியர் நல சங்க தலைவர் ஏன் கடிதம் எழுத வேண்டும்? அரசு ஊழியர்கள் சங்கங்கள் மூலம் முழு அளவில் ஆளும் கட்சியின் கட்டுபாட்டில் உள்ளனர்?


Varadarajan Nagarajan
மே 27, 2025 07:08

சென்ற ஆட்சியில் 10 - 15 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பொத்தாம்பொதுவாக அறிக்கைவிடாமல் தகுந்த ஆதாரங்களுடன் ஏன் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாமே.


pv, முத்தூர்
மே 27, 2025 06:11

சென்றமுறை ஆசிரியர் மற்றும் மருத்துவர்களாள் ஆட்சியை பிடித்துபின் முதுகில் குத்திய திமுகா, தற்போது செவிலியர் துறைப்பக்கம் திரும்பியுல்லது. பாட்டில்க்கு 10ரூ வாங்கிரவங்க, 10 லட்சம் வாங்கவில்லைனு சொன்னா யார் நம்புவாங் Mr. பூமிநாதன்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை