உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுங்கச்சாவடி கட்டண உயர்வு; ஆம்னி பஸ் ஓனர்கள் எதிர்ப்பு

சுங்கச்சாவடி கட்டண உயர்வு; ஆம்னி பஸ் ஓனர்கள் எதிர்ப்பு

சென்னை: 'தமிழகத்தில் ஏப்ரல், 1 முதல், 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதை ரத்து செய்ய வேண்டும்' என, ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் வரும், 1ம் தேதி முதல், 40 சுங்கச்சாவடிகளில், 5 முதல் 25 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தும் முடிவு, அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து துறை, மேலும் பாதிக்கும். சுங்கச்சாவடி கட்டண உயர்வு, பொதுமக்களை பாதிக்கும். பொருட்கள் விலை ஏறும். எனவே, கட்டண உயர்வை, மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை தவிர்க்க வலியுறுத்த வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில், 12 சுங்கச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதை கருத்தில் வைத்து, கட்டண உயர்வை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் யுவராஜ் கூறுகையில், ''சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து, வானகரம் சுங்கச்சாவடியில் வரும் 1ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். மாநிலம் முழுதும் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில், முற்றுகை போராட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

J.Isaac
மார் 26, 2025 12:10

வாகனங்கள் அதிமாகிவிட்டதாவ், அடுத்த தெருவில் இருக்கும் கடைக்கு வாகனத்தில் செல்லுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அடுத்து வரும் காலங்களில் ஒவ்வொரு தெருவுக்கும் சுங்கச்சாவடிகள் அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதையும் வெட்டியாக வீட்டில் உட்கார்ந்து போனை தடவுகிற கூட்டம் ஆதரிக்கும்


rmr
மார் 26, 2025 11:21

டோல் இல்லாத சாலைகளும் வேணும். இவனுங்க டோல் வச்சிருக்கானுங்க பல எடத்துல சாலைகள் நன்றாக இல்ல. பல இடத்தில கிராஸ்ஸிங் பாலம் இப்போ தான் போடுறானுங்க, முழுமையா முடிக்காத ரோட்டுக்கு, அப்போ எதுக்கு காசு ?


l.ramachandran
மார் 26, 2025 09:17

இரண்டு நாள் கூவிட்டு அப்புறம் அடுத்த உயர்வுக்கு மறுபடியும் கூவனும். இதுதான் வாழ்க்கை .


நிக்கோல்தாம்சன்
மார் 26, 2025 07:31

ஒரு புறம் தவறான திசையில் வண்டி ஓட்டும் கட்சி கார கண்மணிகள், மற்றொருபுறம் மொபைலில் பேசியபடி தவறான லேனில் மெதுவாக வண்டி ஓட்டும் கனரக வாகனங்கள், இது இரண்டும் இல்லையென்றால் சாலை மோசமாக இருக்கும் , இந்த நிலையில் கட்டண உயர்வு


ராஜாராம்,நத்தம்
மார் 26, 2025 07:22

அப்பாவி மக்களிடம் அநியாயமாக டிக்கெட் வசூல் பண்றீங்கள்ள அப்படடீன்னா அதிகரித்த சுங்கவரியையும் கட்டித்தான் ஆக வேண்டும்.