சென்னை : வரும் 24ம் தேதிக்குப் பிறகு சென்னைக்குள் வர தடை விதிப்புக்கு ஆம்னி பஸ் உரிமயாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பயணியருக்கான அனைத்து வசதிகளையும் செய்து தரும் வரை கோயம்பேடில் இருந்தே பேருந்துகள் புறப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=982hnh8i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரும் 24ம் தேதிக்கு பின் பயணியருடன் சென்னை நகருக்குள் வர ஆம்னி பஸ்களுக்கு அனுமதியில்லை. கிளாம்பாக்கம் புதிய நிலையத்தில் விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.அறிவுறுத்தல்
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் நிலையத்தில் தான் பயணியரை ஏற்றி, இறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதை மீறி செயல்படும் ஆம்னி பஸ்களின் உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையரகம்எச்சரித்துள்ளது. இது, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல், பொதுச்செயலர் மாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக சென்னையில் நேற்று அளித்த பேட்டி:கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களுக்காக 25 அலுவலக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தினமும் 1,000 பேருந்துகள் வரும் நிலையில், 100 பேருந்துகள் மட்டுமே நிறுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. முடிச்சூர் வரதராஜபுரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிலையம் கட்டி முடிக்க ஒன்பது மாதங்களாகும். அதுவரை பஸ்களை எங்கு நிறுத்த முடியும்.புதிய பஸ் நிலையத்திற்கு, அனைத்து வகையிலும் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் தற்போதைய நிலையில் அங்கு போதிய அடிப்படை வசதியில்லை. அங்கு இறக்கிவிடப்படும் பயணியருக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை. செங்குன்றம், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பஸ்களின் பராமரிப்பை நாங்கள் மேற்கொண்டு வரும் சூழலில், நகருக்குள் வரும்போது சில பயணியருடன் வருவதற்கு அனுமதிக்க வேண்டும். கொரோனா காலத்திற்கு பின், ஏராளமானோர் இந்த துறையை விட்டே விலகினர்.இப்படியிருக்கும் சூழலில் இதுபோன்ற உத்தரவால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை உரிமையாளர்கள் சந்திக்க நேரிடும். இதனை நம்பி இரண்டு லட்சம் பேர் உள்ளனர்.தடையில்லை
பகுதி, பகுதியாக கிளாம்பாக்கத்துக்கு மாற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், உடனடியாக மாற வேண்டுமென உத்தரவிடுகின்றனர்.ஆம்னி பஸ்கள் நகருக்குள் வந்து செல்ல தடையில்லை என உச்சநீதிமன்றமே தெரிவித்து உள்ளது. எனவே, கிளாம்பாக்கத்தைச் சென்றடைய அனைத்து போக்குவரத்து வசதிகள் வரும் வரை கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ்கள் புறப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் சென்று பயணியரை ஏற்றிச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.