| ADDED : பிப் 13, 2024 09:45 PM
பிப்ரவரி 14, 1964கரூர் மாவட்டம், வாங்கல் கிராமத்தில், 1881 பிப்ரவரி 8ல் பிறந்தவர் வி.டி.கிருஷ்ணமாச்சாரி.பள்ளிப் படிப்பை வாங்கல், பட்டம் மற்றும் சட்டப் படிப்புகளை சென்னை மாநிலக் கல்லுாரி, சட்டக் கல்லுாரிகளில் முடித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். ஐ.சி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, குஜராத் மாநிலம், பரோடா சமஸ்தானத்தின் திவானாக பதவி ஏற்றார்.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் சமஸ்தானத்தின் பிரதம அமைச்சராக பதவி வகித்தார். லண்டனில் நடந்த மூன்று வட்ட மேஜை மாநாடுகளிலும் பங்கேற்று, ஒருங்கிணைந்த இந்தியாவுடன் சமஸ்தானங்கள் இணைய வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.அரசியல் அமைப்பு நிர்ணய சபையிலும், ஜெய்ப்பூர் சமஸ்தானத்தின் சார்பில் பங்கேற்றதுடன், அதன் துணை தலைவராகவும் இருந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையை உருவாக்க உதவினார். அவரின் செயல்பாடுகளுக்காக பிரிட்டிஷ் அரசின் விருதையும் பெற்ற இவர், 1964ல், தன், 83வது வயதில் இதே நாளில் மறைந்தார்.இந்திய திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்தவர், மறைந்த தினம் இன்று!