உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச ஸ்கூட்டர் வழங்க ரூ.5,000 லஞ்சம் மாற்றுத்திறனாளிகளிடம் அதிகாரிகள் வசூல்

இலவச ஸ்கூட்டர் வழங்க ரூ.5,000 லஞ்சம் மாற்றுத்திறனாளிகளிடம் அதிகாரிகள் வசூல்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை அரசு இலவசமாக வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரை வழங்க, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள், பயனாளிகளிடம் தலா, 5,000 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கை, கால், தண்டுவடம், போலியோ பாதிப்புக்கு உள்ளான, 75 சதவீதத்திற்கு மேல் குறைபாடுடைய நபர்களுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது.இதைப்பெற தகுதியானவர்கள், தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் பெற, 75 சதவீத குறைபாடு என்றிருந்த தகுதியை, தமிழக அரசு கடந்த ஆண்டு, 60 சதவீதமாக குறைத்தது.அதன்படி, தமிழகம் முழுதும் விண்ணப்பித்து காத்திருக்கும், தகுதி வாய்ந்த, 26,000 மாற்றுத் திறனாளிகளுக்கு, 'ஸ்கூட்டர்' வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பரில் துவக்கி வைத்தார். அதன்பின், மாவட்டந்தோறும் தகுதியுடைய நபர்களுக்கு, 'ஸ்கூட்டர்' வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், அரசு வழங்கும் இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டர் பெற, எம்.பி., - எம்.எல்.ஏ., மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆதரவுடன் செல்வோருக்கே, முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், மற்றவர்களிடம் ஸ்கூட்டர் பெற, 5,000 தரும்படி கேட்பதாகவும், மாற்றுத்திறனாளிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறியதாவது: உடல் ரீதியாக இயங்க இயலாத மாற்றுத்திறனாளிகள், சுய சார்பு பெறும் வகையில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை அரசு வழங்குகிறது. ஆனாலும், இவற்றை எங்களால் எளிதில் பெற முடியவில்லை. ஆளும் கட்சியினர் பரிந்துரை தேவைப்படுகிறது. யாருடைய பரிந்துரையும் இல்லாமல் விண்ணப்பித்தால், 5,000 முதல் 10,000 ரூபாய் வரை பணம் கொடுக்க வேண்டியுள்ளது. பணம் கொடுக்காவிட்டால், விண்ணப்பம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதில்லை. திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், பலரும் பணம் செலுத்தியே வாகனம் பெற்றுள்ளனர். திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், வாகனங்களை பெறும் பயனாளிகள் அதை விற்பதும் அதிகரித்துள்ளது.இவற்றை தடுக்கவும், தகுதியான பயனாளிகளுக்கு விரைவாக ஸ்கூட்டர் வழங்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.2020ல், 'ஸ்கூட்டர்' பெற விண்ணப்பித்து இன்று வரை காத்திருக்கிறேன்; கிடைக்கவில்லை. எனக்கு பின் விண்ணப்பித்த பலரும், 'ஸ்கூட்டர்' பெற்றுள்ளனர். அதிகாரிகளுக்கு, 5,000 ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். முடியாதவர்களுக்கு அரசு இலவசமாக ஸ்கூட்டர் வழங்குகிறது. அதற்கும் பணம் கேட்பது முறையா?- மணிகண்டன், திருவண்ணாமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sasikumaren
ஜூலை 08, 2025 03:36

பெரிய விபத்தில் ஒரு காலை இழந்த எனது நண்பருக்கு 2014-ல் இருந்து இந்த மாற்று திறன் உடையவர்க்கு இந்த மூன்று சக்கர வாகனம் வேண்டும் என்று நிறைய முறை சென்று மன்றாடியும் விட்டோம் ஆனால் இதுவரை அந்த வாகனம் கிடைக்கவில்லை உழைத்து வாழும் நண்பருக்கு விரைவில் இந்த சிறப்பு வாகனம் கிடைத்தால் நன்றாக இருக்கும் ஆனால் எட்டி காய் இனித்தால் என்ன கசந்தால் என்ன காலம் ஆகி விட்டது


G Sundar
ஜூலை 02, 2025 22:37

எங்கள் ஊராம் கிருஷ்ணகிரி கலெக்ட்ராபீஸ்ஸுக்கு வந்து பாருங்கள் மாற்றுத்திறனாளிகளின் அதிகாரிகள் கூறும் வார்த்தை உங்களிடம் யாராவது இருசக்கிர இணைப்பு வாகனம் வாங்கிதருகிறோமென்று பணம் கேட்டால் கொடுக்காதீர்கள் அப்படி அரசாங்கமோ அதிகாரிகளோ கேட்பதில்லை நீங்கள் கொடுத்து ஏமாறாதீர்களென்று கூறுவார்கள் அப்படி கூறிதான் எனக்கும் இணைப்புவாகனம் கொடுத்தார்கள் நான் அறுபது சதவிகித போலியோ மாற்றுத்திறனாளி எந்த கையூட்டும் வாங்காத மிக கண்டிப்பான ஒழுக்கமான அதிகாரிகளை தமிழகத்தில் காணவேண்டும் எனில் எங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாருங்கள்


அப்பாவி
ஜூலை 02, 2025 17:33

திருட்டு திராவிடனுங்க தங்க அம்மாவுக்கு பாடை கட்டினாலும் அதில் 40 பர்சண்ட் கமுஷன் அடிப்பாங்க.


Gokila Gokila
ஜூலை 02, 2025 11:46

என்னுடைய மனைவிக்கு கிடைக்குமா இலவச ஸ்கூட்டர். கண் பார்வை இல்லை அரசு சம்மதமா எந்த சலுகை யும் கிடைக்கவில்லையே


Ramasamy
ஜூலை 02, 2025 11:21

பிணத்திடம் கூட லஞ்சம் வாங்குவார்கள் , ஆட்சி அப்படி ..?


ஜான் குணசேகரன்
ஜூலை 02, 2025 09:48

அரசு அதிகாரிகளின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறான நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் ஒன்றிய, மாவட்ட பிரதிநிதிகள், எம்.எல்.ஏ, அமைச்சர்களின் பி.ஏ கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு அதிகாரிகளிடம் அனுப்பி வைத்து அவர்களுக்கு அரசு உதவிகள் கிடைக்கச் செய்கிறார்கள். அரசியல்வாதிகளே கமிஷன் தொகையை நிர்ணயம் செய்து அதிகாரிகளை வசூல் செய்ய வைக்கிறார்கள். இதனை மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் துணை போகிறார்கள். மாட்டிக்கொண்டு முடிப்பது கீழ் நிலை அலுவலர்கள். கடந்த 40 ஆண்டுகளாக இது வளர்க்கப்பட்டு செம்மை படுத்தப்பட்டுள்ளது. மக்களும் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது என்று உணர்ந்து பணம் கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். பணம் வாங்காத அதிகாரிகள் மீது குற்றச்சாட்டப்பட்டு கூறுகின்றனர்.


Prasanna Krishnan R
ஜூலை 02, 2025 09:35

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை .... என்று கூறுங்கள்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 02, 2025 09:19

அரசு எப்போதும் அனைவரையும் சமமாக நடத்தும் ...இதில் மாற்று திறனாளிகளிடம் லஞ்சம் வாங்காவிட்டால் அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்கள் கேள்வி கேட்பார்கள்.. எனவேதான் மனசை கல்லாக்கிக்கொண்டு மாற்று திறனாளிகளிடம் வேறு வழியில்லாமல் .. லஞ்சம் வாங்குகிறார்கள் ..இதை கழக தொண்டர்களும்.. உரிமைத்தொகை பெறுபவர்களும் ..பஸ்ஸில் இலவசமாக பயணம் செய்வோரும் புரிந்து கொண்டு கழகத்திற்கு 2026 தேர்தளில் வாக்களிப்பார்கள் ..திராவிட மாடல் ஆட்சியில் காசுகொடுக்கா விட்டால் தூசும் நகராது என்பது தமிழக மக்களுக்கு தெரிந்ததுதான் ..


Padmasridharan
ஜூலை 02, 2025 09:08

பள்ளிக்கூடத்திலும் இவர்களிடமிருந்து fees கேட்டு வாங்கறாங்களே . .


ديفيد رافائيل
ஜூலை 02, 2025 08:56

அரசு கொடுக்கும் பணத்தை அரசு அதிகாரிகள் தன்னுடைய பணத்தை செலவழித்து மக்களுக்கு சேவை செய்றதா நினைச்சுட்டு இருக்கானுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை