உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ஆகஸ்ட் 4, 2008 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகில் உள்ள கேசவன் புதுாரில், சண்முகம் பிள்ளை - அருணாச்சல வடிவு தம்பதியின் மகனாக, 1929 ஆகஸ்ட் 19ல் பிறந்தவர் அகத்தியலிங்கம். இவர், நாகர்கோவிலில் உள்ள தென் திருவிதாங்கூர் ஹிந்து கல்லுாரியில், பி.எஸ்சி., கணிதம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், எம்.ஏ., தமிழ் படித்தார். கேரள பல்கலை, அமெரிக்காவின் இண்டி யானா பல்கலையில் முனைவர் பட்டங்களை பெற்றார். தென் திருவிதாங்கூர் ஹிந்து கல்லுாரி, டில்லி , அமெரிக்காவின் சிகாகோ பல்கலைகளில் பேராசிரியராகவும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மொழியியல் துறை இயக்குநராகவும் பணியாற்றினார். தஞ்சை, தமிழ் பல்கலையின் துணைவேந்தராக பதவியேற்று, ஆய்வறிஞர்களை உருவாக்கினார். இவர், 'திராவிட மொழிகள், சங்கத்தமிழ், உலக மொழிகள், தமிழ் மொழி அமைப்பியல், இந்தோ - ஆரிய மொழிகள், துணை வினைகள்' உள்ளிட்ட ஆய்வு நுால்களை தமிழிலும், ஒன்பது, ஆங்கில ஆய்வு நுால்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசின், 'திரு.வி.க., விருது' உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இவர், தன், 78வது வயதில், 2008ல், இதே நாளில் விபத்தில் மறைந்தார். குமரி மாவட்டம் தந்த தமிழறிஞரின் நினைவு தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை