உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரிடம் கொடுத்த 9391 மனுக்கள் 255க்கு தீர்வு என அதிகாரிகள் தகவல்

முதல்வரிடம் கொடுத்த 9391 மனுக்கள் 255க்கு தீர்வு என அதிகாரிகள் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாவட்டங்களில் நடந்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டங்களில், முதல்வரிடம் பொது மக்கள் நேரடியாக கொடுத்த 9,391 மனுக்களில், 255 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் நிலவரம் குறித்து, உயரதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு அலுவலகங்களில், பொது மக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கின்றனர். அவற்றின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், அதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, மக்கள் நினைக்கின்றனர். இதற்காக, தலைமைச் செயலகத்தில், 'முதல்வரின் முகவரி' என்ற பெயரில், ஒரு துறை ஏற்படுத்தப்பட்டு, பொது மக்களின் மனுக்கள் பெறப்படுகின்றன. இதன் மீது, பல்வேறு துறையினர் எடுக்கும் நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது. ஆய்வுக் கூட்டம் இந்நிலையில், அரசு திட்டங்களை துவக்கி வைக்க, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் செல்கிறார். அப்போது மக்கள் முதல்வரிடம் நேரில் மனு அளிக்கின்றனர். இது மட்டுமல்லாது, கடந்த இரண்டு ஆண்டுகளாக, முதல்வர் ஒரு மாவட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்துச் சென்று, மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். அப்போதும் முதல்வரிடம் மக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்கள், தனியாக தொகுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளிடம் விளக்கம் கேட்கப்படுகிறது. இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், மண்டல அளவிலான ஆய்வு கூட்டங்களுக்கு முதல்வர் சென்ற போது, பொது மக்களிடம் இருந்து, 9,391 மனுக்கள் பெறப்பட்டன. அவை, பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டன. அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துறை தலைமை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தற்போது வரை, 255 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக அதிகாரிகள் விளக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும், 5,570 மனுக்கள் தொடர்பான பணிகள் வகைப்படுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் உள்ளன. பணிகளை விரைந்து முடிந்து நிறைவு அறிக்கையை தாக்கல் செய்ய, துறை தலைமை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M Ramachandran
செப் 15, 2025 11:38

கழிவு நீர் வாய்க்காலில் வீசி முடிவு எடுத்தாச்சி.


Kjp
செப் 15, 2025 09:45

தீர்வு காணப்பட்ட அந்த 255 மணுக்களின் விபரம் வெள்ளை அறிக்கையாக கொடுங்கள்.


Mani . V
செப் 15, 2025 05:03

அப்ப மற்றதெல்லாம் பஜ்ஜி, போண்டா கடைக்குப் போய் விட்டதா?


Vasan
செப் 15, 2025 09:30

Balance are floating in Coovam, unable to go to sea. The exit point in sea will be cleaned before monsoon.


Kasimani Baskaran
செப் 15, 2025 03:49

2.71% நடவடிக்கை என்பது பாஸ் மார்க் கூட கிடையாது. மீதி கடலுக்குள் போட்டு விட்டார்களா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.


Vasan
செப் 15, 2025 09:31

The balance petitions are floating in Coovam, unable to go to sea.


புதிய வீடியோ