உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹோட்டலுக்கு சீல் அதிகாரிகள் அதிரடி

ஹோட்டலுக்கு சீல் அதிகாரிகள் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொடுங்கையூர்: கொடுங்கையூர், சிட்கோ சாலையில், எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி ஹோட்டல் செயல்படுகிறது. கடந்த திங்கட்கிழமை, அசைவ பிரியர்கள் பலரும் இந்த ஹோட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். இவர்களில் 40க்கும் மேற்பட் டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று முன்தினம், எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி ஹோட்டலில் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, ஹோட்டலில் இருந்து உணவு மாதிரிகள் எடுக்க முடியவில்லை. மாறாக, சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக, சமையலறைக்கு 'சீல்' வைத்தனர்.பின், ஹோட்டலை மூட உத்தரவிட்டனர். அதன்படி, பராமரிப்பு பணி காரணமாக ஒரு நாள் விடுமுறை என, அறிவிப்பு பலகை வைத்து மூடினர். சென்னையில் பல்வேறு இடங்களில் செயல்படும் இந்த ஹோட்டலின் கிளைகளிலும், இதுபோன்ற புகார்கள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், தொடர் புகார் எதிரொலியால் கொடுங்கையூர், எஸ்.எஸ்.பிரியாணி ஹோட்டலுக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நேற்று மதியம் 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ram
செப் 21, 2024 13:57

பிரியாணி கடைகள் பெருக பெருக இங்கு பெர்டிலிட்டி மருத்துவமனைகளும் அதிகமாகி விட்டது. பிரியாணியில் எண்ணத்தை கலக்கி கொடுக்கிறான் என்று அந்த ஆண்டவனுக்கே தெரியாது. ஸ்ரீலங்காவில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுக்கிறாங்கள் என்று ஒரு செய்தி உண்மையா என்று தெரியவில்லை.


shakti
செப் 21, 2024 13:56

உணவு தரம் பாதுகாப்பில் இந்தியாவிலேயே இரண்டாம் இடம் தமிழ்நாடு .. நம்புங்கப்பா


shakti
செப் 21, 2024 13:54

ஒருவேளை காக்கா பிரியாணியோ ??? அல்லது ஜோத்புர் தெரு பிராணி பிரியாணியோ ?


shakti
செப் 21, 2024 13:53

இதுபோன்ற ஓட்டல்களில் பிரியாணியில் எச்சில் உப்பி தருகிறார்கள் என்று சொல்கிறார்கள் .. ஆண்மை குறைப்பு மருந்து கலக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் . அப்படி இருந்தும் மக்கள் உயிரை பணயம் வைத்து இதுபோன்ற ஓட்டல்களில் ஏன் சாப்பிடுகிறார்கள் என்று புரியவில்லை


ponssasi
செப் 21, 2024 11:48

உணவு மாதிரியை ஏன் எடுக்கமுடியவில்லை?


Kumar Kumzi
செப் 21, 2024 10:38

கடையாக இருக்கும் ஓட்டு பிச்சைக்காக விடியலின் கூலிப்படை நடவடிக்கை எடுக்க மட்டனுங்க


குரு, நெல்லை
செப் 21, 2024 09:56

இப்போதெல்லாம் பிரியாணி உண்பது ஃபேஷன் ஆகிவிட்டது. அதுவும் எங்கிருந்தோ வந்த இறைச்சி பல நாட்கள் பிரிஸீரில் வைத்து சமைத்து பரிமாற படுகிறது சமீபத்தில் 10 டன் இறைச்சி வட மாநில டிரெயினில் பிடிபட்டதாக செய்தியும் வந்தது. அதையும் மீறி இவ்வாறான உணவகங்கள் கட்டுப்பாடு இன்றி காளான் போல நாடெங்கும் பரவி உள்ளது. 10 வருடம் முன்பு 2 non veg hotel இருந்த இடத்தில் இப்போது 20 உள்ளது. மக்கள் அனைவரும் அடிமயாகிவிட்டனர். தரம் இல்லை. வெறும் மணம் கமழும் படி செய்து தருகின்றார்கள். கோவை 2 kmMG ரோட்டில் 3 உணவகங்கள் இருந்தன. இப்போது 30 உள்ளது. குவாலிட்டி எதிர்பார்ப்பது கடினம். வீட்டில் அசைவம் சமைத்து சாப்பிட்டு வந்த காலம் போய் இப்போது ??bucket ஆக பிரியாணி ஆர்டர் செய்து ஃபேஷன் ஆகி விட்டது. நல்ல உணவை தான் உண்ணுகிரோமா என்று டாக்டர் check up செய்த பின்பு தான் தெரிகிறது. 30 நான் veg ஹோட்டல்கள், 20 கிளினிக்கள் உள்ளது. இப்போது ஒரு ஊரில் ஒன்றோ இரண்டு veg hotel மட்டுமே உள்ளது. எந்த மருத்துவரும் எனக்கு தெரிந்த வகையில் எப்போதும் அசைவம் சாப்பிடுவதில்லை. பரிந்துரைப்பது இல்லை.


Jysenn
செப் 21, 2024 09:16

YouTube வீடியோ காரன் காட்டில் அடைமழை .


Kalyanaraman
செப் 21, 2024 08:13

இவ்வளவு நடந்தும் நேற்றும் இவர்களது மற்ற கிளைகளில் கூட்டம் இருந்தது. மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கள் ஹோட்டல் பெயரை சொல்லாமல் செய்தியை அடக்கி வாசித்திருக்கிறார்கள். மக்களுக்காக உண்மையை உரக்க சொல்லி இருக்கிறது. பாராட்டுக்கள்.


S.L.Narasimman
செப் 21, 2024 08:05

அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஒன்றும் நடக்கபோவதில்லை. இதனால் பேரம் தொகைதான் அதிகமாகும். சாப்பிடுபவர்களிடம் விழிப்புணர்ச்சி இருந்தால் தப்புக்கள் குறையும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை