மேலும் செய்திகள்
வெங்கடாஜலபதி அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்
22-Sep-2025
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவம் நடக்கிறது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் மூலவர் பெருமாள் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். இன்று (6ம் தேதி) பவுர்ணமி முன்னிட்டு திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெறுவது போல் சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று ஒரு நாள் ஏகதின பிரம்மோற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், 6:00 மணிக்கு தோமாலை சேவை, 6:10 முதல் 7:20 மணிவரை கொடி யேற்றம் நடக்கிறது. 8:00 மணிக்கு அம்சவாகன சேவை, 9:00 மணிக்கு சிம்ம வாகன சேவை, 10:00 மணிக்கு அனுமந்த் வாகன சேவை, 11:00 மணிக்கு சேஷவாகன சேவை, மாலை 4:00 மணிக்கு சூர்ணோற்சவம், 5:00 மணிக்கு குதிரை வாகன சேவை, 6:00 மணிக்கு திருத்தேர் உற்சவம், இரவு 7:00 மணிக்கு தீர்த்தவாரி, 7:30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது .
22-Sep-2025