உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏற்ற இறக்கத்தில் கச்சா எண்ணெய் விலை

ஏற்ற இறக்கத்தில் கச்சா எண்ணெய் விலை

சிங்கப்பூர் : உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்திருப்பதாலும், ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நியூயார்க்கின் ஆகஸ்ட் மாத டெலிவரி கணக்கின்படி கச்சா பேரல் ஒன்றின் விலை ஒரு சதவீதம் குறைந்து 98.04 அமெரிக்க டாலர்களாக உள்ளது. அதே சமயம் பிரன்ட் நார்த் ஸீ பகுதியின் ஆகஸ்ட் மாத டெலிவரி கணக்கின்படி கச்சா எண்ணெய் பேரல் விலை 14 சதவீதம் அதிகரித்து 118.92 டாலர்களாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை