உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெங்களூர் நோக்கி சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்தது: 30 பேர் காயம்

பெங்களூர் நோக்கி சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்தது: 30 பேர் காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருக்கனஹள்ளி பகுதியில் ஆம்னி பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.மதுரையிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி 46 பயணிகளுடன் எஸ்.பி.எஸ்., என்ற தனியார் ஆம்னி பஸ் சென்றது. தருமபுரி அதியமான் கோட்டை முதல் கர்நாடக மாநிலம் நெரலூர் வரை புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருக்கனஹள்ளி பகுதியில் ஆம்னி பஸ் விபத்தில் சிக்கியது.டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி மறுகரையில் உள்ள தருமபுரி சாலையில் 20 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இந்த விபத்து இன்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ரங்ஸ்
ஆக 19, 2025 21:55

சாலை அமைப்பு மற்றும் வாகனத்தின் தன்மைக்கு தகுந்த வேக வரம்புக்குள் ஓட்ட வேண்டும். மீறும் போது கட்டுப்பாடு இழக்கும். ரிஸ்க் ரஸ்க் சாப்பிடற மாதிரி என்று பலர் அதிவேகமாக ஓட்டும் பழக்கம் உள்ளது. இதனால் பல சாலை விபத்துகள் ஏற்படுகிறது.


The Mechanic!!!
ஆக 19, 2025 16:05

நள்ளிரவு மற்றும் அதிகாலை பயணம் , ஆபத்தானது என்று ஒவ்வொரு விபத்து செய்தியிலும் போடுறீங்க !!! ஆனால் நடைமுறைக்கு ஒத்துவருமான்னு யோசிக்க கூட மாட்டீங்க !!! அப்படியே எல்லா பயணமும் பகலிலேயே இருந்தால் போக்குவரத்து நெரிசலை கொஞ்சம் யோசியுங்கள் , செய்திகளை நடைமுறைக்கு ஏற்றாற்போல் போடலாம் !!! உதாரணத்திற்கு சென்னையில் வேலை செய்யும் வெளியூர்கார்ர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விடுமுறையை பகலில் பயணம் செய்து சாலையிலேயே செலவிடலாம் !!