உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் துரைமுருகன் பிடிவாதத்தால் மணல் குவாரிகள் திறப்பு முடக்கம்: சமரச முயற்சியில் அதிகாரிகள்

அமைச்சர் துரைமுருகன் பிடிவாதத்தால் மணல் குவாரிகள் திறப்பு முடக்கம்: சமரச முயற்சியில் அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒப்பந்ததாரர்கள் தேர்வில், அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் காட்டுவதால், மணல் குவாரிகள் திறப்பு முடங்கியுள்ளதாக அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 'எம் - சாண்ட்' விற்பனை வெ குவாக அதிகரித்தாலும், கட்டுமான பணிக்கு ஆற்று மணல் வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர். இதனால், மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c2pzss82&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தயாராகினர் தமிழகத்தில், 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க சுற்றுச்சூழல் அனுமதி இருந்தாலும், தற்போதைய நிலவரப்படி, எட்டு குவாரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, புதுக்கோட்டையில், 3; கடலுாரில், 2; தஞ்சாவூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒன்று என, மொத்தம் எட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த இடங்களில், நவம்பர், 1 முதல் மணல் குவாரிகளை திறக்க, நீர்வளத்துறை அதிகாரிகள் தயாராகினர். இதுகுறித்து, மணல் லாரி உரிமையாளர்கள் கூறியதாவது: புதிதாக திறக்கப்பட உள்ள குவாரிகளில், மணல் அள்ளி யார்டுகளுக்கு கொண்டு வரும் பொறுப்பை ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்க வேண்டும். இதற்காக, மயிலாடுதுறையை சேர்ந்த ராஜப்பா என்ற நபரிடம், மொத்தமாக ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், நாமக்கல் குவாரியை மட்டும், அங்குள்ள பொன்னர், சங்கர் என்ற சகோதரர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. உடன்பாடு ஆனால், ஏற்கனவே இதில் ஒப்பந்ததாரராக இருந்த புதுக்கோட்டையை சேர்ந்தவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை. அவருக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்க, அமைச்சர் துரைமுருகன் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதனால், புதிய ஒப்பந்ததாரர்களிடம் பணியை ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீர் வளத்துறை அதிகாரிகள், புதிய ஒப்பந்ததாரருக்கு அனுமதி பெறுவதற்காக அமைச்சரிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் இதில் உடன்பாடு ஏற்படும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

kamal 00
நவ 08, 2025 10:36

கொடுமை இவருக்கு இன்னும் ஓட்டு போடற கொத்தடிமைகள்


ராமகிருஷ்ணன்
நவ 08, 2025 09:09

தேர்தல் முடிவுகளை கணித்து விட்டார் அதனால பயம்தான். குறைந்த நாட்களில் அதிகமாக சுருட்ட முடியாதே அந்த பதற்றம் தான் கோபமாகி விட்டது


ராமகிருஷ்ணன்
நவ 08, 2025 09:03

மொரட்டு சைஸில் இருக்காரு, கணக்கு வழக்கு இல்லாமல் அதிகமாக முழுங்கி னால் தான் பசி அடங்கும்..


தியாகு
நவ 08, 2025 08:18

இவருக்கெல்லாம் இன்னமும் ஓட்டு போடுகிறார்களே டுமிழர்கள், அவர்களின் தற்குறித்தனத்தை என்னவென்று சொல்வது.


duruvasar
நவ 08, 2025 08:08

பேரம் முடியும் வரை இழுபரியகாத்தான் இருக்கும். குளம் எதனை கால்களை கண்டிருக்கும் கால்கள் எதனை குளத்தை கண்டிருக்கும் என ஒரு மலையாள சொலவடை உண்டு


தியாகு
நவ 08, 2025 08:05

ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் மக்கள் வரிப்பணம் பல லட்சம் கோடிகளை வாரி சுருட்டி தங்கள் குடும்ப சொத்தாக மாற்றுவோரை தொடர்ந்து ஆட்சியில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள். தமிழர்களின் தனி குணத்தில் இதுவும் அடக்கம். ஹி...ஹி...ஹி... விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.


SRIDHAAR.R
நவ 08, 2025 07:58

மக்களே உங்கள் கண் முன் நடக்க இருக்கும் இயற்கை வள கொள்ளையை தட்டி கேட்காதீர்கள் என நினைக்கிறோம்


Ramesh Sargam
நவ 08, 2025 07:07

இறைவன் கொடுத்த இயற்கைவளங்களை ஆட்சியில் உள்ளவர்கள் நேர்மையாக, ஊழல் எதுவும் செய்யாமல், தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவவேண்டும். அதைவிட்டு, துரைமுருகன் போன்றவர்கள் ஏதோ அவைகளை அவர்களே உருவாக்கியதுபோல சீன் காட்டுவது முறையல்ல.


V RAMASWAMY
நவ 08, 2025 09:06

Elected representatives should realize that they represent all sections of the Society and therefore should not act in any manner that exposes self-interest or should take independent decisions that affects Societys welfare. Once they become Ministers, it is the States/Nations welfare and interest that they should be concerned about.


Ram
நவ 08, 2025 06:09

ஓட்டுப்போட்ட மக்கள் கண்ணீர்வடியுங்கள்


D.Ambujavalli
நவ 08, 2025 06:04

புது ஒப்பந்ததாரர் ‘டீலுக்கு’ ஒத்துவரவில்லை போலும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை