உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாடு; ஒரே ரேஷன் பிற மாநிலத்தவர்கள் ஆர்வம்

ஒரே நாடு; ஒரே ரேஷன் பிற மாநிலத்தவர்கள் ஆர்வம்

சென்னை:ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் வசிக்கும் பிற மாநில கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். மத்திய அரசு, நாடு முழுதும் இடம்பெயரும் தொழிலாளர்கள் பயன் பெற, 'ஒரே நாடு; ஒரே ரேஷன்' திட்டத்தை துவக்கியது. இத்திட்டத்தில் தமிழகம், 2020 அக்டோபரில் இணைந்தது. இதனால், தமிழக ரேஷன் கார்டுதாரர்கள் தாங்கள் வசிக்கும் பிற மாநிலங்களிலும், தமிழகத்தில் வசிக்கும் பிற மாநில கார்டுதாரர்கள் தமிழக ரேஷன் கடைகளிலும் உணவுப் பொருட்கள் வாங்கலாம். பிற மாநில கார்டுதாரர்களின் விரல் ரேகை, தமிழக ரேஷன் கடைகளில் பதிவு செய்யப்பட்டு, கிலோ அரிசி 3 ரூபாய்க்கும்; கிலோ கோதுமை, 2 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமானம், ஹோட்டல் உள்ளிட்ட பணிகளில், பிற மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், ஒரே ரேஷன் திட்டத்தின்கீழ், தமிழகக் கடைகளில் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், 2020ல் பிற மாநிலங்களைச் சேர்ந்த, 52 பேர்; 2021ல், 1,773 பேர்; 2022ல், 6,892 பேர்; 2023ல், 10,400 பேர் என, பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. இந்தாண்டில் கடந்த மாதம் வரை, 6,300 பேர் வாங்கிஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை