உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்: சட்டசபை குழு ஆய்வில் அதிர்ச்சி

1538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்: சட்டசபை குழு ஆய்வில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், 1538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு சட்டசபை குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இங்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படும் அரிசி மூட்டைகள் இருப்பு வைக்கப்படுவது வழக்கம். இன்று காலை, சட்டசபை உறுப்பினர்கள் அடங்கிய பொது நிறுவனங்களின் ஆய்வு குழுவினர் இந்த கிடங்குக்கு வந்தனர்.இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளின் தரத்தை ஆய்வு செய்தனர். அதில் கடந்த 2022ம் ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட 1,538 டன் அரிசி, மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றதாக இருப்பது கண்டறியப்பட்டது.அந்த அரிசியை கால்நடை தீவனத்துக்கு வழங்க, சட்டசபை குழுவினர் பரிந்துரை செய்தனர். மேலும், இருப்பு வைத்த அரிசியை உரிய காலத்தில் மக்களுக்கு வினியோகம் செய்யாமல், அதன் தரம் குறைவதற்கு காரணமான அதிகாரிகளை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவினர் தெரிவித்தனர். அதன்படி அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று குழுவின் தலைவரும், எம்எல்ஏவுமான நந்தகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Nanchilguru
ஆக 21, 2025 20:44

அரிசி மட்டுமா, ஆட்சியும்தான்


nsathasivan
ஆக 21, 2025 20:22

இதற்கு ஒன்றிய அரசும் அதானி அம்பானி தான் காரணம் என்று தப்பித்து போய் விடுவார்கள்.ஒரு கிலோ இரண்டு கிலோவா 15 லட்சத்து 38ஆயிரம் கிலோ. அதை விளைவிக்க விவசாயிகள் எவ்வளவு வியர்வை சிந்தியிருப்பார்கள்.இநற்கு பொறுப்பு அதிகாரிகள் மட்டும் தான் காரணமா?


சிட்டுக்குருவி
ஆக 21, 2025 19:52

இதை சட்டசபை குழு எளிதாக மாட்டுக்குவழங்கச்சொல்லி எளிதாக கடந்து விட முடியாது .உணவுத்துறை மந்திரிமீதும் ,உணவுத்துறை செயலர் மீதும் சட்டப்படி நடவடிக்கையை எடுக்க சம்பந்தப்பட்டதுறை களுக்கு பரிந்துரைக்கவேண்டும் . முதல்தகவல் அறிக்கையை பதிந்திட காவல்துறைக்கு அறிக்கையை சமர்க்கிப் பட வேண்டும் . கடமை தவறுதல் ,தெரிந்தே கடையாற்றாமை ,தெரிந்தே கடமையை உதாசீனப்படுத்துதல் ,சட்டநடைமுறைகளை பின்பற்றாமை ,நடைமுறை விதிகளை பின்பற்றாமை ,திறமையின்மை ஆகியவற்றின் அடிப்படையிலும் ,அரசுக்கு பொருளாதார இழைப்பு ஏற்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையிலும் விசாரிக்கப் படவேண்டும்.இது ஒரு அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படவேண்டும் .அரசுக்கு இழைப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதனின் இழப்பாகவும் கருதப்படவேண்டும் .மக்களால் விசாரணைக்கு வற்புறுத்தப்படவேண்டும் .


V RAMASWAMY
ஆக 21, 2025 18:50

இந்த மாடலில் இவ்வளவு தானா அவலங்கள்? இன்னும் எத்தனை வரவிருக்கின்றனவோ, எத்தனை மறைக்கப்பட்டிருக்கின்றனவோ?


Ganesun Iyer
ஆக 21, 2025 17:20

வேலையை காப்பாத்த பர்ஸண்டேஜ் பேசப்படும்..


Sudha
ஆக 21, 2025 17:18

இந்த நமக்கு நாமே திட்டங்களை நீதி துறைக்கு அமல் படுத்தினால் என்ன?


Sudha
ஆக 21, 2025 17:17

சாதாரண கணக்குப்படி 75கோடி வீண். முழு ஓய்வூதியம் டிஸ்மிஸ் அபராதம் எல்லாம் சேர்ந்தாள் கூட தேறாது. தண்டனையாக டாஸ்மாக் கடைகளில் டேபிள் துடைக்க சொல்லலாம்


Natchimuthu Chithiraisamy
ஆக 21, 2025 17:02

ஒரு டன் என்றால் அதிகாரிகள் கணக்கில் எவ்வளவு என்பதை ஆய்வு குழு கேள்வி கேட்டிருந்தால் அதிகாரிகள் லட்சணம் தெரிந்திருக்குமே


suresh guptha
ஆக 21, 2025 16:53

WHY YOU ARE WORRYING,WHEN WHOLE T N ITSELF HAS BEEN RUINED BY THEM,THISIS JUJUBI


VSMani
ஆக 21, 2025 16:46

ஒரு அரிசியை உற்பத்தி செய்ய விவசாயிகள் எவ்வளவு உழைக்கவேண்டும். மிகவும் எளிதாக 1538 டன் அரிசியை வீணாக்கி இருக்கிறார்களே. இந்த அதிகாரிகளுக்கு சாகும்வரை அரிசியே கொடுக்கக்கூடாது. மேலும், சட்டசபை குழு ஏன் இத்தனை ஆண்டுகள் ஆய்வு செய்யவில்லை? எனவே,. சட்டசபை குழு உறுப்பினர்களுக்கும் சாகும்வரை அரிசியே கொடுக்கக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை